பாடல் 47 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Deiva Padalgal 47 · காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்

காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்கரியநிறந் தோன்று தையே நந்த லாலாபார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலாகேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்கீத மிசக்குதடா நந்த லாலாதீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா

kaakkais sirakinilae nantha laalaa!-ninthan kariyaniran thoanru thaiyae nantha laalaa! paarkkum marangka lellaam nantha laalaa!-ninthan passai niran thoanru thaiyae nantha laalaa! kaetku moliyi lellaam nantha laalaa!-ninthan keetha misakkuthataa nantha laalaa! theekkul viralai vaiththaal nantha laalaa!-ninnaith theentu minpan thoanru thataa nantha laalaa!