Verse 16 · Gnana Padalgal · Subramaniya Bharathiyar

Gnana Padalgal 16 · கண்ணிகள் ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி       அலையும் அறிவிலிகாள்!-பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்       டாமெனல் கேளீரோ?       1 மாடனைக் காடனை வேடனைப் போற்றி       மயங்கும் மதியிலிகாள்!-எத னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்       றோதி யறியிரோ?       2 சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்       சுருதிகள் கேளீரோ?-பல பித்த மதங்களி லேதடு மாறிப்       பெருமை யழிவீரோ?       3 வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று       வேதம் புகன்றிடுமே-ஆங்கோர் வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்       வேத மறியாதே.       4 நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று       நான்மறை கூறிடுமே-ஆங்கோர் நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்       நான்மறை கண்டிலதே.       5 போந்த நிலைகள் பலவும் பராசக்தி       பூணு நிலையாமே-உப சாந்த நிலையே வேதாந்த நிலையென்று       சான்றவர் கண்டனரே.       6 கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று       காட்டும் மறைகளெலாம்-நீவிர் அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு       அவங்கள் புரிவீரோ?       7 உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி       ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு, கொள்ளற் கரிய பிரமமென் றேமறை       கூவுதல் கேளீரோ?       8 மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து       வெறுங் கதைகள் சேர்த்துப்-பல கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை       காட்டவும் வல்லீரோ?       9 ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்       உணர்வெனும் வேதமெலாம்-என்றும் ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்       உணர்வெனக் கொள்வாயே.       10 ————-

கண்ணிகள் ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி       அலையும் அறிவிலிகாள்!-பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்       டாமெனல் கேளீரோ?       1 மாடனைக் காடனை வேடனைப் போற்றி       மயங்கும் மதியிலிகாள்!-எத னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்       றோதி யறியிரோ?       2 சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்       சுருதிகள் கேளீரோ?-பல பித்த மதங்களி லேதடு மாறிப்       பெருமை யழிவீரோ?       3 வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று       வேதம் புகன்றிடுமே-ஆங்கோர் வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்       வேத மறியாதே.       4 நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று       நான்மறை கூறிடுமே-ஆங்கோர் நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்       நான்மறை கண்டிலதே.       5 போந்த நிலைகள் பலவும் பராசக்தி       பூணு நிலையாமே-உப சாந்த நிலையே வேதாந்த நிலையென்று       சான்றவர் கண்டனரே.       6 கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று       காட்டும் மறைகளெலாம்-நீவிர் அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு       அவங்கள் புரிவீரோ?       7 உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி       ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு, கொள்ளற் கரிய பிரமமென் றேமறை       கூவுதல் கேளீரோ?       8 மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து       வெறுங் கதைகள் சேர்த்துப்-பல கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை       காட்டவும் வல்லீரோ?       9 ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்       உணர்வெனும் வேதமெலாம்-என்றும் ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்       உணர்வெனக் கொள்வாயே.       10 -------------

kannikal aayiran theyvangkal untenru thaeti       alaiyum arivilikaal!-pal laayiram vaetham arivonrae theyvamun       taamenal kaeleeroa?       1 maatanaik kaatanai vaetanaip poarri       mayangkum mathiyilikaal!-etha nootumnin roangkum arivenrae theyvamen       roathi yariyiroa?       2 suththa arivae sivamenru koorunj       suruthikal kaeleeroa?-pala piththa mathangkali laethatu maarip       perumai yazhiveeroa?       3 vaetampal koatiyor unmaik kulavenru       vaetham pukanritumae-aangkoar vaetaththai neerunmai yenrukol veerenrav       vaetha mariyaathae.       4 naamampal koatiyor unmaik kulavenru       naanmarai kooritumae-aangkoar naamaththai neerunmai yenru kol veerenran       naanmarai kantilathae.       5 poantha nilaikal palavum paraasakthi       poonu nilaiyaamae-upa saantha nilaiyae vaethaantha nilaiyenru       saanravar kantanarae.       6 kavalai thuranthingku vaazhvathu veetenru       kaattum maraikalelaam-neevir avalai ninainthumi melluthal poalingku       avangkal puriveeroa?       7 ulla thanaiththilum ulloli yaaki       olirnthitum aanmaavae-ingku, kollar kariya piramamen raemarai       koovuthal kaeleeroa?       8 mellap palatheyvam kootti valarththu       verung kathaikal saerththup-pala kalla mathangkal parapputhar koarmarai       kaattavum valleeroa?       9 onru pirama mulathunmai yahthun       unarvenum vaethamelaam-enrum onru pirama mula thunmai yahthun       unarvenak kolvaayae.       10 -------------