Deiva Padalgal 67 · கனவென்ன கனவே-என்தன்
(ஓர் கனவு)கனவென்ன கனவே-என்தன்கண்துயி லாதுநனவினிலே யுற்ற (கன)கானகம் கண்டேன்-அடர்கானகங் கண்டேன்-உச்சிவானகத்தே வட்ட மதியொளி கண்டேன். (கன)பொற்றிருக் குன்றம்-அங்கொர்பொற்றிருக் குன்றம்-அதைச்சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும் (கன)புத்த தரிசனம்குன்றத்தின் மீதே-அந்தக்குன்றத்தின் மீதே-தனிநின்றதோர் ஆல நெடுமரங் கண்டேன். (கன)பொன்மரத் தின்கீழ்-அந்தப்பொன்மரத் தின்கீழ்-வெறுஞ்சின்மய மானதோர் தேவன் இருந்தனன். (கன)புத்த பகவன்-எங்கள்புத்த பகவன்-அவன்சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். (கன)காந்தியைப் பார்த்தேன்-அவன்காந்தியைப் பார்த்தேன்-உபசாந்தியில் மூழ்கித் ததும்பிக் குளித்தனன். (கன)ஈதுநல் விந்தை!-என்னைஈதுநல் விந்தை!-புத்தன்சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன். (கன)பாய்ந்ததங் கொளியே-பின்னும்பாய்ந்ததங் கொளியே-அருள்தேய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன)கிருஷ்ணார்ஜுன தரிசனம்குன்றத்தின் மீதே-அந்தக்குன்றத்தின் மீதே-தனிநின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன் (கன)தேரின்முன் பாகன்-மணித்தேரின்முன் பாகன்-அவன்சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன)ஓமென்ற மொழியும்-அவன்ஓமென்ற மொழியும்-நீலக்காமன்தன் உருவும்அவ் வீமனதன் திறலும். (கன)அருள் பொங்கும் விழியும்-தெய்வஅருள் பொங்கும் விழியும்-காணில்இருள் பொங்கு நெஞ்சினர் வெருள்பொங்குந் திகிரியும். (கன)கண்ணனைக் கண்டேன்-எங்கள்கண்ணனைக் கண்டேன்-மணிவண்ணனை ஞான மலையினைக் கண்டேன். (கன)சேனைகள் தோன்றும்-வெள்ளச்சேனைகள் தோன்றும்-பரியானையுந் தேரும் அளவில் தோன்றும். (கன)கண்ணன்நற் றேரில்-நீலக்கண்ணன்நற் றேரில்-மிகஎண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன)விசையன்கொ லிவனே!-விறல்விசையன்கொ லிவனே!-நனிஇசையும் நன்கிசையும் இங்கிவனுக் கிந்நாமம் (கன)வீரிய வடிவம்!-என்னவீரிய வடிவம்!-இந்தஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை! (கன)பெற்றதன் பேறே-செவிபெற்றதன் பேறே-அந்தக்கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன். (கன)“வெற்றியை வேண்டேன்-ஜய“வெற்றியை வேண்டேன்-உயிர்அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (கன)சுற்றங் கொல்வேனோ?-என்தன்சுற்றங் கொல்வேனோ?-கிளைஅற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ?” (கன)மிஞ்சிய அருளால்-மிதமிஞ்சிய அருளால்-அந்தவெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன)இம்மொழி கேட்டான்-கண்ணன்இம்மொழி கேட்டான்-ஐயன்செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன)வில்லினை யெடடா!-கையில்வில்லினை யெடடா!-அந்தப்புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா! (வில்)வாடி நில்லாதே-மனம்வாடி நில்லாதே-வெறும்பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்)ஒன்றுள துண்மை-என்றும்ஒன்றுள துண்மை-அதைக்கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது. (வில்)துன்பமு மில்லை-கொடுந்துன்பமு மில்லை-அதில்இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை. (வில்)படைகளுந் தீண்டா-அதைப்படைகளுந் தீண்டா-அனல்கடவு மொண்ணாது புனல்நனை யாது. (வில்)செய்தலுன் கடனே-அறஞ்செய்தலுன் கடனே-அதில்எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே. (வில்)
(oar kanavu) kanavenna kanavae-enthan kanthuyi laathunanavinilae yurra (kana) kaanakam kantaen-atar kaanakang kantaen-ussi vaanakaththae vatta mathiyoli kantaen. (kana) porriruk kunram-angkor porriruk kunram-athais surri yirukkum sunaikalum poykaiyum (kana) puththa tharisanam kunraththin meethae-anthak kunraththin meethae-thani ninrathoar aala netumarang kantaen. (kana) ponmarath thinkeezh-anthap ponmarath thinkeezh-verunj sinmaya maanathoar thaevan irunthanan. (kana) puththa pakavan-engkal puththa pakavan-avan suththameynj njaanas sutarmukang kantaen. (kana) kaanthiyaip paarththaen-avan kaanthiyaip paarththaen-upa saanthiyil moozhkith thathumpik kuliththanan. (kana) eethunal vinthai!-ennai! eethunal vinthai!-puththan soathi marainthirul thunnitak kantanan. (kana) paaynthathang koliyae;-pinnum paaynthathang koliyae;-arul thaeyntha thenmaeni silirththitak kantaen. (kana) kirushnaarjuna tharisanam kunraththin meethae-anthak kunraththin meethae-thani ninra porraerum parikalum kantaen (kana) thaerinmun paakan-manith thaerinmun paakan-avan seerinaik kantu thikaiththunin raeninthak (kana) oamenra mozhiyum-avan oamenra mozhiyum-neelak kaamanthan uruvum,av veemanathan thiralum. (kana) arul pongkum vizhiyum-theyva arul pongkum vizhiyum-kaanil irul pongku nenjsinar verul pongkun thikiriyum. (kana) kannanaik kantaen-engkal kannanaik kantaen-mani vannanai njaana malaiyinaik kantaen. (kana) saenaikal thoanrum-vellas saenaikal thoanrum-pari yaanaiyun thaerum alavil thoanrum. (kana) kannannar raeril-neelak kannannar raeril-mika ennayarn thaanor ilainjanaik kantaen. (kana) visaiyanko livanae!-viral visaiyanko livanae!-nani isaiyum nankisaiyum ingkivanuk kinnaamam (kana) veeriya vativam!-enna veeriya vativam!-intha aariyan nenjsam ayarnthathen vinthai! (kana) perrathan paerae-sevi perrathan paerae-anthak korravan sorkal seviyurak kontaen. (kana) “verriyai vaentaen;-jaya “verriyai vaentaen;-uyir arritu maenum avarthamaith theentaen. (kana) surrang kolvaenoa?-enthan surrang kolvaenoa?-kilai arrapin seyyum arasumoar arasoa?” (kana) minjsiya arulaal-mitha minjsiya arulaal-antha venjsilai veeran palasol viriththaan. (kana) immozhi kaettaan-kannan immozhi kaettaan-aiyan semmalar vathanaththir sirunakai pooththaan. (kana) villinai yetataa!-kaiyil villinai yetataa!-anthap pulliyar koottaththaip poozhthi seythitataa! (vil) vaati nillaathae;-manam vaati nillaathae;-verum paetiyar njaanap pitharral sollaathae. (vil) onrula thunmai-enrum onrula thunmai-athaik konri tonaathu kuraiththa lonnaathu. (vil) thunpamu millai-kotun thunpamu millai-athil inpamu millai pirappirap pillai. (vil) pataikalun theentaa-athaip pataikalun theentaa-anal katavu monnaathu punalnanai yaathu. (vil) seythalun katanae-aranj seythalun katanae-athil eythurum vilaivinil ennam vaikkaathae. (vil)