பாடல் 50 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Deiva Padalgal 50 · 50. வேய்ங் குழல்

50. வேய்ங் குழல்எங்கிருந்து வருகுவதோ?-ஒலியாவர் செய்குவ தோ?-அடி தோழிகுன்றி னின்றும் வருகுவதோ?-மரக்கொம்பி னின்றும் வருகுவதோ?-வெளிமன்றி னின்று வருகுவதோ?-என்தன்மதி மருண்டிடச் செய்குதடி-இஃது(எங்கிருந்து)அலையொ லித்திடும் தெய்வ-யமுனையாறி னின்றும் ஒலுப்பதுவோ?-அன்றிஇலையொ லிகும் பொழிலிடை நின்றும்எழுவதோ இஃதின்ன முதைப்போல்? (எங்கிருந்து)காட்டி னின்றும் வருகுவதோ?-நிலாக்காற்றிக் கொண்டு தருகுவதோ?-வெளிநாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ?நாதமிஃதென் உயிரை யுருக்குதே! (எங்கிருந்து)பறவை யேதுமொன் றுள்ளதுவோ!-இங்ஙன்பாடுமோ அமுதக்கனற் பாட்டு?மறைவினிறுங் கின்னர ராதியர்வாத்தியதினிசை யிதுவோ அடி! (எங்கிருந்து)கண்ண னூதிடும் வேய்ங்குழல தானடீகாதி லேயமு துள்ளத்தில் நஞ்சுபண்ணன் றாமடி பாவையர் வாடப்பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து)

50. vaeyng kuzhal engkirunthu varukuvathoa?-oli yaavar seykuva thoa?-ati thoazhi! kunri ninrum varukuvathoa?-marak kompi ninrum varukuvathoa?-veli manri ninru varukuvathoa?-enthan mathi maruntitas seykuthati-ihthu, (engkirunthu) alaiyo liththitum theyva-yamunai yaari ninrum oluppathuvoa?-anri ilaiyo likum pozhilitai ninrum ezhuvathoa ihthinna muthaippoal? (engkirunthu) kaatti ninrum varukuvathoa?-nilaak kaarrik kontu tharukuvathoa?-veli naatti ninrumith thenral konarvathoa? naathamihthen uyirai yurukkuthae! (engkirunthu) paravai yaethumon rullathuvoa!-ingngan paatumoa amuthakkanar paattu? maraivinirung kinnara raathiyar vaaththiyathinisai yithuvoa ati! (engkirunthu) kanna noothitum vaeyngkuzhala thaanatee! kaathi laeyamu thullaththil nanjsu, pannan raamati paavaiyar vaatap paati yeythitum ampati thoazhi! (engkirunthu)