பாடல் 74 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Deiva Padalgal 74 · ரிஷிகள் :எங்கள் வேள்விக் கூடமீதில்

ரிஷிகள் :எங்கள் வேள்விக் கூடமீதில்ஏறுதே தீ!தீ!-இந்நேரம்பங்க முற்றே பேய்க ளோடப்பாயுதே தீ!தீ!-இந்நேரம்அசுரர் : தோழரே!நம் ஆவி வேகச்சூழுதே தீ! தீ!-ஐயோ!நாம்வாழ வந்த காடு வேகவந்ததே தீ!தீ!-அம்மாவோரிஷி: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்போந்து விட்டானே!-இந்நேரம்சின்ன மாகிப் பொய் யரக்கர்சிந்தி வீழ்வாரே!-இந்நேரம்அசு: இந்திராதி தேவர் தம்மைஏசி வாழ்ந்தோமே!-ஐயோ!நாம்வெந்து போக மானிடர்க்கோர்வேத முண்டாமோ!-அம்மாவோரிஷி : வானை நோக்கிக் கைகள் தூக்கிவளருதே தீ!தீ!-இந்நேரம்ஞான மேனி உதய கன்னிநண்ணி விட்டாளே!-இந்நேரம்அசு: கோடி நாளாய் இவ்வனத்திற்கூடி வாழ்ந்தோமே-ஐயோ!நாம்பாடி வேள்வி மாந்தர் செய்யப்பண்பிழந் தோமே!-அம்மாவோரிஷி:காட்டில் மேயும் காளை போன்றான்காணுவீர் தீ!தீ!-இந்நேரம்ஓட்டி யோட்டிப் பகையை யெல்லாம்வாட்டுகின்றானே!-இந்நேரம்அசு:வலியி லாதார் மாந்த ரென்றுமகிழ்ந்து வாழ்ந்தோமே-ஐயோ!நாம்கலியை வென்றோர் வேத வுண்மைகண்டு கொண்டாரே!-அம்மாவோரிஷி: வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்வாய்திறந் தானே!-இந்நேரம்மலியு நெய்யுந் தேனுமுண்டுமகிழ வந்தானே!-இந்நேரம்அசு: உயிரை விட்டும் உணவை விட்டும்ஓடி வந்தோமே!-ஐயோ!நாம்துயிலுடம்பின் மீதிலுந் தீதோன்றி விட்டானே!-அம்மாவோரிஷி: அமரர் தூதன் சமர நாதன்ஆர்த் தெழுந்தானே!-இந்நேரம்குமரி மைந்தன் எமது வாழ்விற்கோயில் கொண்டானே!-இந்நேரம்அசு: வருணன் மித்ரன் அர்ய மானும்மதுவை யுண்பாரே-ஐயோ!நாம்பெருகு தீயின் புகையும் வெப்பும்பின்னி மாய்வோமே!-அம்மாவோரிஷி: அமர ரெல்லாம் வந்து நம்முன்அவிகள் கொண்டாரே!-இந்நேரம்நமனு மில்லை பகையு மில்லைநன்மை கண்டோமே!-இந்நேரம்அசு: பகனு மிங்கே யின்ப மெய்திப்பாடுகின்றானே-ஐயோ!நாம்புகையில் வீழ இந்திரன் சீர்பொங்கல் கண்டீரோ!-அம்மாவோரிஷி:இளையும் வந்தாள் கவிதை வந்தாள்இரவி வந்தானே!இந்நேரம்விளையுமெங்கள் தீயினாலேமேன்மையுற்றோமே!-இந்நேரம்ரிஷி:அன்ன முண்பீர் பாலும் நெய்யும்அமுது முண்பீரே!-இந்நேரம்மின்னி நின்றீர் தேவ ரெங்கள்வேள்வி கொள்வீரே!-இந்நேரம்ரிஷி: சோமமுண்டு தேவர் நல்கும்ஜோதி பெற்றோமே!-இந்நேரம்தீமை தீர்ந்தே வாழி யின்பஞ்சேர்ந்து விட்டோமே!-இந்நேரம்ரிஷி: உடலுயிர்மே லுணர்விலும் தீஓங்கி விட்டானே!-இந்நேரம்கடவுளர் தாம் எம்மை வாழ்த்திக்கை கொடுத்தாரே!-இந்நேரம்ரிஷி:எங்கும் வேள்வி அமர ரெங்கும்யாங்கணுந் தீ!தீ!-இந்நேரம்தங்கு மின்பம் அமர வாழ்க்கைசார்ந்து நின்றோமே!-இந்நேரம்ரிஷி: வாழ்க தேவர்! வாழ்க வேள்விமாந்தர் வாழ்வாரே!-இந்நேரம்வாழ்க வையம்! வாழ்க வேதம்வாழ்க தீ!தீ!தீ!-இந்நேரம்

rishikal :engkal vaelvik kootameethil aeruthae thee!thee!-innaeram, pangka murrae paeyka loatap paayuthae thee!thee!-innaeram asurar : thoazharae!nam aavi vaekas soozhuthae thee! thee!-aiyoa!naam vaazha vantha kaatu vaeka vanthathae thee!thee!-ammaavoa! rishi: ponnai yoththoar vannamurraan poanthu vittaanae!-innaeram, sinna maakip poy yarakkar sinthi veezhvaarae!-innaeram asu: inthiraathi thaevar thammai aesi vaazhnthoamae!-aiyoa!naam, venthu poaka maanitarkkoar vaetha muntaamoa!-ammaavoa! rishi : vaanai noakkik kaikal thookki valaruthae thee!thee!-innaeram, njaana maeni uthaya kanni nanni vittaalae!-innaeram. asu: koati naalaay ivvanaththir kooti vaazhnthoamae-aiyoa!naam paati vaelvi maanthar seyyap panpizhan thoamae!-ammaavoa! rishi:kaattil maeyum kaalai poanraan kaanuveer thee!thee!-innaeram, oatti yoattip pakaiyai yellaam vaattukinraanae!-innaeram. asu:valiyi laathaar maantha renru makizhnthu vaazhnthoamae-aiyoa!naam kaliyai venroar vaetha vunmai kantu kontaarae!-ammaavoa! rishi: valimai mainthan vaelvi munnoan vaaythiran thaanae!-innaeram, maliyu neyyun thaenumuntu makizha vanthaanae!-innaeram. asu: uyirai vittum unavai vittum oati vanthoamae!-aiyoa!naam thuyilutampin meethilun thee thoanri vittaanae!-ammaavoa! rishi: amarar thoothan samara naathan aarth thezhunthaanae!-innaeram, kumari mainthan emathu vaazhvir koayil kontaanae!-innaeram. asu: varunan mithran arya maanum mathuvai yunpaarae-aiyoa!naam peruku theeyin pukaiyum veppum pinni maayvoamae!-ammaavoa! rishi: amara rellaam vanthu nammun avikal kontaarae!-innaeram, namanu millai pakaiyu millai nanmai kantoamae!-innaeram. asu: pakanu mingkae yinpa meythip paatukinraanae-aiyoa!naam pukaiyil veezha inthiran seer pongkal kanteeroa!-ammaavoa! rishi:ilaiyum vanthaal kavithai vanthaal iravi vanthaanae!innaeram, vilaiyumengkal theeyinaalae maenmaiyurroamae!-innaeram. rishi:anna munpeer paalum neyyum amuthu munpeerae!-innaeram, minni ninreer thaeva rengkal vaelvi kolveerae!-innaeram. rishi: soamamuntu thaevar nalkum joathi perroamae!-innaeram, theemai theernthae vaazhi yinpanj saernthu vittoamae!-innaeram. rishi: utaluyirmae lunarvilum thee oangki vittaanae!-innaeram, katavular thaam emmai vaazhththik kai kotuththaarae!-innaeram. rishi:engkum vaelvi amara rengkum yaangkanun thee!thee!-innaeram, thangku minpam amara vaazhkkai saarnthu ninroamae!-innaeram. rishi: vaazhka thaevar! vaazhka vaelvi! maanthar vaazhvaarae!-innaeram, vaazhka vaiyam! vaazhka vaetham! vaazhka thee!thee!thee!-innaeram.