Deiva Padalgal 53 · பல்லவி
பல்லவிபீடத்தி லேறிக் கொண்டாள்-மனப்பீடத்தி லேறிக் கொண்டாள்சரணங்கள்நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்கேடற்ற தென்று கண்டு கூடக் கருது மொளிமாடத்தி லேறி ஞானக்ச கூடத்தில் விளையாடிஓடத் திருந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்துவேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)கண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ?விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்காதனத்தேநண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ?எண்ணத்துதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்பெண்ணி லரசியிவள் பெரிய எரி லுடையாள்கண்ணுள் கணியெனக்குக் காத லிரதியிவள்பண்ணி லினிய சுவை பரந்த மொழியினாள்உண்ணு மிதழமுற ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி)
pallavi peetaththi laerik kontaal-manap peetaththi laerik kontaal. saranangkal naatith thavam purinthu peeturra munivarar kaetarra thenru kantu kootak karuthu moli maataththi laeri njaanaksa kootaththil vilaiyaati oatath thirunthu kanni vaetaththi rathiyaippoal, eetarra karpanaikal kaaturra sinthanaikal mootik kitakku nenjsin ootur rathai yamarar thaetith thavikku minpa veetoth thinimaiseythu vaetaththi siruvalli viththaiyen kannammaa (peetaththi) kannan thirumaarpir kalantha kamalai yenkoa? vinnavar thozhuthitum veeras singkaathanaththae nannis sivanutalai naatumava lenkoa? ennaththuthikkuthataa ivalpon nutalamutham! penni larasiyival periya eri lutaiyaal kannul kaniyenakkuk kaatha lirathiyival panni liniya suvai parantha mozhiyinaal unnu mithazhamura oorrinal kannammaa (peetaththi)