பாடல் 20 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Deiva Padalgal 20 · துன்ப மிலாத நிலையே சக்தி

துன்ப மிலாத நிலையே சக்திதூக்க மிலாக்கண் விழிப்பே சக்திஅன்பு கனிந்த கனிவே சக்திஆண்மை நிறைந்த நிறைவே சக்திஇன்ப முதிர்ந்த முதிர்வே சக்திஎண்ணத் திருக்கும் எரியயே சக்திமுன்புநிற் கின்ற தொழிலே சக்திமுக்தி நிலையின் முடிவே சக்திசோம்பர் கெடுக்கும் துணிவே சக்திசொல்லில் விளங்கும் சுடரே சக்திதீம்பழந் தன்னில் சுவையே சக்திதெய்வத்தை எண்ணும் நினைவே சக்திபாம்பை அடிக்கும் படையே சக்திபாட்டினில் வந்த களியே சக்திசாம்பரைப் பூசி மலைமிசை வாழும்சங்கரன் அன்புத் தழலே சக்திவாழ்வு பெருக்கும் மமதியே சக்திமாநிலம் காக்கும் மதியே சக்திதாழ்வு தடுக்குஞ் சதிரே சக்திசஞ்சலம் நீக்குந் தவமே சக்திவீழ்வு தடுக்கும் விறலே சக்திவிண்ணை யளக்கும் விரிவே சக்திஊழ்வினை நீக்கும் உயர்வே சக்திஉள்ளத் தொளிரும் விளக்கே சக்தி

thunpa milaatha nilaiyae sakthi, thookka milaakkan vizhippae sakthi anpu kanintha kanivae sakthi, aanmai niraintha niraivae sakthi inpa muthirntha muthirvae sakthi, ennath thirukkum eriyayae sakthi, munpunir kinra thozhilae sakthi, mukthi nilaiyin mutivae sakthi. soampar ketukkum thunivae sakthi, sollil vilangkum sutarae sakthi theempazhan thannil suvaiyae sakthi, theyvaththai ennum ninaivae sakthi paampai atikkum pataiyae sakthi paattinil vantha kaliyae sakthi saamparaip poosi malaimisai vaazhum sangkaran anputh thazhalae sakthi. vaazhvu perukkum mamathiyae sakthi, maanilam kaakkum mathiyae sakthi thaazhvu thatukkunj sathirae sakthi, sanjsalam neekkun thavamae sakthi, veezhvu thatukkum viralae sakthi, vinnai yalakkum virivae sakthi oozhvinai neekkum uyarvae sakthi, ullath tholirum vilakkae sakthi.