பாடல் 2 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Deiva Padalgal 2 · பல்லவி

பல்லவிமுருகா!-முருகா!-முருகாசரணங்கள்1வருவாய் மயில்மீ தினிலேவடிவே லுடனே வருவாய்தருவாய் நலமும் தகவும் புகழும்தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)2அடியார் பலரிங் குளரேஅவரை விடுவித் தருள்வாய்முடியா மறையின் முடிவே!அசுரர்முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)3சுருதிப் பொருளேவருகதுணிவேகனலேவருககருதிக் கருதிக் கவலைப் படுவார்கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா)4அமரா வதிவாழ் வுறவேஅருள்வாய்!சரணம்சரணம்குமராபிணியா வையுமே சிதறக்குமுறும் சுடர்வே லவனேசரணம்! (முருகா)5அறிவா கியகோ யிலிலேஅருளா கியதாய் மடிமேல்பொறிவே லுடனே வளர்வாய்!அடியார்புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)6குருவே!பரமன் மகனேகுகையில் வளருங் கனலேதருவாய் தொழிலும் பயனும் அமரர்சமரா திபனே! சரணம்!சரணம்! (முருகா)

pallavi murukaa!-murukaa!-murukaa! saranangkal 1. varuvaay mayilmee thinilae vativae lutanae varuvaay! tharuvaay nalamum thakavum pukazhum thavamum thiramum thanamum kanamum (murukaa) 2. atiyaar palaring kularae avarai vituvith tharulvaay! mutiyaa maraiyin mutivae!asurar mutivae karuthum vativae lavanae! (murukaa) 3. suruthip porulae,varuka! thunivae,kanalae,varuka! karuthik karuthik kavalaip patuvaar kavalaik katalaik katiyum vativael. (murukaa) 4. amaraa vathivaazh vuravae arulvaay!saranam,saranam kumaraa,piniyaa vaiyumae sitharak kumurum sutarvae lavanae,saranam! (murukaa) 5. arivaa kiyakoa yililae arulaa kiyathaay matimael porivae lutanae valarvaay!atiyaar puthuvaazh vuravae puvimee tharulvaay (murukaa) 6. kuruvae!paraman makanae! kukaiyil valarung kanalae! tharuvaay thozhilum payanum amarar samaraa thipanae! saranam!saranam! (murukaa)