Gnana Padalgal 18 · நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம் சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம் அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 1 வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம் கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? 2 கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ?அங்குக் குணங்களும் பொய்களோ? சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? 3 காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ? வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ? காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம். 4 —————-
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம் சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம் அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 1 வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம் கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? 2 கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ?அங்குக் குணங்களும் பொய்களோ? சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? 3 காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ? வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ? காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம். 4 ----------------
nirpathuvae,natappathuvae,parappathuvae,neengka lellaam sorpanan thaanaa?pala thoarra mayakkangkaloa? karpathuvae!kaetpathuvae,karuthuvathae neengka lellaam arpa maayaikaloa?ummul aazhntha porulillaiyoa? 1 vaanakamae,ilaveyilae,marasserivae neengka lellaam kaanalin neeroa?-verung kaatsip pizhaithaanoa? poanathellaam kanavinaippoar puthainthazhinthae poanathanaal naanumoar kanavoa?-intha njaalamum poythaanoa? 2 kaala menrae oru ninaivum kaatsiyenrae palaninaivum koalamum poykaloa?angkuk kunangkalum poykaloa? soalaiyilae marangka lellaam thoanruvathoar vithaiyilenraal, soalai poyyaamoa?-ithais sollotu saerppaaroa? 3 kaanpavellaam maraiyumenraal marainthathellaam kaanpa menroa? veenpatu poyyilae-niththam vithithotarn thitumoa? kaanpathuvae uruthikantoa m kaanpathallaal uruthiyillai kaanpathu sakthiyaam-inthak kaatsi niththiyamaam. 4 ----------------