Gnana Padalgal 82 · பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா! தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன தாயின் பெயரும் சதியென்ற நாமமும். 1 அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம். ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்; துன்பம் தீர்வது பெண்மையி னாலடா! சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம். 2 வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா! மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்; கலிய ழிப்பது பெண்க ளறமடா! கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம். 3 பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான் பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை! கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே காத லின்பத்தைக் காத்திடு வோமடா. 4 சக்தி யென்ற மதுவையுண் போமடா! தாளங் கொட்டித் திசைகள் அதிரவே, ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும் ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம். 5 உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்; உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்; உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா! ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே. 6 ‘போற்றி தாய்’ என்று தோழ் கொட்டி யாடுவீர் புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே; நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம் நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே. 7 ‘போற்றி தாய்’ என்று தாளங்கள் கொட்டடா! ‘போற்றி தாய்’என்று பொற்குழ லூதடா! காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே. 8 அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின் ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்; கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும் கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம். 9 —————
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா! தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன தாயின் பெயரும் சதியென்ற நாமமும். 1 அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம். ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்; துன்பம் தீர்வது பெண்மையி னாலடா! சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம். 2 வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா! மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்; கலிய ழிப்பது பெண்க ளறமடா! கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம். 3 பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான் பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை! கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே காத லின்பத்தைக் காத்திடு வோமடா. 4 சக்தி யென்ற மதுவையுண் போமடா! தாளங் கொட்டித் திசைகள் அதிரவே, ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும் ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம். 5 உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்; உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்; உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா! ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே. 6 'போற்றி தாய்' என்று தோழ் கொட்டி யாடுவீர் புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே; நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம் நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே. 7 'போற்றி தாய்' என்று தாளங்கள் கொட்டடா! 'போற்றி தாய்'என்று பொற்குழ லூதடா! காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே. 8 அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின் ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்; கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும் கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம். 9 ---------------
penmai vaazhkenru kooththitu voamataa! penmai velkenru kooththitu voamataa! thanmai inpamnar punniyanj saernthana thaayin peyarum sathiyenra naamamum. 1 anpu vaazhken ramaithiyil aatuvoam. aasaik kaathalaik kaikotti vaazhththuvoam; thunpam theervathu penmaiyi naalataa! soorap pillaikal thaayenru poarruvoam. 2 valimai saerppathu thaaymulaip paalataa! maananj saerkkum manaiviyin vaarththaikal; kaliya zhippathu penka laramataa! kaikal koaththuk kaliththunin raatuvoam. 3 penna raththinai aanmakkal veeranthaan paenu maayir pirakoru thaazhvillai! kannaik kaakkum irantimai poalavae kaatha linpaththaik kaaththitu voamataa. 4 sakthi yenra mathuvaiyun poamataa! thaalang kottith thisaikal athiravae, oaththi yalvathor paattum kuzhalkazhum oorvi yakkak kaliththunin raatuvoam. 5 uyiraik kaakkum,uyarinais saerththitum; uyirinuk kuyiraay inpa maakitum; uyiru numinthap penmai inithataa! oothu kompukal; aatu kalikontae. 6 'poarri thaay' enru thoazh kotti yaatuveer pukazhssi kooruveer kaathar kilikatkae; noorri rantu malaikalais saatuvoam nunni taippen noruththi paniyilae. 7 'poarri thaay' enru thaalangkal kottataa! 'poarri thaay'enru porkuzha loothataa! kaarri laeriyav vinnaiyunj saatuvoam kaathar penkal kataikkan paniyilae. 8 anna moottiya theyva manik kaiyin aanai kaattil analai vizhungkuvoam; kannath thaemuththam kontu kalippinum kaiyaith thallumpor kaikalaip paatuvoam. 9 ---------------