பாடல் 9 · ஞானப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Gnana Padalgal 9 · மனதி லுறுதி வேண்டும்,       வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்,       நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்,       கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும்,       தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும்,       காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்,       பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும்,       வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும்.       ஓம் ஓம் ஓம் ஓம். —————-

மனதி லுறுதி வேண்டும்,       வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்,       நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்,       கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும்,       தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும்,       காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்,       பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும்,       வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும்.       ஓம் ஓம் ஓம் ஓம். ----------------

manathi luruthi vaentum,       vaakkini laeyinimai vaentum; ninaivu nallathu vaentum,       nerungkina porul kaippata vaentum; kanavu meyppata vaentum,       kaivasamaavathu viraivil vaentum; thanamum inpamum vaentum,       tharaniyilae perumai vaentum. kan thiranthita vaentum,       kaariyaththi luruthi vaentum; pen vituthalai vaentum,       periya katavul kaakka vaentum, man payanura vaentum,       vaanakamingku thenpata vaentum; unmai ninrita vaentum.       oam oam oam oam. ----------------