பாடல் 48 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Deiva Padalgal 48 · கண்ணன் பிறந்தான்-எங்கள்

கண்ணன் பிறந்தான்-எங்கள்கண்ணன் பிறந்தான்-இந்தக்காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்திண்ண முடையான்-மணிவண்ண முடையான்-உயர்தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்புண்ணை யொழிப்பீர் -இந்தப்பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதைஎண்ணிடைக் கொள்வீர்-நன்குகண்ணை விழிப்பீர்-இனிஏதுங் குறைவில்லைவேதம் துணையுண்டு(கண்ணன் பிறந்தான்)அக்கினி வந்தான்-அவன்திக்கை வளைத்தான்-புவியாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்துக்கங் கெடுத்தான்-சுரர்ஒக்கலும் வந்தார்-சுடர்ச்சூரியன்இந்திரன்வாயுமருத்துக்கள்மிக்க திரளாய்-சுரர்இக்கணந் தன்னில்-இங்குமேவி நிறைந்தனர்பாவி யசுரர்கள்பொக்கென வீழ்ந்தார்-உயிர்கக்கி முடிந்தார்-கடல்போல ஒலிக்குது வேதம் புவிமிசை(கண்ணன் பிறந்தான்)சங்கரன் வந்தான்-இங்குமங்கல மென்றான்-நல்லசந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்பங்க மொன் றில்லை-ஒளிமங்குவ தில்லை-இந்தப்பாரின்கண் முன்பு வானத்திலே நின்றுகங்கையும் வந்தாள்-கலைமங்கையும் வந்தாள்-இன்பக்காளி பராசக்தி அன்புட னெய்தினள்செங்கம லத்தாள்-எழில்பொங்கு முகத்தாள்-திருத்தேவியும் வந்து சிறப்புற நின்றனள்(கண்ணன் பிறந்தான்)

kannan piranthaan-engkal kannan piranthaan-inthak kaarrathai yettuth thisaiyilung kooritum. thinna mutaiyaan-mani vanna mutaiyaan-uyar thaevar thalaivan puvimisaith thoanrinan pannai yisaippeer-nenjsir punnai yozhippeer -inthap paarinilae thuyar neengkitum enrithai ennitaik kolveer-nanku kannai vizhippeer-ini aethung kuraivillai;vaetham thunaiyuntu, (kannan piranthaan) akkini vanthaan-avan thikkai valaiththaan-puvi yaarirut poymaik kaliyai matiththanan thukkang ketuththaan-surar okkalum vanthaar-sutars sooriyan,inthiran,vaayu,maruththukkal mikka thiralaay-surar ikkanan thannil-ingku maevi nirainthanar;paavi yasurarkal pokkena veezhnthaar,-uyir kakki mutinthaar-katal poala olikkuthu vaetham puvimisai. (kannan piranthaan) sangkaran vanthaan-ingku mangkala menraan-nalla santhiran vanthin namuthaip pozhinthanan pangka mon rillai-oli mangkuva thillai-inthap paarinkan munpu vaanaththilae ninru kangkaiyum vanthaal-kalai mangkaiyum vanthaal-inpak kaali paraasakthi anputa neythinal sengkama laththaal-ezhil pongku mukaththaal-thiruth thaeviyum vanthu sirappura ninranal. (kannan piranthaan)