பாடல் 27 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Deiva Padalgal 27 · 27. மஹா சக்தி

27. மஹா சக்திசந்திர னொளியில் அவளைக் கண்டேன்சரண மென்று புகுந்து கொண்டேன்இந்திரி யங்களை வென்று விட்டேன்எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்துயரி லாதெனைச் செய்து விட்டாள்துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்வீசி நிற்கும் வளியைச் செய்தாள்வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்

27. mahaa sakthi santhira noliyil avalaik kantaen, sarana menru pukunthu kontaen inthiri yangkalai venru vittaen, enathen aasaiyaik konru vittaen. payanen naamal uzhaikkas sonnaal, pakthi seythu pizhaikkas sonnaal thuyari laathenais seythu vittaal, thunpa menpathaik koythu vittaal. meenkal seyyum oliyais seythaal veesi nirkum valiyais seythaal vaanka nulla veliyais seythaal, vaazhi nenjsir kaliyais seythaal.