பாடல் 46 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்
Deiva Padalgal 46 · காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே!-நீ
காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே!-நீகனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானேநோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே!-நீநோன்பிலே உயிர்ப்பதென்னே?கண்ண பெருமானேகாற்றிலே குளிர்ந்ததென்னே?கண்ண பெருமானே!-நீகனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானேசேற்றிலே குழம்பலென்னே? கண்ண பெருமானேதிக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானேஏறிறிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே!நீஎளியர்தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானேபோற்றினோரைக் காப்பதென்னே!கண்ண பெருமானே!நீபொய்யர் தம்மை மாய்ப்பதென்னே?கண்ண பெருமானேவேறுபோற்றி!போற்றி!போற்றி!போற்றிகண்ண பெருமானே!-நீபொன்னடி போற்றி நின்றேன்
kaayilae pulippathennae kanna perumaanae!-nee kaniyilae inippathennae? kanna perumaanae! noayilae patuppathennae? kanna perumaanae!-nee noanpilae uyirppathennae?kanna perumaanae! kaarrilae kulirnthathennae?kanna perumaanae!-nee kanalilae sutuvathennae? kanna perumaanae! saerrilae kuzhampalennae? kanna perumaanae! thikkilae thelinthathennae? kanna perumaanae! aeririninnaith thozhuvathennae? kanna perumaanae!nee eliyarthammaik kaappathennae? kanna perumaanae! poarrinoaraik kaappathennae!kanna perumaanae!nee poyyar thammai maayppathennae?kanna perumaanae! vaeru poarri!poarri!poarri!poarri! kanna perumaanae!-nee ponnati poarri ninraen