Verse 16 · Desiya Geethangal · Subramaniya Bharathiyar

Desiya Geethangal 16 · போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)வலிமையற்ற தோளினாய் போ போ போமார்பிலே ஒடுங்கினாய் போ போ போபொலிவிலா முகத்தினாய் போ போ போபொறியிழந்த விழியினாய் போ போ போஓங்கிழந்த குரலினாய் போ போ போஒளியிழந்த மேனியாய் போ போ போகிலிபிடித்த நெஞ்சினாய் போ போ போகீழ்மை என்றும் வேண்டுவாய் போ போ போஇன்று பாரதத்திடை நாய்போலஏற்றம் இன்றி வாழுவாய் போ போ போநன்று கூறில் அஞ்சுவாய் போ போ போநாணிலாது கெஞ்சுவாய் போ போ போசென்று போன பொய்யெலாம் மெய்யாகச்சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போவென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாகவிழி மயங்கி நோக்குவாய் போ போ போவேறு வேறு பாஷைகள் கற்பாய் நீவீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போநூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்நூலில் ஒத்தியல்கிலாய் போ போ போமாறுபட்ட வாதமே ஐந்நூறுவாயில் நீள ஓதுவாய் போ போ போசேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்சிறிய வீடு கட்டுவாய் போ போ போஜாதி நூறு சொல்லுவாய் போ போ போதருமம் ஒன்றியற்றிலாய் போ போ போநீதி நூறு சொல்லுவாய் காசொன்றுநீட்டினால் வணங்குவாய் போ போ போதீது செய்வது அஞ்சிலாய் நின்முன்னேதீமை நிற்கில் ஓடுவாய் போ போ போசோதி மிக்க மணியிலே காலத்தால்சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.(வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்)ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வாஉறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வாகளிபடைத்த மொழியினாய் வா வா வாகடுமை கொண்ட தோளினாய் வா வா வாதெளிவு பெற்ற மதியினாய் வா வா வாசிறுமை கண்டு பொங்குவாய் வா வா வாஎளிமை கண்டு இரங்குவாய் வா வா வாஏறு போல் நடையினாய் வா வா வாமெய்ம்மை கொண்ட நூலையே அன்போடுவேதமென்று போற்றுவாய் வா வா வாபொய்ம்மை கூற அஞ்சுவாய் வா வா வாபொய்ம்மை நூல்களை எற்றுவாய் வா வா வாநொய்ம்மையற்ற சிந்தையாய் வா வா வாநோய்களற்ற உடலினாய் வா வா வாதெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்தேசமீது தோன்றுவாய் வா வா வாஇளைய பாரதத்தினாய் வா வா வாஎதிரிலா வலத்தினாய் வா வா வாஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்உதய ஞாயிறொப்பவே வா வா வாகளையிழந்த நாட்டிலே முன்போலேகலை சிறக்க வந்தனை வா வா வாவிளையும் மாண்பு யாவையும் பார்த்தன்போல்விழியினால் விளக்குவாய் வா வா வாவெற்றி கொண்ட கையினாய் வா வா வாவிநயம் நின்ற நாவினாய் வா வா வாமுற்றி நின்ற வடிவினாய் வா வா வாமுழுமை சேர்முகத்தினாய் வா வா வாகற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வாகருதியது இயற்றுவாய் வா வா வாஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம்ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா

(poakinra paarathaththais sapiththal) valimaiyarra thoalinaay poa poa poa maarpilae otungkinaay poa poa poa polivilaa mukaththinaay poa poa poa poriyizhantha vizhiyinaay poa poa poa oangkizhantha kuralinaay poa poa poa oliyizhantha maeniyaay poa poa poa kilipitiththa nenjsinaay poa poa poa keezhmai enrum vaentuvaay poa poa poa inru paarathaththitai naaypoala aerram inri vaazhuvaay poa poa poa nanru kooril anjsuvaay poa poa poa naanilaathu kenjsuvaay poa poa poa senru poana poyyelaam meyyaakas sinthai kontu poarruvaay poa poa poa venru nirkum meyyelaam poyyaaka vizhi mayangki noakkuvaay poa poa poa vaeru vaeru paashaikal karpaay nee veettu vaarththai karkilaay poa poa poa nooru noolkal poarruvaay meykoorum noolil oththiyalkilaay poa poa poa maarupatta vaathamae ainnooru vaayil neela oathuvaay poa poa poa saerupatta naarramum thoorunjsaer siriya veetu kattuvaay poa poa poa jaathi nooru solluvaay poa poa poa tharumam onriyarrilaay poa poa poa neethi nooru solluvaay kaasonru neettinaal vanangkuvaay poa poa poa theethu seyvathu anjsilaay ninmunnae theemai nirkil oatuvaay poa poa poa soathi mikka maniyilae kaalaththaal soozhntha maasu poanranai poa poa poa. (varukinra paarathaththai vaazhththal) olipataiththa kanninaay vaa vaa vaa uruthikonta nenjsinaay vaa vaa vaa kalipataiththa mozhiyinaay vaa vaa vaa katumai konta thoalinaay vaa vaa vaa thelivu perra mathiyinaay vaa vaa vaa sirumai kantu pongkuvaay vaa vaa vaa elimai kantu irangkuvaay vaa vaa vaa aeru poal nataiyinaay vaa vaa vaa meymmai konta noolaiyae anpoatu vaethamenru poarruvaay vaa vaa vaa poymmai koora anjsuvaay vaa vaa vaa poymmai noolkalai erruvaay vaa vaa vaa noymmaiyarra sinthaiyaay vaa vaa vaa noaykalarra utalinaay vaa vaa vaa theyva saapam neengkavae nangkal seerth thaesameethu thoanruvaay vaa vaa vaa ilaiya paarathaththinaay vaa vaa vaa ethirilaa valaththinaay vaa vaa vaa oliyizhantha naattilae ninraerum uthaya njaayiroppavae vaa vaa vaa kalaiyizhantha naattilae munpoalae kalai sirakka vanthanai vaa vaa vaa vilaiyum maanpu yaavaiyum paarththanpoal vizhiyinaal vilakkuvaay vaa vaa vaa verri konta kaiyinaay vaa vaa vaa vinayam ninra naavinaay vaa vaa vaa murri ninra vativinaay vaa vaa vaa muzhumai saermukaththinaay vaa vaa vaa karral onru poykkilaay vaa vaa vaa karuthiyathu iyarruvaay vaa vaa vaa orrumaikkul uyyavae naatellaam oru perunj seyal seyvaay vaa vaa vaa

பொருள்

போகின்ற பாரதம்: வலிமையற்ற தோளினாய், மார்பிலே ஒடுங்கினாய், பொலிவிலா முகத்தினாய், பொறியிழந்த விழியினாய், ஓங்கிழந்த குரலினாய், ஒளியிழந்த மேனியாய், கிலிபிடித்த நெஞ்சினாய், கீழ்மையை என்றும் வேண்டுவாய் - போ, போ, போ! இன்று பாரதத்திடை நாய்போல ஏற்றம் இன்றி வாழ்வாய்; நன்று கூறில் அஞ்சுவாய்; நாணிலாது கெஞ்சுவாய்; சென்று போன பொய் எல்லாம் மெய்யாகச் சிந்தை கொண்டு போற்றுவாய்; வென்று நிற்கும் மெய் எல்லாம் பொய்யாக விழி மயங்கி நோக்குவாய். வேறு வேறு பாஷைகள் கற்பாய், வீட்டு வார்த்தை கற்கிலாய்; நூறு நூல்கள் போற்றுவாய், மெய் கூறும் நூலில் ஒத்து இயல்கிலாய்; மாறுபட்ட வாதமே ஐந்நூறு வாயில் நீள ஓதுவாய்; சேறுபட்ட நாற்றமும் தூறுஞ் சேர்ந்த சிறிய வீடு கட்டுவாய்; ஜாதி நூறு சொல்லுவாய், தருமம் ஒன்றியற்றிலாய்; நீதி நூறு சொல்லுவாய், காசு ஒன்று நீட்டினால் வணங்குவாய்; தீது செய்வது அஞ்சிலாய், நின்முன்னே தீமை நிற்கில் ஓடுவாய்; சோதி மிக்க மணியிலே காலத்தால் சூழ்ந்த மாசு போன்றனை.

வருகின்ற பாரதம்: ஒளிபடைத்த கண்ணினாய், உறுதிகொண்ட நெஞ்சினாய், களிபடைத்த மொழியினாய், கடுமை கொண்ட தோளினாய், தெளிவு பெற்ற மதியினாய், சிறுமை கண்டு பொங்குவாய், எளிமை கண்டு இரங்குவாய், ஏறு போல் நடையினாய் - வா, வா, வா! மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு வேதம் என்று போற்றுவாய்; பொய்ம்மை கூற அஞ்சுவாய்; பொய்ம்மை நூல்களை எற்றுவாய்; நொய்ம்மையற்ற சிந்தையாய்; நோய்களற்ற உடலினாய்; தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த் தேசமீது தோன்றுவாய்; இளைய பாரதத்தினாய்; எதிரிலா வலத்தினாய்; ஒளியிழந்த நாட்டிலே உதய ஞாயிறு ஒப்ப நின்று ஏறுவாய்; களையிழந்த நாட்டிலே முன்போலக் கலை சிறக்க வந்தனை; விளையும் மாண்பு யாவையும் பார்த்தன்போல் விழியினால் விளக்குவாய்; வெற்றி கொண்ட கையினாய்; விநயம் நின்ற நாவினாய்; முற்றி நின்ற வடிவினாய்; முழுமை சேர்முகத்தினாய்; கற்றல் ஒன்று பொய்க்கிலாய்; கருதியதை இயற்றுவாய்; ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ் செயல் செய்வாய்.

Meaning

The Bharata that is passing away: O you of strengthless shoulders, you who are hunched within the chest, of lustreless face, of eyes that have lost their sense, of voice that has lost its lift, of body that has lost its light, of a heart gripped by fright, you who forever want baseness - go, go, go! Today in Bharata you live like a dog without dignity; you are afraid when good is spoken; you beg without shame; you take every vanished lie to heart and praise it; the truths that stand victorious you look at as lies with bewildered eyes. You learn a hundred foreign tongues but will not learn the word of your own home; you praise a hundred books but cannot live in tune with a book that speaks the truth; five hundred contrary arguments you pour out at length from your mouth; you build a small house reeking of mire and muddy ooze; you speak of a hundred castes but have not become one with dharma; you recite a hundred laws, but stretch out a coin and you bow; you are not afraid to do evil, but if evil stands before you, you run; you are like the stain that time gathers on a jewel of great brightness.

The Bharata that is coming: O you of eyes that carry light, of a heart that has taken firmness, of speech that holds delight, of shoulders that hold severity, of mind that has won clarity, you who surge up when you see meanness, who melt in pity when you see weakness, of a gait like a bull's - come, come, come! You will honour with love the book that holds truth, calling it Veda; you will fear to speak a lie; you will strike down books of lies; of a mind without pettiness, of a body without disease, you will appear over our glorious land so that the divine curse is lifted; you are the young Bharata, of matchless strength; in a land that has lost its light you will rise like the morning sun; in a land that has lost its arts you have come so that the arts may shine again as before; like Arjuna who has seen all that ripens into worth, you will illumine everything with your eyes; of a hand that has won victory, of a tongue in which humility abides, of a form that has reached its fullness, of a face that has gathered completeness; you will not falsify the one thing you have learned; you will do what you have resolved; so that the whole land may be saved in oneness, you will do one great deed.

சொற்பொருள் Word by word

சபித்தல்
cursing
கிலி
fear, panic
ஏற்றம்
dignity, elevation
ஓங்கிழந்த
having lost its lift or resonance
ஒத்தியல்கிலாய்
you do not live in tune with
தூறு
mud, ooze
நொய்ம்மை
pettiness, meanness
எற்றுவாய்
you will strike down, scatter
விநயம்
humility
முழுமை சேர்முகம்
face that has gathered completeness

விளக்கம்

இப்பாடல் இரு கூறுகளாக நிற்கிறது; ஒன்று சாபம், ஒன்று வாழ்த்து. போகின்ற பாரதம் உடல் வலிமையை மட்டும் இழந்ததல்ல - கண், குரல், நெஞ்சு, நாக்கு, கை எல்லாவற்றிலும் சிதைந்து நிற்கிறது. ஆங்கிலேயரின் அடிமைத்தனம் உருவாக்கிய மனிதனின் முழு உருவப்படம் இது.

சாபத்தின் கடைசி உருவகம் முக்கியமானது: மணி அழியவில்லை, அதில் காலம் சேர்த்த மாசு மட்டும். அதாவது பாரதத்தின் ஆற்றல் அழியவில்லை, மூடப்பட்டது. அதனால் அடுத்த கூறில் அதே உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒளியோடு திரும்பி வருகின்றன - ஒளிபடைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சம், கடுமை கொண்ட தோள்.

'போ போ போ' என்று விரட்டுவதும் 'வா வா வா' என்று அழைப்பதும் ஒரே மூச்சில் நிற்கின்றன; ஆகவே இது இரண்டு தேசங்கள் பற்றிய பாட்டு அன்று, ஒரே தேசத்தின் இரண்டு காலங்கள் பற்றிய பாட்டு.

Explanation

The poem stands in two halves, a curse and a blessing. The Bharata that is passing has not only lost bodily strength; it is broken in eye, voice, heart, tongue and hand. It is a full portrait of the man that colonial servitude produced.

The last image of the curse matters most: the jewel is not destroyed, only stained by what time has gathered on it. Bharat's power is not gone, only covered. That is why in the second half the same members come back one by one with light - eyes that carry light, a heart that has taken firmness, shoulders that hold severity.

'Go, go, go' and 'come, come, come' stand in a single breath, so the song is not about two countries but about two ages of one country.

சிந்தனைக்கு

ஒரு தேசத்தை மாற்றுவது சட்டமா, மனமா? இந்தப் பாடல் எதை முதன்மைப்படுத்துகிறது?

To reflect on

What changes a nation - law or mind? Which does this poem put first?