Verse 96 · Gnana Padalgal · Subramaniya Bharathiyar

Gnana Padalgal 96 · குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது; சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது; சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ! வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு.       1 தரித்திரம் போகுது;செல்வம் வருகுது; படிப்பு வளருது;பாவம் தொலையுது; படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால், போவான்,போவான்,ஐயோவென்று போவான்!       2 வேத புரத்திலே வியாபாரம் பெருகுது; தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான். சாத்திரம் வளருது;சூத்திரம் தெரியுது; யந்திரம் பெருகுது;தந்திரம் வளருது; மந்திர மெல்லாம் வளருது,வளருது;       3 குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; சொல்லடி,சொல்லடி,மலையாள பகவதீ! அந்தரி,வீரி,சண்டிகை,சூலி குடுகுடு குடுகுடு       4 குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது; தொப்பை சுருங்குது,சுறுசுறுப்பு விளையுது: எட்டு லச்சுமியும் ஏறி வளருது; சாத்திரம் வளருது,சாதி குறையுது; நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது; பழைய பயித்தியம் படீலென்று தெளியுது; வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது; சொல்லடி சக்தி,மலையாள் பகவதி; தர்மம் பெருகுது,தர்மம் பெருகுது. 5 ———–

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது; சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது; சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ! வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு.       1 தரித்திரம் போகுது;செல்வம் வருகுது; படிப்பு வளருது;பாவம் தொலையுது; படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால், போவான்,போவான்,ஐயோவென்று போவான்!       2 வேத புரத்திலே வியாபாரம் பெருகுது; தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான். சாத்திரம் வளருது;சூத்திரம் தெரியுது; யந்திரம் பெருகுது;தந்திரம் வளருது; மந்திர மெல்லாம் வளருது,வளருது;       3 குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; சொல்லடி,சொல்லடி,மலையாள பகவதீ! அந்தரி,வீரி,சண்டிகை,சூலி குடுகுடு குடுகுடு       4 குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது; தொப்பை சுருங்குது,சுறுசுறுப்பு விளையுது: எட்டு லச்சுமியும் ஏறி வளருது; சாத்திரம் வளருது,சாதி குறையுது; நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது; பழைய பயித்தியம் படீலென்று தெளியுது; வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது; சொல்லடி சக்தி,மலையாள் பகவதி; தர்மம் பெருகுது,தர்மம் பெருகுது. 5 -----------

kutukutu kutukutu kutukutu kutukutu kutukutu; nalla kaalam varukuthu;nalla kaalam varukuthu; saathikal saeruthu;santaikal tholaiyuthu; sollati,sollati,sakthi,maakaalee! vaethapurath thaarukku nalla kuri sollu.       1 thariththiram poakuthu;selvam varukuthu; patippu valaruthu;paavam tholaiyuthu; patissavan soothum paavamum panninaal, poavaan,poavaan,aiyoavenru poavaan!       2 vaetha puraththilae viyaapaaram perukuthu; thozhil perukuthu;thozhilaali vaazhvaan. saaththiram valaruthu;sooththiram theriyuthu; yanthiram perukuthu;thanthiram valaruthu; manthira mellaam valaruthu,valaruthu;       3 kutukutu kutukutu kutukutu kutukutu; sollati,sollati,malaiyaala pakavathee! anthari,veeri,santikai,sooli kutukutu kutukutu       4 kutukutu kutukutu kutukutu kutukutu; saamimaark kellaam thairiyam valaruthu; thoppai surungkuthu,surusuruppu vilaiyuthu: ettu lassumiyum aeri valaruthu; saaththiram valaruthu,saathi kuraiyuthu; naeththiram thirakkuthu,niyaayam theriyuthu; pazhaiya payiththiyam pateelenru theliyuthu; veeram varukuthu,maenmai kitaikkuthu; sollati sakthi,malaiyaal pakavathi; tharmam perukuthu,tharmam perukuthu. 5 -----------