Deiva Padalgal 37 · காவடிச் சிந்து
காவடிச் சிந்துகாலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீதுகாளிசக்தி யென்றபெயர் கொண்டு --ரீங்காரமிட் டுலவுமொரு வண்டு -- தழல்காலும்விழி நீலவன்ன மூல அத்து வாக்களெனும்கால்களா றுடையதெனக் கண்டு -- மறைகாணுமுனி வோருரைத்தார் பண்டுமேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகிவிண்ணுமண்ணு மானசக்தி வெள்ளம் -- இந்தவிந்தையெல்லா மாங்கது செய் கள்ளம் -- பழவேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்தவீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம் -- ஆகவேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை -- இதைஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை -- அவள்ஆதியா யநாதியா யகண்டவறி வாவளுன்றன்அறிவுமவள் மேனியிலோர் சைகை -- அவள்ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கைஇன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்இஃதெலா மவள்புரியும் மாயை -- அவள்ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை -- எனில்எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர் நித்தம்எய்துவார்மெய்ஞ் ஞானமெனுந் தீயை -- எரித்துஎற்றுவாரிந் நானெனும் பொய்ப் பேயைஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்அங்குமிங்கு மெங்குமுள வாகும் -- ஒன்றேயாகினா லுலகனைத்தும் சாகும் -- அவையன்றியோர் பொருளுமில்லைஅன்றியொன்று மில்லையிதைஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் -- இந்தஅறிவுதான் பரமஞான மாகும்நீதியா மரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்நீண்டகாலம் வாழ்வர்தரை மீது -- எந்தநெறியுமெய்து வர்நினைத்த போது -- அந்தநித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபதநீழலடைந் தார்க்கில்லையோர் தீது -- என்றுநேர்மைவேதம் சொல்லும் வழி யீது
kaavatis sinthu kaalamaam vanaththilantak koalamaa maraththinmeethu kaalisakthi yenrapeyar kontu --reeng kaaramit tulavumoru vantu -- thazhal kaalumvizhi neelavanna moola aththu vaakkalenum kaalkalaa rutaiyathenak kantu -- marai kaanumuni voaruraiththaar pantu. maelumaakik keezhumaaki vaerula thisaiyumaaki vinnumannu maanasakthi vellam -- intha vinthaiyellaa maangkathu sey kallam -- pazha vaethamaa yathanmunulla naathamaay vilangkumintha veerasakthi vellamvizhum pallam -- aaka vaentum niththa menranaezhai yullam. anpuvati vaakinirpal thunpelaa mavalizhaippal aakkaneekkam yaavumaval seykai -- ithai aarnthunarntha varkalukkun tuykai -- aval aathiyaa yanaathiyaa yakantavari vaavalunran arivumaval maeniyiloar saikai -- aval aananthaththi nellai yarra poykai. inpavati vaakinirpal thunpelaa mavalizhaippal ihthelaa mavalpuriyum maayai -- aval aethumarra meypporulin saayai -- enil enniyaeoam sakthiyenum punniya munivar niththam eythuvaarmeynj njaanamenun theeyai -- eriththu erruvaarin naanenum poyp paeyai. aathiyaanj sivanumavan soathiyaana sakthiyunthaan angkumingku mengkumula vaakum -- onrae yaakinaa lulakanaiththum saakum -- avai yanriyoar porulumillai, anriyonru millaiyithai aaynthitil thuyaramellaam poakum -- intha arivuthaan paramanjaana maakum. neethiyaa marasuseyvar nithikalpala koatithuyppar neentakaalam vaazhvartharai meethu -- entha neriyumeythu varninaiththa poathu -- antha niththamuththa suththapuththa saththaperung kaalipatha neezhalatain thaarkkillaiyoar theethu -- enru naermaivaetham sollum vazhi yeethu.