பாடல் 75 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்
Deiva Padalgal 75 · 75. கிளிப்பாட்டு
75. கிளிப்பாட்டுதிருவப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்துவருக வருவதென்றே-கிளியே!-மகிழ்வுற் றிருப்போமடிவெற்றி செயலுக் குண்டு தியின் நியமமென்றுகற்றுத் தெளிந்த பின்னும்-கிளியே!-கவலைப்படலாகுமோ?துன்ப நினைவு களும் சோர்வும் பயமு மெல்லாம்அன்பில் அழியுமடீ!-கிளியே!-அன்புக் கழிவில்லை காண்ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்றுஆயிர மாண்டுலகில்-கிளியே!-அழிவின்றி வாழ்வோ மடீதூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணி யனைநேயத்துடன் பணிந்தால்-கிளியே!-நெருங்கித் துயர் வருமோ?
75. kilippaattu thiruvap paninthu niththam semmaith thozhil purinthu, varuka varuvathenrae-kiliyae!-makizhvur riruppoamati! verri seyaluk kuntu thiyin niyamamenru, karruth thelintha pinnum-kiliyae!-kavalaippatalaakumoa? thunpa ninaivu kalum soarvum payamu mellaam, anpil azhiyumatee!-kiliyae!-anpuk kazhivillai kaan. njaayirrai yenni yenrum natumai nilai payinru, aayira maantulakil-kiliyae!-azhivinri vaazhvoa matee! thooya perungkanalais suppira manni yanai naeyaththutan paninthaal-kiliyae!-nerungkith thuyar varumoa?