பாடல் 33 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்
Gnana Padalgal 33 · கடமை புரிவா ரின்புறுவார் என்னும் பண்டைக் கதை பேணோம்; கடமை யறிவோம் தொழிலறியோம்; கட்டென் பதனை வெட்டென் போம்; மடமை,சிறுமை,துன்பம்,பொய், வருத்தம்,நோவு,மற்றிவை போல் கடமை நினைவுந் தொலைத் திங்கு களியுற் றென்றும் வாழ்குவமே. ——————
கடமை புரிவா ரின்புறுவார் என்னும் பண்டைக் கதை பேணோம்; கடமை யறிவோம் தொழிலறியோம்; கட்டென் பதனை வெட்டென் போம்; மடமை,சிறுமை,துன்பம்,பொய், வருத்தம்,நோவு,மற்றிவை போல் கடமை நினைவுந் தொலைத் திங்கு களியுற் றென்றும் வாழ்குவமே. ------------------
katamai purivaa rinpuruvaar ennum pantaik kathai paenoam; katamai yarivoam thozhilariyoam; katten pathanai vetten poam; matamai,sirumai,thunpam,poy, varuththam,noavu,marrivai poal katamai ninaivun tholaith thingku kaliyur renrum vaazhkuvamae. ------------------