பாடல் 29 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்
Deiva Padalgal 29 · 29. காளிப் பாட்டு
29. காளிப் பாட்டுயாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோபூத மைந்தும் ஆனாய்-காளி!-பொறிக ளைந்தும் ஆனாய்போத மாகி நின்றாய்-காளி!-பொறியை விஞ்சி நின்றாய்இன்ப மாகி விட்டாய்-காளி!-என்னு ளேபு குந்தாய்பின்பு நின்னை யல்லால்-காளி!-பிறிது நானும் உண்டோ?அன்ப ளித்து விட்டாய்-காளி!-ஆண்மை தந்து விட்டாய்துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-தொல்லை போக்கிவிட்டாய்
29. kaalip paattu yaathumaaki ninraay-kaali!-engkum neethi rainthaay theethu nanmai yellaam-kaali!-theyva leelai yanroa pootha mainthum aanaay-kaali!-porika lainthum aanaay poatha maaki ninraay-kaali!-poriyai vinjsi ninraay inpa maaki vittaay-kaali!-ennu laepu kunthaay pinpu ninnai yallaal-kaali!-pirithu naanum untoa? anpa liththu vittaay-kaali!-aanmai thanthu vittaay thunpam neekkivittaay-kaali!-thollai poakkivittaay