பாடல் 68 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்
Deiva Padalgal 68 · சுருதி யின்கண் முனிவரும் பின்னே
சுருதி யின்கண் முனிவரும் பின்னேதூமொழிப்புல வோர் பலர் தாமும்பெரிது நின்தன் பெருமையென் றேத்தும்பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்பரிதி யே! பொருள் யாவிற்கும் முதலேபானுவே! பொன்செய் பேரொளித் திரளேகருதி நின்னை வணங்கிட வந்தேன்கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றேவேதம் பாடிய சோதியைக் கண்டுவேள்வி பாடல்கள் பாடுதற் குற்றேன்நாத வார்கட லின்னொலி யோடுநற்ற மிழ்ச்சொல இசையையுஞ் சேர்ப்பேன்காத மாயிரம் ஓர்கணத் துள்ளேகடுகி யோடும் கதிரினம் பாடிஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே
suruthi yinkan munivarum pinnae thoomozhippula voar palar thaamum perithu ninthan perumaiyen raeththum perri kantunai vaazhththita vanthaen parithi yae! porul yaavirkum muthalae! paanuvae! ponsey paerolith thiralae! karuthi ninnai vanangkita vanthaen kathirkol vaanmukam kaattuthi sarrae. vaetham paatiya soathiyaik kantu vaelvi paatalkal paatuthar kurraen naatha vaarkata linnoli yoatu narra mizhssola isaiyaiyunj saerppaen kaatha maayiram oarkanath thullae katuki yoatum kathirinam paati aatha vaa! ninai vaazhththita vanthaen. anikol vaanmukam kaattuthi sarrae.