பாடல் 3 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Deiva Padalgal 3 · வில்லினை யொத்த புருவம் வளைத்தனை

வில்லினை யொத்த புருவம் வளைத்தனைவேலவா!-அங்கொர்வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானதுவேலவாசொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறுவள்ளியைக்-கண்டுசொக்கி மரமென நின்றனைதென்மலைக் காட்டிலேகல்லினை யொத்த வலிய மனங்கொண்டபாதகன்-சிங்கன்கண்ணிரண் டாயிரங் காக்கைக்கிரையிட்ட வேலவாபல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்வள்ளியை-ஒருபார்ப்பனக் கோலந் தரித்துக்கரந்தொட்ட வேலவாவெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்கடலினை-உடல்வெம்பி மறுகிக் கருகிப்புகைய வெருட்டினாய்கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச்செல்வத்தை-என்றும்கேடற்ற வாழ்வினை-இன்பவிளக்கை மருவினாய்கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வுகுலைத்தவன்-பானுகோபன் தலைபத்துக் கோடிதுணுக்குறக் கோபித்தாய்துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவனமானைப்போல்-தினைத்தோட்டத்திலேயொரு பெண்ணைமணங்கொண்ட வேலவாஆறு சுடர்முகங் கண்டுவிழிக்கின்பமாகுதே-கையில்அஞ்ச லெனுங்குறி கண்டுமகிழ்ச்சியுண் டாகுதேநீறு படக்கொடும் பாவம் பிணிபசியாவையும்-இங்குநீக்கி அடியரை நித்தமுங்காத்திடும் வேலவாகூறு படப்பல கோடி யவுணரின்கூட்டத்தைக்-கண்டுகொக்கரித் தண்டங் குலுங்கநகைத்திடுஞ் சேவலாய்மாறு படப்பல வேறு வடிவொடுதோன்றுவாள்-எங்கள்வைரனிவ பெற்ற பெருங்கனலே.வடி வேலவா

villinai yoththa puruvam valaiththanai vaelavaa!-angkor verpu norungkip potippoti yaanathu, vaelavaa! sollinaith thaenir kuzhaiththuraip paalsiru valliyaik-kantu sokki maramena ninranai thenmalaik kaattilae kallinai yoththa valiya manangkonta paathakan-singkan kanniran taayirang kaakkaik kiraiyitta vaelavaa! pallinaik kaattiven muththaip pazhiththitum valliyai-oru paarppanak koalan thariththuk karanthotta vaelavaa! vellalaik kaikalaik kotti muzhangkung katalinai-utal vempi marukik karukip pukaiya veruttinaay. killai mozhissiru valli yenumpeyars selvaththai-enrum kaetarra vaazhvinai-inpa vilakkai maruvinaay. kollai kontae amaraavathi vaazhvu kulaiththavan-paanu koapan thalaipaththuk koati thunukkurak koapiththaay. thullik kulaavith thiriyunj siruvana maanaippoal-thinaith thoattaththilaeyoru pennai manangkonta vaelavaa! aaru sutarmukang kantuvizhikkinpa maakuthae;-kaiyil anjsa lenungkuri kantu makizhssiyun taakuthae, neeru patakkotum paavam pinipasi yaavaiyum-ingku neekki atiyarai niththamung kaaththitum vaelavaa! kooru patappala koati yavunarin koottaththaik-kantu kokkarith thantang kulungka nakaiththitunj saevalaay! maaru patappala vaeru vativotu thoanruvaal-engkal vairaniva perra perungkana lae.vati vaelavaa!