பாடல் 40 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Deiva Padalgal 40 · தேடியுனைச் சரணடைந்தேன்

தேடியுனைச் சரணடைந்தேன்தேச முத்து மாரிகேடதனை நீக்கிடுவாய்கேட்டவரந் தருவாய்பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்கோடிநலஞ் செய்திடுவாய்குறைகளெல்லாந் தீர்ப்பாய்எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவிஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்சக்தி யென்று நேர மெல்லாந் தமிழ்க் கவிதை பாடிபக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும்யாதானுந் தொழில் புரிவோம்யாதுமவள் தொழிலாம்துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்இன்பமே வேண்டி நிற்போம்யாவுமவள் தருவாள்நம்பினார் கெடுவ தில்லைநான்கு மறைத் தீர்ப்புஅம்பி கையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்

thaetiyunais saranatainthaen,thaesa muththu maari! kaetathanai neekkituvaay, kaettavaran tharuvaay paatiyunais saranatainthaen paasamellaang kalaivaay koatinalanj seythituvaay,kuraikalellaan theerppaay eppozhuthum kavalaiyilae inangki nirpaan paavi oppiyuna thaevalseyvaen unatharulaal vaazhvaen sakthi yenru naera mellaan thamizhk kavithai paati, pakthiyutan poarri ninraal payamanaiththun theerum yaathaanun thozhil purivoam;yaathumaval thozhi laam thunpamae iyarkaiyenum sollaimaran thituvoam inpamae vaenti nirpoam;yaavumaval tharuvaal nampinaar ketuva thillai;naanku maraith theerppu ampi kaiyais saran pukunthaal athikavaram peralaam.