Deiva Padalgal 1 · வெண்பா
வெண்பா(சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா-அத்தனே(நின்)தனக்குக் காப்புரைப்பார்நின்மீது செய்யும் நூல்இன்றிதற்கும் காப்புநீ யேகலித்துறைநீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம்நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்வாயே திறவாத மெனத் திருந்துன் மலரடிக்குத்தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனேவிருத்தம்செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்வையந் தனையும் வெளியினையும்வானத்தையும்முன் படைத்தவனேஐயா!நான்மு கப்பிரமாயானை முகனே!வாணிதனைக்கையா லணைத்துக் காப்பவனேகமலா சனத்துக் கற்பகமேஅகவல்கற்பக விநாயகக் கடவுளேபோற்றிசிற்பர மோனத் தேவன் வாழ்கவாரண முகத்தான் மலர்த்தாள் வெல்கஆரண முகத்தான் அருட்பதம் வெல்கபடைப்புக் கிறையவன்பண்ணவர் நாயகன்இந்திர குருஎனதுஇதயத் தொளிர்வான்சந்திர மவுலித் தலைவன் மைந்தன்கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்குணமதிற் பலவாம்கூறக் கேளீர்உட்செவி திறக்கும்அகக்கண் ஒளிதரும்அக்கினி தோன்றும்ஆண்மை வலியுறும்திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்துக்கமென் றென்ணித் துயரிலா திங்குநிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்அச்சந் தீரும்அமுதம் விளையும்வித்தை வளரும்வேள்வி ஓங்கும்அமரத் தன்மை எய்தவும்இங்கு நாம் பெறலாம்இஃதுணர் வீரேவெண்பா(உண)ர்வீர்உணர்வீர்உலகத்தீர்!இங்குப்(புண)ர்வீர்அமரருறும் போக(ம்)-கண(ப)தியைப்(போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்காதலுடன் கஞ்சமலர்க் கால்)கலித்துறைகாலைப் பிடித்தேன் கணபதி!நின்பதங் கண்ணி லொற்றிநூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)வேலைத் தவறு நிகழாது நல்ல விகைள் செய்துன்கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனக்கேவிருத்தம்எனக்கு வேண்டும் வரங்களைஇசைபேன் கேளாய் கணபதிமனத்திற் சலன மில்லாமல்மதியில் இருளே தோன்றாமல்நினைக்கும் பொழுது நின்மவுனநிலைவந் திடநீ செயல்வேண்டும்கனகுஞ் செல்வம்நூறுவயதுஇவையும் தரநீ கடவாயேஅகவல்கடமை யாவனதன்னைக் கட்டுதல்பிறர்துயர் தீர்த்தல்பிறர் நலம் வேண்டுதல்வீநாயக தேவனாய்வேலுடைக் குமரனாய்நாரா யணனாய்நதிச்சடை முடியனாய்பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறிஅல்லா!யெஹோவா!எனத்தொழு தன்புறும்தேவருந் தானாய்திருமகள்பாரதிஉமையெனுந் தேவியர் உகந்தவான் பொருளாய்உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்இந்நான் கேயிப் பூமி லெவாக்கும்கடமை யெனப்படும்பயனிதில் நான்காம்அறம்பொருள்இன்பம்வீடெனு முறையேதன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்மணக்குள விநாயகா!வான்மறைத் தலைவாதனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்எல்லாப் பயன்களும் தாமே எய்தும்அசையா நெஞ்சம் அருள்வாய்உயிரெலாம்இன்புற் றிருக்க வேண்டிநி இருதாள்பணிவதே தொழிலெனக் கொண்டுகணபதி தேவா! வாழ்வேன் களித்தேவெண்பாகளியுற்று நின்று கடவுளே!இங்குப்பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய்-ஒளிபெற்றுக்கல்வி பலதேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்தொல்விக்கட் டெல்லாம் துறந்துகலித்துறைதுறந்தார் திறமை பெரிததி னும்பெரி தாகுமிங்குக்குறைந்தா ரைக்காத் தெளியார்க் குணவீந்து குலமகளும்அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்ட மெலாம்சிறந்தாளும் நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமேவிருந்தம்தவமே புரியும் வகைய றியேன்சலியா துறநெஞ் சறியாதுசிவமே நாடிப் பொழுதனைத்துந்தியங்கித் தியங்கி நிற்பேனைநவமா மணிகள் புனைந்தமுடிநாதா!கருணா லயனே!தத்துவமா கியதோர் பிரணவமேஅஞ்செல் என்று சொல்லதியேஅகவல்சொல்லினுக் கரியனாய்ச் சூழ்ச்சிக் கரியனாய்ப்பல்லுரு வாகிப் படர்ந்தவான் பொருளைஉள்ளுயி ராகி உலகங் காக்கும்சக்தியே தானாந் தனிச்சுடர்ப் பொருளைசக்தி குமாரனைச் சந்திர மவுலியைப்பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டிஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்திசக்தியைக் காக்குந் தந்திரம் பயின்றுயார்க்கும் எளியனாய்யார்க்கும் வலியனாய்யார்க்கும் அன்பனாய்யார்க்கும் இனியனாய்வாழ்ந்திடட விரும்பினேன்மனமே!நீயதைஆழ்ந்து கருதிஆய்ந் தாய்ந்து பலமுறைசூழ்ந்துதெளிந்துபின் சூழ்ந்தார்க் கெல்லாம்கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்துதேறித் தேறிநான் சித்திபெற் றிடவேநின்னா லியன்ற துணைபுரி வாயேல்பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன்மனமே!எனைநீ வாழ்வித் திடுவாய்வீணே யுழலுதல் வேண்டாசக்தி குமாரன் சரண்புகழ் வாயேவெண்பாபுகழ்வோம் கணபதிநின் பொற்கழலை நாளும்திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே-இகழ்வோமேபுல்லரக்கப் பாதகரின் பொய்யெலாம்ஈங்கிதுகாண்வல்லபைகோன் தந்த வரம்கலித்துறைவரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்கரவும் புலைமை விருப்பமும் ஐயமும காய்ந்தெறிந்து‘சிரமீது எங்கள் கணபதி தாள்மலர் சேர்த்தெமக்குத்தரமேகொல் வானவர்’எனறுளத் தேகளி சார்ந்ததுவேவிருத்தம்சார்ந்து நிற்பாய் எனதுளமேசலமும் கரவும் சஞ்சலமும்பேர்ந்து பரம சிவாநந்தப்பேற்றை நாடி நாள்தோறும்ஆர்ந்த வேதப் பொருள்காட்டும்ஐயன்சக்தி தலைப்பிள்ளைகூர்ந்த இடர்கள் போக்கிடுநங்கோமான் பாதக் குளிர்நிழலேஅகவல்நிழலினும் வெயிலினும் நேர்ந்தநற் றுணையாய்த்தழலினும் புனலினும் அபாயந் தவிர்த்துமண்ணினும் காற்றினும் பானினும் எனக்குப்பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான்மெளன வாயும் வரந்தரு கையும்உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான்ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்வேத முனிவர் விரிவாப் புகழ்ந்தபிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்தானே யாகிய தனிமுதற் கடவுள்யானென தற்றார் ஞானமே தானாய்ுக்தி நிலைக்க மலவித் தாவான்சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்ஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளைவாழும் பிள்ளைமணக்குளப் பிள்ளைவெள்ளாடை தரித்த விட்டுணு வென்றுசெப்பிய மந்திரத் தேவனைமுப்பொழு தேத்திப் பணிவது முறையேவெண்பாமுறையே நடப்பாய்முழுமூட நெஞ்சேஇறையேனும் வாடாய் இனிமேல்-கறையுண்டகண்டன் மகன்வேத காரணன் சக்திமகன்தொண்டருக் குண்டு துணைகலித்துறைதுணையே! எனதுயிருள்ளே யிருந்து கடர்விடுக்கும்மணியே! எனதுயிர் மன்னவனே! என் றன் வாழ்வினுக்கோர்அணியே! எனுள்ளத்தி லாரமு தே! என தற்புதமேஇணையே துனக்குரைபேன்கடைவானில் எழுஞ்சுடரேவிருத்தம்சுடரே போற்றி! கணத்ததேவர்துரையே போற்றி! எனக்கென்றும்இடரே யின்றிக் காத்திடுவாய்எண்ணாயிரங்கால் முறையிட்டேன்படர்வான் வெளியிற் பலகோடிகோடி கோடிப் பல்கோடிஇடறா தோடும் அண்டங்கள்இசைத்தாய்வாழி இறையவனேஅகவல்இறைவி இறைவன் இரண்டும்ஒன் றாகித்தாயாய்த் தந்தையாய்சக்தியும் சிவனுமாய்உள்ளொளி யாகி உலகெலாந் திகழும்பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்தேவா தேவா! சிவனே! கண்ணாவேலா! சாத்தா! விநாயகா! மாடாஇருளா! சூரியா! இந்துவே! சக்தியேவாணீ! காளீ! மாமக ளேயோஆணாய்ப் பெண்ணாய் அலியாய்உள்ளதுயாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமேவேதச் சுடரேமெய்யாங் கடவுளேஅபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்நோவு வேண்டேன்நூற் றாண்டு வேண்டினேன்அச்சம் வேண்டேன்அமைதி வேண்டினேன்உடைமை வேண்டேன்உன்துணை வேண்டினேன்வேண்டா தனைத்தையும் நீக்கிவேண்டிய தனைத்தையும் அருள்வதுன் கடனேவெண்பாகடமைதா னேது!கரிமுகனே! வையத்திடம்நு யருள்செய்தாய்எங்கள்-உடைமைகளும்இன்பங் களுமெல்லாம் ஈந்தாய்நீ யாங்களுனக்குஎன் புரிவோம் கைம்மா றியம்பு?கலித்துறைஇயம்பு மொழிகள் புகழ்மறை யாகும்எடுத்தவினைபயன்படும்தேவர் இருபோதும் வந்து பதந்தருவார்அயன்பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறும் மேன்மைகளேவிருத்தம்மேமைப் படுவாய் மனமே! கேள்விண்ணின் இடிமுன் விழுந்தாலும்பான்மை தவறி நடுங்காதேபயத் தாலேதும் பயனில்லையான்முன் னுரைத்தேன் கோடிமுறைஇன்னுங் கோடி மறைசொல்வேன்ஆன்மா வான கணபதியின்அருளுண்டு அச்சம் இல்லையேஅகவல்அச்ச மில்லை அமுங்குத லில்லைநடுங்குத லில்லை நாணுத லில்லைபாவ மில்லை பதுங்குத லில்லைஏது நேரினும் இடர்பட மாட்டோம்அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்கடல்பொங்கி எழுந்தாற் கலங்கமாட்டோம்யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்எங்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்வான முண்டுமாரி யுண்டுஞாயிறும் காற்றும் நல்ல நீரும்தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்உடலும் அறிவும் உயிரும் உளவேதின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்கேட்கப் பாட்டும்காணநல் லுலகும்களிதுரை செய்யக் கணபதி பெயரும்என்றுமிங் குளவாம்சலித்திடாய்ஏழைநெஞ்சே!வாழி!நேர்மையுடன் வாழிவஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோதஞ்ச முண்டு கொன்னேன்செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கேவெண்பாநமக்குத் தொழில்கவிதைநாட்டிற் குழைத்தல்இமைக்பொழுதுஞ் சோராதிருத்தல்-உமைக்கினியமைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்சிந்தையே! இன்மூன்றும் செய்கலித்துறைசெய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மையெலாம்ஐயத்தி லுந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னேபையத் தொழில் புரி நெஞ்சே!கணாதிபன் பக்திகொண்டேவிருத்தம்பக்தி யுடையார் காரியத்திற்பதறார் மிகுந்த பொறுமையுடன்வித்து முளைக்குந் தன்மைபோல்பெல்லச் செய்து பயனடைவார்சக்தி தொழிலே அனைத்துமெனிற்சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?வித்தைக் கிறவா!கணநாதாமேன்மைத் தொழிலிற் பணியெனையேஅகவல்எனைநீ காப்பாய்யாவுமாந் தெய்வமேபொறுத்தா ரன்றோ பூமி யாள்வார்?யாவும்நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல்செவ்விய நெறிஅதில் சிவநிலை பெறலாம்பொங்குதல் போக்கிப் பொறையெனக் கீவாய்மங்கள குணபதிமணக்குளக் கணபதிநெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்அகல்விழி உமையாள் ஆசை மகனேநாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்உளமெனும் நாட்டை ஒருபிழை யின்றிஆள்வதும்பேரொளி ஞாயிறே யனையசுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்நோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன்காத்தருள் புரிககற்பக விநாயகாகோத்தருள் புரிந்த குறிப்பரும் பொருளேஅஞ்குச பாசமும கொம்பும் தரித்தாய்எங்குல தேவா போற்றிசங்கரன் மகனே! தாளிணை போற்றிவெண்பாபோற்றி! கலியாணி புதல்வனே! பாட்டினிலேஆற்ற லருளி அடியேனைத்-தேற்றமுடன்வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்! வாணியருள்வீணையொலி என்நாவில் விண்டுகலித்துறைவிண்டுரை செங்குவள் கேளாய் புதுவை விநாயகரேதொண்டுள தன்னை பராசக்திக் கென்றுந் தொடர்ந்திடுவேன்பண்டைச் சிறுமைகள் போக்கி என்னாவிற் பழுத்தகவைத்தெண்தமிழ்ப் பாடல் ஒருகோடி மேலிடச் செய்குவையேவிருத்தம்செய்யாள் இனியாள் ஸ்ரீதேவிசெந்தா மரையிற் சேர்ந்திருப்பாள்கையா ளெனநின் றடியேன்செய்தொழில்கள் யாவும் கைகலந்துசெய்வாள்புகழ்சேர் வாணியுமென்னுன்ளே நின்று தீங்கவிதைபெய்வாள்சக்தி துணைபுரிவாள்பிள்ளாய்!நின்னைப் பேசிடிலேஅகவல்பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்மண்மீ துள்ள மக்கள்பறவைகள்விலங்குகள்பூச்சிகள்புற்பூண்டுமரங்கள்யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தேஇன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவேசெய்தல் வேண்டும்தேவ தேவாஞானா காசத்து நடுவே நின்றுநான்‘பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்விளங்குக!துன்பமும்மிடிமையம்நோவும்சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிசெலாம்இன்புற்று வாழ்க’என்பேன்!இதனை நீதிருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி‘அங்ஙனே யாகுக’ என்பாய்ஐயனேஇந்நாள்இப்பொழு தெனக்கிவ் வரத்தினைஅருள்வாய்ஆதி மூலமே! அநந்தசக்தி குமாரனே! சந்திர மவுலீநித்தியப் பொருளே! சரணம்சரணம் சரணம் சரணமிங் குனக்கேவெண்பாஉனக்கேஎன் ஆவியும் உள்ளமும் தந்தேன்மனக்கேதம் யாவினைம் மாற்றி-‘எனக்கேநீநீண்டபுகழ் வாணாள் நிறைசெல்வம் பேரழகுவேண்டுமட்டும் ஈவாய் விரைந்துகலித்துறைவிரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையாகுரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக்கொழுத்தியவன்அரங்கத் திலே திரு மாதுடன் பள்ளிகொண்டான்மருகாவரங்கள் பொழியும் முகிலே!என் னுள்ளத்து வாழ்பவனேவிருத்தம்வாழ்க புதுவை மணக்குடத்துவள்ளல் பாத மணிமலரேஆழ்க உள்ளம் சலனமிலாதுஅகண்ட வெளிக்கண் அன்பினையேசூழ்க! துயர்கள் தொலைந்திடுகதொலையா இன்பம் விளைந்திடுகவீழ்க கலியின் வலியெல்லாம்கிருத யுகந்தான் மேவுகவேஅகவல்மேவி மேவித் துயரில் வீழ்வாய்எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்பாவி நெஞ்சே! பார்மிசை நின்னைஇன்புறச் செய்வேன்எதற்குமினி அஞ்சேல்ஐயன் பிள்ளை(யார்)அருளாள்ல உனக்குநான்அபயமிங் களித்தேன்....நெஞ்(சே)நினக்குநான் உரைத்தன நிலைநிறுத்தி(டவே)தீயடைக் குதிப்பேன்கடலுள் வீழ்வேன்வென்விட முண்பேன்மேதினி யழிப்பேன்ஏதுஞ் செய்துனை இடரின் றிக் காப்பேன்மூட நெஞ்சே! முப்பது கோடிமுறையுனக் குரைத்தேன்இன்னும் மொழிவேன்தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதேஏது நிகழினும்‘நமக்கென்?’ என்றிருபராசக்தி யுளத்தின் படியுலகம் நிகழும்நமக்கேன் பொறுப்பு?’ நான் என்றோர் தனிப்பொருள்இல்லைநானெனும் எண்ணமே வெறும்பொய்"என்றான் புத்தன்இறைஞ்சுவோம் அவன்பதம்இனியெப் பொழுதும் உரைத்திடேன்இதை நீமறவா திருப்பாய்மடமை நெஞ்சேகவலைப் படுதலே கருநரகுஅம்மாகவலையற் றிருத்தலே முக்திசினொரு மகனிதை நினக்கருள் செய்கேவேவெண்பாசெய்கதவம்!செய்கதவம்!நெஞ்சே!தவம் செய்தால்எய்த விரும்பியதை எய்தலாம்-வையகத்ல்அன்பிற் சிறந்த தவமில்லைஅன்புடையார்இன்புற்று வாழ்தல் இயல்புகலித்துறைஇயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்செயலிங்கு சித்த விருப்பிப் பின்பற்றும்சீர்மிகவேபயிலு நல்லன்பை இயல்பெனக் கொள்ளுதிர்பாரிலுள்ளீர்முயலும் விகைள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலேவிருத்தம்மொய்க்குங் கவலைப் பகைபோக்கிமுன்னோன் ருளைத் துணையாக்கிஎய்க்கும் நெஞ்சை வலியுறுத்திஉடலை இரும்புக் கிணையாக்கிப்பொய்க்குங் கலியை நான்கொன்றுபூலோ கத்தார் கண்முன்னேமெய்க்குங் கிருத யுகத்தினையேகொணர்வேன்தெய்வ விதியிஃதேஅகவல்விதியே வாழி!விநாயகா வாழிபதியே வாழி! பரமா வாழிசிதைவினை நீக்கும் தெய்வமேபோற்றிபுதுவினை காட்டும் புண்ணியாபோற்றிமதியினை வளர்க்கும் மன்னேபோற்றிஇச்சையும் கிரியையும் ஞானமும் என்றாக்கும்மூல சக்தியின் முதல்வா போற்றிபிறைமதி சூடிய பெருமான் வாழிநிறைவினைச் சேர்க்கம் நிர்மலன் வாழிகாலம் மன்றையும் கடந்தான் வாழிசக்தி தேவி சரணம் வாழிவெற்றி வாழி! வீரம் வாழிபக்தி வாழி! பலபல காலமும்உண்மை வாழி! ஊக்கம் வாழிநல்ல குணங்களே நம்மிடை யமரர்பதங்களாம்கண்டீர்!பாரிடை மக்களேகிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்தவிரதம்நான் கொண்டனன்வெற்றிதருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே
venpaa (sakthi perum) paavaanar saarruporul yaatheninum siththiperas seyvaakku vallamaikkaa-aththanae! (nin)thanakkuk kaappuraippaar;ninmeethu seyyum nool inritharkum kaappunee yae. kaliththurai neeyae saranam ninatharu laesara nanjsaranam naayaen palapizhai seythu kalaiththunai naativanthaen vaayae thiravaatha menath thirunthun malaratikkuth theeyae nikarththoli veesun thamizhkkavi seykuvanae. viruththam seyyun thozhilun thozhilaekaan seerper ritanee arulsey vaay. vaiyan thanaiyum veliyinaiyum vaanaththaiyummun pataiththavanae! aiyaa!naanmu kappiramaa! yaanai mukanae!vaanithanaik kaiyaa lanaiththuk kaappavanae! kamalaa sanaththuk karpakamae! akaval karpaka vinaayakak katavulae,poarri! sirpara moanath thaevan vaazhka! vaarana mukaththaan malarththaal velka! aarana mukaththaan arutpatham velka! pataippuk kiraiyavan, pannavar naayakan inthira kuru,enathuithayath tholirvaan santhira mavulith thalaivan mainthan kanapathi thaalaik karuththitai vaippoam kunamathir palavaam;koorak kaeleer! utsevi thirakkum;akakkan olitharum; akkini thoanrum;aanmai valiyurum thikkelaam venru jeyakkoti naattalaam. katsevi thannaik kaiyilae yetukkalaam vitaththaiyum noavaiyum vempakai yathanaiyum thukkamen rennith thuyarilaa thingku nissalum vaazhnthu nilaiper roangkalaam assan theerum,amutham vilaiyum viththai valarum;vaelvi oangkum amarath thanmai eythavum ingku naam peralaam;ihthunar veerae. venpaa (una)rveer, unarveer,ulakaththeer!ingkup (puna)rveer,amararurum poaka(m)-kana(pa)thiyaip (poatha vativaakap poarrip paninthitumin! kaathalutan kanjsamalark kaal). kaliththurai kaalaip pitiththaen kanapathi!ninpathang kanni lorri noolaip palapala vaakas samaiththu notippozhu(thum) vaelaith thavaru nikazhaathu nalla vikail seythun koalai manamenum naattin niruththal kuriyenakkae. viruththam enakku vaentum varangkalai isaipaen kaelaay kanapathi! manaththir salana millaamal, mathiyil irulae thoanraamal, ninaikkum pozhuthu ninmavuna nilaivan thitanee seyalvaentum. kanakunj selvam,nooruvayathu ivaiyum tharanee katavaayae. akaval katamai yaavana; thannaik kattuthal pirarthuyar theerththal,pirar nalam vaentuthal veenaayaka thaevanaay, vaelutaik kumaranaay, naaraa yananaay, nathissatai mutiyanaay piranaat tiruppoar peyarpala koori, allaa!yehoavaa!enaththozhu thanpurum thaevarun thaanaay,thirumakal,paarathi, umaiyenun thaeviyar ukanthavaan porulaay, ulakelaang kaakkum oruvanaip poarruthal, innaan kaeyip poomi levaakkum katamai yenappatum;payanithil naankaam aram;porul,inpam,veetenu muraiyae, thannai yaalunj samarththenak karulvaay, manakkula vinaayakaa!vaanmaraith thalaivaa! thanaiththaan aalun thanmainaan perritil. ellaap payankalum thaamae eythum, asaiyaa nenjsam arulvaay; uyirelaam inpur rirukka vaentini iruthaal panivathae thozhilenak kontu kanapathi thaevaa! vaazhvaen kaliththae. venpaa kaliyurru ninru katavulae!ingkup pazhiyarru vaazhnthitakkan paarppaay-oliperruk kalvi palathaernthu katamaiyelaam nankaarrith tholvikkat tellaam thuranthu. kaliththurai thuranthaar thiramai perithathi numperi thaakumingkuk kurainthaa raikkaath theliyaark kunaveenthu kulamakalum aranthaangku makkalum neetoozhi vaazhkena anta melaam siranthaalum naathanaip poarritun thontar seyunthavamae. viruntham thavamae puriyum vakaiya riyaen, saliyaa thuranenj sariyaathu, sivamae naatip pozhuthanaiththun thiyangkith thiyangki nirpaenai navamaa manikal punainthamuti naathaa!karunaa layanae!thath thuvamaa kiyathoar piranavamae! anjsel enru sollathiyae akaval sollinuk kariyanaays soozhssik kariyanaayp palluru vaakip patarnthavaan porulai, ulluyi raaki ulakang kaakkum sakthiyae thaanaan thanissutarp porulai, sakthi kumaaranais santhira mavuliyaip paninthava nuruvilae paavanai naatti, oamenum porulai ulaththilae niruththi, sakthiyaik kaakkun thanthiram payinru yaarkkum eliyanaay, yaarkkum valiyanaay, yaarkkum anpanaay,yaarkkum iniyanaay, vaazhnthitata virumpinaen;manamae!neeyathai aazhnthu karuthiaayn thaaynthu palamurai soozhnthu, thelinthu, pin soozhnthaark kellaam koorik koorik kuraivarath thaernthu, thaerith thaerinaan siththiper ritavae. ninnaa liyanra thunaipuri vaayael, ponnaal unakkoru koayil punaivaen manamae!enainee vaazhvith thituvaay! veenae yuzhaluthal vaentaa, sakthi kumaaran saranpukazh vaayae! venpaa pukazhvoam kanapathinin porkazhalai naalum thikazhvoam perungkeerththi saernthae-ikazhvoamae pullarakkap paathakarin poyyelaam;eengkithukaan vallapaikoan thantha varam. kaliththurai varamae namakkithu kanteer kavalaiyum vanjsanaiyum karavum pulaimai viruppamum aiyamuma kaayntherinthu, ‘sirameethu engkal kanapathi thaalmalar saerththemakkuth tharamaekol vaanavar’enarulath thaekali saarnthathuvae viruththam saarnthu nirpaay enathulamae, salamum karavum sanjsalamum paernthu parama sivaananthap paerrai naati naalthoarum aarntha vaethap porulkaattum aiyan,sakthi thalaippillai, koorntha itarkal poakkitunang koamaan paathak kulirnizhalae akaval nizhalinum veyilinum naernthanar runaiyaayth thazhalinum punalinum apaayan thavirththu manninum kaarrinum paaninum enakkup pakaimai yonrinrip payanthavirth thaalvaan, melana vaayum varantharu kaiyum, utaiyanam perumaan unarvilae nirpaan, oamenum nilaiyil oliyaath thikazhvaan, vaetha munivar virivaap pukazhntha piruhas pathiyum piramanum yaavum thaanae yaakiya thanimuthar katavul, yaanena tharraar njaanamae thaanaay ுkthi nilaikka malavith thaavaan, saththenath thaththenas sathurmarai yaalar niththamum poarrum nirmalak katavul, aezhaiyark kellaam irangkum pillai, vaazhum pillai, manakkulap pillai, vellaatai thariththa vittunu venru seppiya manthirath thaevanai muppozhu thaeththip panivathu muraiyae. venpaa muraiyae natappaay, muzhumoota nenjsae! iraiyaenum vaataay inimael-karaiyunta kantan makanvaetha kaaranan sakthimakan thontaruk kuntu thunai. kaliththurai thunaiyae! enathuyirullae yirunthu katarvitukkum maniyae! enathuyir mannavanae! en ran vaazhvinukkoar aniyae! enullaththi laaramu thae! ena tharputhamae! inaiyae thunakkuraipaen, kataivaanil ezhunjsutarae! viruththam sutarae poarri! kanaththathaevar thuraiyae poarri! enakkenrum itarae yinrik kaaththituvaay, ennaayirangkaal muraiyittaen! patarvaan veliyir palakoati koati koatip palkoati itaraa thoatum antangkal isaiththaay, vaazhi iraiyavanae! akaval iraivi iraivan irantumon raakith thaayaayth thanthaiyaay, sakthiyum sivanumaay ulloli yaaki ulakelaan thikazhum paramporu laeyoa! paramporu laeyoa! aathi moolamae! anaiththaiyum kaakkum thaevaa thaevaa! sivanae! kannaa vaelaa! saaththaa! vinaayakaa! maataa! irulaa! sooriyaa! inthuvae! sakthiyae! vaanee! kaalee! maamaka laeyoa! aanaayp pennaay aliyaay, ullathu yaathumaay vilangkum iyarkai theyvamae! vaethas sutarae, meyyaang katavulae! apayam apayam apayam naan kaettaen noavu vaentaen, noor raantu vaentinaen, assam vaentaen, amaithi vaentinaen; utaimai vaentaen, unthunai vaentinaen vaentaa thanaiththaiyum neekki vaentiya thanaiththaiyum arulvathun katanae. venpaa katamaithaa naethu!karimukanae! vaiyath thitamnu yarulseythaay, engkal-utaimaikalum inpang kalumellaam eenthaaynee yaangkalunakku en purivoam kaimmaa riyampu? kaliththurai iyampu mozhikal pukazhmarai yaakum;etuththavinai payanpatum; thaevar irupoathum vanthu pathantharuvaar ayanpathi munnoan kanapathi sooriyan aanaimukan viyanpukazh paatip panivaar thamakkurum maenmaikalae. viruththam maemaip patuvaay manamae! kael vinnin itimun vizhunthaalum, paanmai thavari natungkaathae, payath thaalaethum payanillai yaanmun nuraiththaen koatimurai, innung koati maraisolvaen, aanmaa vaana kanapathiyin aruluntu assam illaiyae. akaval assa millai amungkutha lillai. natungkutha lillai naanutha lillai, paava millai pathungkutha lillai aethu naerinum itarpata maattoam antanj sitharinaal anjsa maattoam; katalpongki ezhunthaar kalangkamaattoam yaarkkum anjsoam etharkum anjsoam engkum anjsoam etharkum anjsoam vaana muntu, maari yuntu njaayirum kaarrum nalla neerum theeyum mannum thingkalum meenkalum utalum arivum uyirum ulavae thinnap porulum saernthitap pentum, kaetkap paattum, kaananal lulakum, kalithurai seyyak kanapathi peyarum enruming kulavaam; saliththitaay;aezhai nenjsae!vaazhi!naermaiyutan vaazhi! vanjsakak kavalaik kitangkotael mannoa! thanjsa muntu konnaen senjsutarth thaevan saevati namakkae. venpaa namakkuth thozhilkavithai, naattir kuzhaiththal imaikpozhuthunj soaraathiruththal-umaikkiniya mainthan kananaathan nangkutiyai vaazhvippaan sinthaiyae! inmoonrum sey. kaliththurai seyyung kavithai paraasakthi yaalae seyappatungkaan, vaiyaththaik kaappaval annai sivasakthi vanmaiyelaam aiyaththi lunthuri thaththilunj sinthi yazhivathennae! paiyath thozhil puri nenjsae!kanaathipan pakthikontae. viruththam pakthi yutaiyaar kaariyaththir patharaar mikuntha porumaiyutan viththu mulaikkun thanmaipoal pellas seythu payanataivaar sakthi thozhilae anaiththumenir saarntha namakkus sanjsalamaen? viththaik kiravaa!kananaathaa! maenmaith thozhilir paniyenaiyae. akaval enainee kaappaay, yaavumaan theyvamae! poruththaa ranroa poomi yaalvaar? yaavumnee yaayin anaiththaiyum poruththal sevviya neri, athil sivanilai peralaam pongkuthal poakkip poraiyenak keevaay; mangkala kunapathi;manakkulak kanapathi! nenjsak kamalaththu niraintharul purivaay akalvizhi umaiyaal aasai makanae! naattinaith thuyarinri nankamaith thituvathum, ulamenum naattai orupizhai yinri aalvathum,paeroli njaayirae yanaiya sutartharu mathiyotu thuyarinri vaazhthalum noakkamaak kontu ninpatham noakkinaen kaaththarul purika, karpaka vinaayakaa! koaththarul purintha kuripparum porulae! anjkusa paasamuma kompum thariththaay engkula thaevaa poarri! sangkaran makanae! thaalinai poarri! venpaa poarri! kaliyaani puthalvanae! paattinilae aarra laruli atiyaenaith-thaerramutan vaanipatham poarruviththu vaazhvippaay! vaaniyarul veenaiyoli ennaavil vintu kaliththurai vinturai sengkuval kaelaay puthuvai vinaayakarae! thontula thannai paraasakthik kenrun thotarnthituvaen pantais sirumaikal poakki ennaavir pazhuththakavaith thenthamizhp paatal orukoati maelitas seykuvaiyae. viruththam seyyaal iniyaal sreethaevi senthaa maraiyir saernthiruppaal, kaiyaa lenanin ratiyaensey thozhilkal yaavum kaikalanthu seyvaal;pukazhsaer vaaniyumen nunlae ninru theengkavithai peyvaal,sakthi thunaipurivaal pillaay!ninnaip paesitilae. akaval paesaap porulaip paesanaan thuninthaen kaetkaa varaththaik kaetkanaan thuninthaen manmee thulla makkal, paravaikal, vilangkukal, poossikal,purpoontu,marangkal yaavumen vinaiyaal itumpai theernthae, inpamur ranputan inangki vaazhnthitavae seythal vaentum, thaeva thaevaa! njaanaa kaasaththu natuvae ninrunaan ‘poomanta laththil anpum poraiyum vilangkuka!thunpamum,mitimaiyam,noavum. saavum neengkis saarnthapal luyiselaam inpurru vaazhka’enpaen!ithanai nee thirussevi kontu thiruvulam irangki, ‘angnganae yaakuka’ enpaay,aiyanae! innaal, ippozhu thenakkiv varaththinai arulvaay;aathi moolamae! anantha sakthi kumaaranae! santhira mavulee! niththiyap porulae! saranam saranam saranam saranaming kunakkae. venpaa unakkaeen aaviyum ullamum thanthaen manakkaetham yaavinaim maarri-‘enakkaenee, neentapukazh vaanaal niraiselvam paerazhaku vaentumattum eevaay virainthu. kaliththurai virainthun thiruvula menmee thirangkita vaentumaiyaa! kurangkai vituththup pakaivarin theevaikkozhuththiyavan arangkath thilae thiru maathutan pallikontaanmarukaa! varangkal pozhiyum mukilae!en nullaththu vaazhpavanae! viruththam vaazhka puthuvai manakkutaththu vallal paatha manimalarae! aazhka ullam salanamilaathu! akanta velikkan anpinaiyae soozhka! thuyarkal tholainthituka tholaiyaa inpam vilainthituka! veezhka kaliyin valiyellaam! kirutha yukanthaan maevukavae. akaval maevi maevith thuyaril veezhvaay, eththanai kooriyum vituthalaik kisaiyaay paavi nenjsae! paarmisai ninnai inpuras seyvaen;etharkumini anjsael aiyan pillai(yaar)arulaalla unakkunaan apayaming kaliththaen....nenj(sae) ninakkunaan uraiththana nilainiruththi(tavae) theeyataik kuthippaen,katalul veezhvaen, venvita munpaen;maethini yazhippaen aethunj seythunai itarin rik kaappaen; moota nenjsae! muppathu koati muraiyunak kuraiththaen,innum mozhivaen thalaiyiliti vizhunthaal sanjsalap pataathae aethu nikazhinum‘namakken?’ enriru paraasakthi yulaththin patiyulakam nikazhum namakkaen poruppu?’ naan enroar thanipporul illai;naanenum ennamae verumpoy" enraan puththan;irainjsuvoam avanpatham, iniyep pozhuthum uraiththitaen,ithai nee maravaa thiruppaay, matamai nenjsae! kavalaip patuthalae karunaraku, ammaa! kavalaiyar riruththalae mukthi sinoru makanithai ninakkarul seykaevae! venpaa seykathavam!seykathavam!nenjsae!thavam seythaal, eytha virumpiyathai eythalaam;-vaiyakathl anpir sirantha thavamillai;anputaiyaar inpurru vaazhthal iyalpu. kaliththurai iyalpu thavari viruppam vilaithal iyalvathanraam seyalingku siththa viruppip pinparrum;seermikavae payilu nallanpai iyalpenak kolluthirpaarilulleer! muyalum vikail sezhikkum vinaayakan moympinilae. viruththam moykkung kavalaip pakaipoakki, munnoan rulaith thunaiyaakki, eykkum nenjsai valiyuruththi, utalai irumpuk kinaiyaakkip poykkung kaliyai naankonru pooloa kaththaar kanmunnae, meykkung kirutha yukaththinaiyae konarvaen, theyva vithiyihthae akaval vithiyae vaazhi!vinaayakaa vaazhi! pathiyae vaazhi! paramaa vaazhi! sithaivinai neekkum theyvamae, poarri! puthuvinai kaattum punniyaa,poarri! mathiyinai valarkkum mannae,poarri! issaiyum kiriyaiyum njaanamum enraakkum moola sakthiyin muthalvaa poarri! piraimathi sootiya perumaan vaazhi! niraivinais saerkkam nirmalan vaazhi! kaalam manraiyum katanthaan vaazhi! sakthi thaevi saranam vaazhi! verri vaazhi! veeram vaazhi! pakthi vaazhi! palapala kaalamum unmai vaazhi! ookkam vaazhi! nalla kunangkalae nammitai yamarar pathangkalaam,kanteer!paaritai makkalae! kirutha yukaththinaik kaetinri niruththa virathamnaan kontanan;verri tharunjsutar vinaayakan thaalinai vaazhiyae!