பாடல் 52 · தேசிய கீதங்கள் · சுப்ரமணிய பாரதியார்

புதிய ருஷியா

(ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி)மாகாளி பராசக்தி உருசியநாட்டினில்கடைக்கண் வைத்தாள்; அங்கே,ஆகா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி,கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்,வாகான தோள்புடைத்தார் வானமரர்,பேய்களெல்லாம் வருந்திக் கண்ணீர்போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,வையகத்தீர், புதுமை காணீர்!இரணியன்போல் அரசாண்டான் கொடுங்கோலன்ஜாரெனும் பேர் இசைந்த பாவிசரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்சான்றோரும்; தருமந்தன்னைத்திரணமெனக் கருதிவிட்டான் ஜார் மூடன்,பொய்சூது தீமையெல்லாம்அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்து வளர்ந்துதோங்கினவே அந்த நாட்டில்.உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை,பிணிகள் பல உண்டு; பொய்யைத்தொழுது அடிமை செய்வாருக்குச் செல்வங்கள்உண்டு, உண்மை சொல்வோர்க்கெல்லாம்எழுதரிய பெருங்கொடுமைச் சிறை உண்டு,தூக்குண்டே இறப்பது உண்டு,முழுதும் ஒரு பேய்வனமாம் சிவேரியாவிலேஆவி கெட முடிவது உண்டு.இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால்வனவாசம், இவ்வாறு அங்கேசெம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையேஅறமாகித் தீர்ந்த போதில்அம்மை மனம் கனிந்திட்டாள், அடிபரவிஉண்மை சொலும் அடியார் தம்மைமும்மையிலும் காத்திடும் நல்விழியாலேநோக்கினாள்! முடிந்தான் காலன்.இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்ஜாரரசன்; இவனைச் சூழ்ந்துசமயமுள படிக்கெல்லாம் பொய்கூறிஅறங்கொன்று சதிகள் செய்தசுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,புயற்காற்றும் குறைதன்னில்திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்விறகான செய்தி போலே!குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வுமேன்மையுறக் குடிமை நீதிகடியொன்றில் எழுந்தது பார்; குடியரசென்றுஉலகறியக் கூறிவிட்டார்அடிமைக்குத் தளையில்லை, யாரும் இப்போதுஅடிமையில்லை, அறிக என்றார்,இடிப்பட்ட சுவர்ப்போல் கலிவிழுந்தான்,கிருதயுகம் எழுக மாதோ!

(jaar sakkaravarththiyin veezhssi) maakaali paraasakthi urusiyanaattinil kataikkan vaiththaal; angkae, aakaa enru ezhunthathu paar yukappuratsi, kotungkaalan alari veezhnthaan, vaakaana thoalputaiththaar vaanamarar, paeykalellaam varunthik kanneer poakaamar kanputhainthu matinthanavaam, vaiyakaththeer, puthumai kaaneer! iraniyanpoal arasaantaan kotungkoalan jaarenum paer isaintha paavi saraninrith thaviththittaar nalloarum saanroarum; tharumanthannaith thiranamenak karuthivittaan jaar mootan, poysoothu theemaiyellaam araniyaththir paampukalpoal malinthu valarnthu thoangkinavae antha naattil. uzhuthu vithaiththu aruppaarukku unavillai, pinikal pala untu; poyyaith thozhuthu atimai seyvaarukkus selvangkal untu, unmai solvoarkkellaam ezhuthariya perungkotumais sirai untu, thookkuntae irappathu untu, muzhuthum oru paeyvanamaam sivaeriyaavilae aavi keta mutivathu untu. immenraal siraivaasam, aenenraal vanavaasam, ivvaaru angkae semmaiyellaam paazhaakik kotumaiyae aramaakith theerntha poathil ammai manam kaninthittaal, atiparavi unmai solum atiyaar thammai mummaiyilum kaaththitum nalvizhiyaalae noakkinaal! mutinthaan kaalan. imayamalai veenthathupoal veezhnthuvittaan jaararasan; ivanais soozhnthu samayamula patikkellaam poykoori arangkonru sathikal seytha sumatar satasatavenru sarinthittaar, puyarkaarrum kuraithannil thimuthimena maramvizhunthu kaatellaam virakaana seythi poalae! kutimakkal sonnapati kutivaazhvu maenmaiyurak kutimai neethi katiyonril ezhunthathu paar; kutiyarasenru ulakariyak koorivittaar atimaikkuth thalaiyillai, yaarum ippoathu atimaiyillai, arika enraar, itippatta suvarppoal kalivizhunthaan, kiruthayukam ezhuka maathoa!

பொருள்

மாகாளி பராசக்தி உருசியநாட்டினில் கடைக்கண் வைத்தாள்; அங்கே ஆகா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி; கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்; வாகான தோள் புடைத்தார் வானமரர்; பேய்களெல்லாம் வருந்திக் கண்ணீர் போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம். வையகத்தீர், புதுமை காணீர்! இரணியன்போல் அரசாண்டான் கொடுங்கோலன், ஜார் எனும் பேர் இசைந்த பாவி; சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும் சான்றோரும்; தருமந்தன்னைத் திரணமெனக் கருதிவிட்டான் ஜார் மூடன்; பொய், சூது, தீமையெல்லாம் அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்து வளர்ந்து தோங்கினவே அந்த நாட்டில். உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை; பிணிகள் பல உண்டு; பொய்யைத் தொழுது அடிமை செய்வாருக்குச் செல்வங்கள் உண்டு; உண்மை சொல்வோர்க்கெல்லாம் எழுதரிய பெருங்கொடுமைச் சிறை உண்டு; தூக்குண்டே இறப்பது உண்டு; முழுதும் ஒரு பேய்வனமாம் சிவேரியாவிலே ஆவி கெட முடிவது உண்டு. இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்; இவ்வாறு அங்கே செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த போதில், அம்மை மனம் கனிந்திட்டாள்; அடிபரவி உண்மை சொலும் அடியார் தம்மை மும்மையிலும் காத்திடும் நல்விழியாலே நோக்கினாள்! முடிந்தான் காலன். இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் ஜாரரசன்; இவனைச் சூழ்ந்து சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி அறங்கொன்று சதிகள் செய்த சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்; புயற்காற்றும் குறைதன்னில் திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போலே! குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றில் எழுந்தது பார்; குடியரசென்று உலகறியக் கூறிவிட்டார்; அடிமைக்குத் தளையில்லை, யாரும் இப்போது அடிமையில்லை, அறிக என்றார்; இடிப்பட்ட சுவர்ப்போல் கலி விழுந்தான்; கிருதயுகம் எழுக மாதோ!

Meaning

Great Kali, the supreme Power, cast her gracious eye on the land of Russia; there, wonder of wonders, the revolution of an age rose up; the cruel god of death screamed and fell; the heavenly ones of mighty arms rejoiced; and all the demons grieved, covered their eyes so their tears should not flow, and died. People of the world, behold a new thing! The tyrant ruled like Hiranya - the sinner whose fame was the name of Tsar. Good men and the wise were left without refuge and in torment; the fool Tsar counted dharma as a straw, and falsehood, cheating and evil swelled and towered in that land like snakes in a thicket. Those who plough and sow and reap have no food, and diseases are many; those who worship falsehood and serve as slaves have wealth; for all who speak the truth there is a vast and terrible prison that cannot be written of, and there is hanging and death, and in Siberia, wholly a forest of demons, life itself can be ended. Say a word and it is prison; ask why and it is exile - when in this way all that was good was laid waste and cruelty had become dharma itself, the Mother's heart melted: she cast her look of grace, before which all bow, upon the servants who speak truth, keeping them in all three worlds - and the god of death was ended. The Tsar-king fell like the Himalaya falling. Around him all those dunces who had lied to every creed and done treachery against dharma collapsed with a clatter, like trees crashing in a storm and the whole forest turned to firewood. By the word of the citizens, so that civic life may rise, the law of the citizen has risen up - they have proclaimed to the world that it is a republic; they have said that there is no fetter on the slave, that no one is a slave now, know this. Kali has fallen like a broken wall - may the age of truth arise!

சொற்பொருள் Word by word

பராசக்தி
the supreme Power, the Goddess
கடைக்கண்
the corner of the eye, gracious glance
யுகப்புரட்சி
revolution of an age
கொடுங்காலன்
the cruel god of death
வாகு
arm, shoulder
திரணம்
a straw, a trifle
அரணி
thicket
சிவேரியா
Siberia
மும்மை
the three worlds
குடியரசு
republic
கிருதயுகம்
the Krita age, the age of truth

விளக்கம்

1917 ருஷியப் புரட்சியைக் கொண்டாடும் பாட்டு; ஜாரின் வீழ்ச்சியைப் 'புதிய ருஷியா' என்று வரவேற்கிறது.

முதல் பாதி ஜாரின் கொடுமையின் பட்டியல்: உழுபவனுக்கு உணவில்லை, பொய்யர்க்குச் செல்வம், உண்மை சொல்பவனுக்குச் சிறை, சைபீரியா. இது பாரதியின் மிக நேரடியான அரசியல் விமர்சனம்.

'பராசக்தியின் கடைக்கண்' - புரட்சியை ஒரு தெய்வீக நிகழ்வாகக் காணும் பார்வை. அதாவது வரலாறு தானாக நடப்பது அன்று; அநீதி மிகும்போது அம்மை கண் வைக்கிறாள்.

கடைசி வரி 'கிருதயுகம் எழுக மாதோ' - சத்திய யுகம் பிறக்கிறது. ருஷியாவைப் பற்றிய பாட்டு இந்தியாவிற்கான நம்பிக்கையாக முடிகிறது.

Explanation

A song celebrating the Russian revolution of 1917, greeting the fall of the Tsar as a 'new Russia'.

The first half is a list of the Tsar's cruelties: no food for the ploughman, wealth for liars, prison for the truthful, Siberia. It is Bharathiyar's most direct political indictment.

'The gracious glance of the supreme Power' sees revolution as a divine event: history does not simply happen, the Mother opens her eye when injustice overflows.

The closing line - may the age of truth arise - turns a song about Russia into a hope for India.

சிந்தனைக்கு

ஒரு புரட்சியைத் தெய்வீக நிகழ்வாகப் பார்ப்பது அதன் மனித உழைப்பை மறைக்குமா, அல்லது மேலும் உயர்த்துமா?

To reflect on

Seeing a revolution as a divine event - does that hide the human labour behind it, or lift it higher?