Verse 15 · Gnana Padalgal · Subramaniya Bharathiyar

Gnana Padalgal 15 · செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்       சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார் பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்       பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்!       1 இத்தரை மீதினி லேயிந்த நாளினில்       இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்       தூய ராமென்றிங் கூதேடா சங்கம்!       2 பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,       புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர்       ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்!       3 மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்       மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்       சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம்!       4 ———–

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்       சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார் பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்       பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்!       1 இத்தரை மீதினி லேயிந்த நாளினில்       இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்       தூய ராமென்றிங் கூதேடா சங்கம்!       2 பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,       புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர்       ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்!       3 மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்       மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்       சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம்!       4 -----------

seththapiraku sivaloakam vaikuntham       saernthitalaa menrae enniyiruppaar piththa manithar,avar solunj saaththiram       paeyurai yaamenring koothaetaa sangkam!       1 iththarai meethini laeyintha naalinil       ippozhu thaemukthi saernthita naatis suththa arivu nilaiyir kalippavar       thooya raamenring koothaetaa sangkam!       2 poyyuru maayaiyaip poyyenak kontu,       pulankalai vettip puraththil erinthae aiyura linrik kalithtirup paaravar       aariya raamenring koothaetaa sangkam!       3 maiyuru vaalvizhi yaaraiyum ponnaiyum       mannenak kontu mayakkar rirunthaarae seyyuru kaariyam thaamanris seyvaar       siththark laamenring koothaetaa sangkam!       4 -----------