Verse 15 · Gnana Padalgal · Subramaniya Bharathiyar
Gnana Padalgal 15 · செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார் பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம் பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! 1 இத்தரை மீதினி லேயிந்த நாளினில் இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற் களிப்பவர் தூய ராமென்றிங் கூதேடா சங்கம்! 2 பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு, புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர் ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்! 3 மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும் மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார் சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம்! 4 ———–
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார் பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம் பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! 1 இத்தரை மீதினி லேயிந்த நாளினில் இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற் களிப்பவர் தூய ராமென்றிங் கூதேடா சங்கம்! 2 பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு, புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர் ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்! 3 மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும் மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார் சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம்! 4 -----------
seththapiraku sivaloakam vaikuntham saernthitalaa menrae enniyiruppaar piththa manithar,avar solunj saaththiram paeyurai yaamenring koothaetaa sangkam! 1 iththarai meethini laeyintha naalinil ippozhu thaemukthi saernthita naatis suththa arivu nilaiyir kalippavar thooya raamenring koothaetaa sangkam! 2 poyyuru maayaiyaip poyyenak kontu, pulankalai vettip puraththil erinthae aiyura linrik kalithtirup paaravar aariya raamenring koothaetaa sangkam! 3 maiyuru vaalvizhi yaaraiyum ponnaiyum mannenak kontu mayakkar rirunthaarae seyyuru kaariyam thaamanris seyvaar siththark laamenring koothaetaa sangkam! 4 -----------