Deiva Padalgal 32 · 32. மஹா சக்தி பஞ்சகம்
32. மஹா சக்தி பஞ்சகம்கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்காளிநீ காத்தருள் செய்யேமரணமும் அஞ்சேன்நோய்களை அஞ்சேன்மாரவெம் பேயினை அஞ்சேன்இரணமுஞ் சுகமும்பழியுநற் புகழும்யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்தாயெனைக் காத்தலுன் கடனேஎண்ணிலாப் பொருளும்எல்லையில்வெளியும்யாவுமா நின்தனைப் போற்றிமணிணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்மயங்கிலேன்மனமெனும் பெயர்கொள்கண்ணிலாப் பேயை எள்ளுவேன்இனியெக்காலுமே அமைதியி லிருப்பேன்தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்தாயுனைச் சரண்புகுந் தேனால்நீசருக் கினிதாந் தனத்தினும்மாதர்நினைப்பினும்நெறியிலா மாக்கள்மாசுறு பொய்ந்நட் பதனிலும்பன்னாள்மயங்கினேன்அதையினி மதியேன்தேசுறு நீல நிறத்தினாள்அறிவாய்ச்சிந்தையிற் குலவிடு திறத்தாள்வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன்ஐயமுந் திகப்புந் தொலைந்தனஆங்கேஅச்சமுந் தொலைந்ததுசினமும்பொய்யுமென் றினைய புன்மைக ளெல்லாம்போயினஉறுதிநான் கண்டேன்வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்துணையெனத் தொடர்ந்தது கொண்டேதவத்தினை எளிதாப் புரிந்தனள்யோகத்தனிநிலை எளிதெனப் புரிந்தாள்சிவத்தினை இனிதாப் புரிந்தனள்மூடச்சித்தமும் தெளிவுறச் செய்தாள்பவத்தினை வெறுப்ப அருளினள்நானாம்பான்மை கொன் றவன்மயம் புரிந்தாள்அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்அநந்தமா வாழ்கஇங் கவளே
32. mahaa sakthi panjsakam karanamun thanuvum ninakkenath thanthaen, kaalinee kaaththarul seyyae maranamum anjsaen;noaykalai anjsaen maaravem paeyinai anjsaen. iranamunj sukamum,pazhiyunar pukazhum yaavumoar porulenak kollaen saranamen runathu pathamalar paninthaen thaayenaik kaaththalun katanae. ennilaap porulum,ellaiyil,veliyum yaavumaa ninthanaip poarri, maninilaar vanthu vaazhththinunj serinum mayangkilaen;manamenum peyarkol kannilaap paeyai elluvaen;iniyek kaalumae amaithiyi liruppaen thannilaa mutiyir punainthunin rilakum thaayunais saranpukun thaenaal. neesaruk kinithaan thanaththinum, maathar ninaippinum,neriyilaa maakkal maasuru poynnat pathanilum, pannaal mayangkinaen;athaiyini mathiyaen thaesuru neela niraththinaal,arivaays sinthaiyir kulavitu thiraththaal. veesurung kaarril neruppinil veliyil vilangkuvaal thanaissaran pukunthaen. aiyamun thikappun tholainthana; aangkae assamun tholainthathu;sinamum poyyumen rinaiya punmaika lellaam poayina; uruthinaan kantaen, vaiyaming kanaiththum aakkiyum kaaththum maayththumae makizhnthitu thaayaith thuyyaven niraththaal thanaikkari yavalaith thunaiyenath thotarnthathu kontae. thavaththinai elithaap purinthanal, yoakath thaninilai elithenap purinthaal sivaththinai inithaap purinthanal,mootas siththamum thelivuras seythaal pavaththinai veruppa arulinal, naanaam paanmai kon ravanmayam purinthaal avaththinaik kalainthaal arivena vilainthaal, ananthamaa vaazhkaing kavalae!