பாடல் 17 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Deiva Padalgal 17 · நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்நிறைந்த சுடர்மணிப் பூண்பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்இவள்பார்வைக்கு நேர்பெருந்தீவஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றிவையக மாந்தரெல் லாம்தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்சக்திஓம்சக்திஓம்சக்திஓம்"நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்திநலத்தை நமக்கிழைப் பாள்அல்லது நீங்கும்"என் றேயுலகேழும்அறைந்திடு வாய் முர சேசொல்லத் தகுந்த பொருளன்று காண்!இங்குசொல்லு மவர்தமை யேஅல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்ஓம்சக்திஓம்சக்திஓம்நம்புவ தேவழி யென்ற மறையதன்னைநாமின்று நம்பிவிட் டோம்கும்பிட்டெந்நேரமும்"சக்தி"யென் றாலுனைக்கும்பிடு வேன்மன மேஅம்புக்கு தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்அச்ச மில்லாத படிஉம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்ஓம்சக்திஓம்சக்திஓம்பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடுபோற்றி உனக்கிசைத் தோம்அன்னை பராசக்தி என்றுரைத் தோம்தளைஅத்தனை யுங்களைந் தோம்சொன்ன படிக்கு நடந்திடு வாய்மனமே தொழில் வேறில்லைகாண்இன்னும தேயுரைப் போம்சக்தி ஓம் சக்திஓம்சக்திஓம்சக்திஓம்வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருளாக விளங்கிடு வாய்தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொருவிண்ணப்பஞ் செய்திடு வேன்எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றிஇராதென்றன் நாவினி லேவெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல்சக்திவேல்சக்தி வேல்சக்தி வேல்

nenjsukku neethiyum thoalukku vaalum niraintha sutarmanip poon, panjsukku naerpala thunpangkalaam,ival paarvaikku naerperunthee vanjsanai yinrip pakaiyinris soothinri vaiyaka maantharel laam, thanjsamen raeyuraip peeraval paer,sakthi oamsakthi, oamsakthi, oam. "nallathun theeyathunj seythitum sakthi nalaththai namakkizhaip paal allathu neengkum"en raeyulakaezhum arainthitu vaay mura sae! sollath thakuntha porulanru kaan!ingku sollu mavarthamai yae, allal ketuththama rarkkinai yaakkitum oamsakthi, oamsakthi, oam. nampuva thaevazhi yenra maraiyathannai naaminru nampivit toam kumpittennaeramum"sakthi"yen raalunaik kumpitu vaen,mana mae! ampukku theekkum vitaththukkum noavukkum assa millaatha pati umparkkum imparkkum vaazhvu tharumpatham oamsakthi, oamsakthi, oam. ponnaip pozhinthitu minnai valarththitu, poarri unakkisaith thoam annai paraasakthi enruraith thoam;thalai aththanai yungkalain thoam sonna patikku natanthitu vaay, mana mae thozhil vaerillai,kaan innuma thaeyuraip poam,sakthi oam sakthi, oamsakthi, oamsakthi, oam. vellai malarmisai vaethak karupporu laaka vilangkitu vaay! thellu kalaiththamizh vaani! ninakkoru vinnappanj seythitu vaen ellath thanaip pozhu thumpaya ninri iraathenran naavini lae vella menappozhi vaaysakthi vael, sakthi vael, sakthi vael,sakthi vael!