மாஜினியின் சபதம் பிரதிக்கினை
பேரருட் கடவுள் திருவடியாணை,பிறப்பளித்து எமையெலாம் புரக்கும்தாரணி விளக்காம் என்னருநாட்டின்தவப்பெயரதன்மிசை ஆணை,பாரவெந்துயர்கள் தாய்த்திரு நாட்டின்பணிக்கெனப் பலவிதத் துழன்றவீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்தவிழுமியோர் திருப்பெயராணை.ஈசன் இங்கெனக்கும் என்னுடன் பிறந்தோர்யாவர்க்கும் இயற்கையின் அளித்ததேசம் இன்புறுவான் எனக்கவன் பணித்தசீருயரறங்களினாணை.மாசறு மென்நற்றாயினைப் பயந்து என்வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின்ஆசை இங்கெவர்க்கும் இயற்கையாம் அன்றோஅத்தகையன்பின்மீதாணை.தீயன புரிதல் முறைதவிருடைமை,செம்மைதீர் அரசியல், அநீதிஆயவற்றென்னஞ் சியற்கையின் எய்தும்அரும்பகை அதன்மிசையாணை,தேயமொன்றற்றேன் நற்குடிக்குரியஉரிமைகள் சிறிதெனு மில்லேன்,தூயசீருடைத்தாம் சுதந்திரத்துவசம்துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன்.மற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்துமண்டுமென் வெட்கத்தினாணை.முற்றிய வீடு பெறுகெனப் படைப்புற்றுஅச்செயல் முடித்திட வலிமைஅற்றதால் மறுகும் என்னுயிர்க்கதனில்ஆர்ந்த பேராவலினாணை.நற்றவம் புரியப் பிறந்த தாயினும் இந்நலனறு மடிமையின் குணத்தால்வலியிழந்திருக்கும் என்னுயிர்க் கதன்கண்வளர்ந்திடும் ஆசைமீதாணை.மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்மாண்பதன் நினைவின்மீதாணை,மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்வீழ்ச்சியினுணர்ச்சிமீதாணை.பொலிவுறு புதல்வர் தூக்கினிலிறந்தும்புன்சிறைக்களத்திடை அழிந்தும்வேற்று நாடுகளில் அவர் துரத்துண்டும்மெய்குலைந்திறந்துமே படுதல்ஆற்றகிலாராய் எம்மருநாட்டின்அன்னைமார் அழுங்கண்ணீராணை.மாற்றலர் எங்கள் கோடியர்க்கிழைக்கும்வகுக்கொணாத் துயர்களினாணை.ஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டேயான்செயும் சபதங்கள் இவையே.கடவுள் இந்நாட்டிற்கீந்ததோர் புனிதக்கட்டளை தன்னினும் அதனைத்திடனுற நிறுவ முயலுதல் மற்றித்தேசத்தே பிறந்தவர்க்கெல்லாம்உடனுறு கடமையாகுமென்பதினும்ஊன்றிய நம்புதல் கொண்டும்,தடநிலமிசையோர் சாதியை இறைவன்சமைகெனப் பணிப்பனேல் அதுதான்சமைதலுக்குரிய திறமையும் அதற்குத்தந்துளன் என்பதையறிந்தும்,அமையுமத் திறமை ஜனங்களைச் சாரும்அன்னவர் தமக்கெனத் தாமேதமையலதெவர்கள் துணையுமில்லாதுதம்மருந்திறமையைச் செலுத்தல்சுமையெனப் பொறுப்பின் செயத்தினுக்கதுவேசூழ்ச்சியாம் என்பதையறிந்தும்,கருமமுஞ் சொந்த நலத்தினைச் சிறிதும்கருதிடாது அளித்தலுந் தானேதருமமாம் என்றும், ஒற்றுமையோடுதளர்விலாச் சிந்தனை கொளலேபெருமைகொள் வலியாம் என்றுமே மனத்தில்பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும்,அருமைசால் சபதமிவை புரிகின்றேன்ஆணைகள் அனைத்தும் முற்கொண்டே.என்னுடனொத்த தருமத்தையேற்றார்இயைந்த இவ்வாலிபர் சபைக்கேதன்னுடல், பொருளும், ஆவியுமெல்லாம்தத்தமா வழங்கினேன்; எங்கள்பொன்னுயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய்ச்சுதந்திரம் பூண்டதுவாகிஇன்னுமோர் நாட்டின் சார்விலதாகிக்குடியரசியன்றதாய் இலக.இவருடன் யானும் இணங்கியே யென்றும்இதுவலாற் பிறிதொழிலிலனாய்த்தவமுறு முயற்சி செய்திடக் கடவேன்.சந்ததஞ் சொல்லினால், எழுத்தால்,அவமறு செய்கையதனினால் இயலும்அளவெல்லாம் எம்மவர் இந்தநவமுறு சபையின் ஒருபெருங்கருத்தைநன்கிதன் அறிந்திடப் புரிவேன்.உயருமிந்நோக்கம் நிறைவுற இணக்கம்ஒன்றுதான் மார்க்கமென்பதுவும்செயம்நிலையாகச் செய்திடற்கறமேசிறந்ததோர் மார்க்கமென்பதுவும்,பெயர்வர எங்கள் நாட்டினர் மனத்தில்பேணுமாறு இயற்றிடக் கடவேன்,அயலொரு சபையில் இன்றுதோறென்றும்அமைந்திடாதிருந்திடக் கடவேன்.எங்கள்நாட்டொருமை என்னொடுங் குறிக்கும்இச்சபைத் தலைவராயிருப்போர்தங்கள் ஆக்கினைகள் அனைத்தையும் பணிந்துதலைக்கொளற்கென்றுமே கடவேன்;இங்கெனதாவி மாய்ந்திடுமேனும்இவர்பணி வெளியிடாதிருப்பேன்;துங்கமார்செயலாற் போதனையாலும்இயன்றிடுந் துணையிவர்க் களிப்பேன்.இன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன்;மெய்யிது, மெய்யிது; இவற்றைஎன்றுமே தவறிழைப்பனேல் என்னைஈசனார் நாசமே புரிக;அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க,அசத்தியப் பாதகஞ் சூழ்க,நின்றதீ எழுவாய் நரகத்தின் வீழ்ந்துநித்தம் யான் உழலுக மன்னோ!வேறுபேசி நின்ற பெரும்பிரதிக்கினைமாசிலாது நிறைவுறும் வண்ணமேஆசி கூறி அருளு! ஏழையேற்குஈசன் என்றும் இதயத்திலகியே.
paerarut katavul thiruvatiyaanai, pirappaliththu emaiyelaam purakkum thaarani vilakkaam ennarunaattin thavappeyarathanmisai aanai, paaraventhuyarkal thaayththiru naattin panikkenap palavithath thuzhanra veerar, namnaatu vaazhkena veezhntha vizhumiyoar thiruppeyaraanai. eesan ingkenakkum ennutan piranthoar yaavarkkum iyarkaiyin aliththa thaesam inpuruvaan enakkavan paniththa seeruyararangkalinaanai. maasaru mennarraayinaip payanthu en vazhikkelaam uraiyulaam naattin aasai ingkevarkkum iyarkaiyaam anroa aththakaiyanpinmeethaanai. theeyana purithal muraithavirutaimai, semmaitheer arasiyal, aneethi aayavarrennanj siyarkaiyin eythum arumpakai athanmisaiyaanai, thaeyamonrarraen narkutikkuriya urimaikal sirithenu millaen, thooyaseerutaiththaam suthanthiraththuvasam thulangkilaa naattitaip piranthaen. marrai naattavarmun ninritum poazhthu mantumen vetkaththinaanai. murriya veetu perukenap pataippurru asseyal mutiththita valimai arrathaal marukum ennuyirkkathanil aarntha paeraavalinaanai. narravam puriyap pirantha thaayinum in nalanaru matimaiyin kunaththaal valiyizhanthirukkum ennuyirk kathankan valarnthitum aasaimeethaanai. malivuru sirappin emmutai munnoar maanpathan ninaivinmeethaanai, melivutan innaal yaangkal veezhnthirukkum veezhssiyinunarssimeethaanai. polivuru puthalvar thookkiniliranthum punsiraikkalaththitai azhinthum vaerru naatukalil avar thuraththuntum meykulainthiranthumae patuthal aarrakilaaraay emmarunaattin annaimaar azhungkanneeraanai. maarralar engkal koatiyarkkizhaikkum vakukkonaath thuyarkalinaanai. aerra ivvaanai yanaiththumaer kontae yaanseyum sapathangkal ivaiyae. katavul innaattirkeenthathoar punithak kattalai thanninum athanaith thitanura niruva muyaluthal marrith thaesaththae piranthavarkkellaam utanuru katamaiyaakumenpathinum oonriya namputhal kontum, thatanilamisaiyoar saathiyai iraivan samaikenap panippanael athuthaan samaithalukkuriya thiramaiyum atharkuth thanthulan enpathaiyarinthum, amaiyumath thiramai janangkalais saarum annavar thamakkenath thaamae thamaiyalathevarkal thunaiyumillaathu thammarunthiramaiyais seluththal sumaiyenap poruppin seyaththinukkathuvae soozhssiyaam enpathaiyarinthum, karumamunj sontha nalaththinais sirithum karuthitaathu aliththalun thaanae tharumamaam enrum, orrumaiyoatu thalarvilaas sinthanai kolalae perumaikol valiyaam enrumae manaththil peyarnthitaa uruthimaer kontum, arumaisaal sapathamivai purikinraen aanaikal anaiththum murkontae. ennutanoththa tharumaththaiyaerraar iyaintha ivvaalipar sapaikkae thannutal, porulum, aaviyumellaam thaththamaa vazhangkinaen; engkal ponnuyar naattai orrumaiyutaiththaays suthanthiram poontathuvaaki innumoar naattin saarvilathaakik kutiyarasiyanrathaay ilaka. ivarutan yaanum inangkiyae yenrum ithuvalaar pirithozhililanaayth thavamuru muyarsi seythitak katavaen. santhathanj sollinaal, ezhuththaal, avamaru seykaiyathaninaal iyalum alavellaam emmavar intha navamuru sapaiyin oruperungkaruththai nankithan arinthitap purivaen. uyaruminnoakkam niraivura inakkam onruthaan maarkkamenpathuvum seyamnilaiyaakas seythitarkaramae siranthathoar maarkkamenpathuvum, peyarvara engkal naattinar manaththil paenumaaru iyarritak katavaen, ayaloru sapaiyil inruthoarenrum amainthitaathirunthitak katavaen. engkalnaattorumai ennotung kurikkum issapaith thalaivaraayiruppoar thangkal aakkinaikal anaiththaiyum paninthu thalaikkolarkenrumae katavaen; ingkenathaavi maaynthitumaenum ivarpani veliyitaathiruppaen; thungkamaarseyalaar poathanaiyaalum iyanritun thunaiyivark kalippaen. inrum ennaalum ivaiseyath thavaraen; meyyithu, meyyithu; ivarrai enrumae thavarizhaippanael ennai eesanaar naasamae purika; anriyum makkal veruththenai ikazhka, asaththiyap paathakanj soozhka, ninrathee ezhuvaay narakaththin veezhnthu niththam yaan uzhaluka mannoa! vaeru paesi ninra perumpirathikkinai maasilaathu niraivurum vannamae aasi koori arulu! aezhaiyaerku eesan enrum ithayaththilakiyae.
பொருள்
பேரருட் கடவுள் திருவடியாணை; பிறப்பளித்து எமையெலாம் புரக்கும் தாரணி விளக்காம் என்னருநாட்டின் தவப்பெயரதன்மிசை ஆணை; பாரவெந்துயர்கள் தாய்த்திரு நாட்டின் பணிக்கெனப் பலவிதம் துழன்ற வீரர், 'நம் நாடு வாழ்க' என வீழ்ந்த விழுமியோர் திருப்பெயராணை. ஈசன் இங்கு எனக்கும் என்னுடன் பிறந்தோர் யாவர்க்கும் இயற்கையின் அளித்த தேசம் இன்புறுவான் எனக்கு அவன் பணித்த சீருயர் அறங்களினாணை. மாசறு மென் நற்றாயினைப் பயந்து என் வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின் ஆசை இங்கு எவர்க்கும் இயற்கையாம் அன்றோ - அத்தகைய அன்பின்மீதாணை. தீயன புரிதல், முறைதவிர் உடைமை, செம்மைதீர் அரசியல், அநீதி ஆயவற்றை என் இயற்கையின் எய்தும் அரும்பகை அதன்மிசை ஆணை; தேயம் ஒன்று அற்றேன், நற்குடிக்குரிய உரிமைகள் சிறிது எனவும் இல்லேன், தூய சீருடைத்தாம் சுதந்திரத் துவசம் துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன்; மற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து மண்டும் என் வெட்கத்தினாணை. முற்றிய வீடு பெறுக எனப் படைப்புற்று அச்செயல் முடித்திட வலிமை அற்றதால் மறுகும் என்னுயிர்க்கு அதனில் ஆர்ந்த பேராவலினாணை. நற்றவம் புரியப் பிறந்த தாயினும் இந்நலனறு மடிமையின் குணத்தால் வலியிழந்திருக்கும் என்னுயிர்க்கு அதன்கண் வளர்ந்திடும் ஆசைமீதாணை. மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர் மாண்பதன் நினைவின்மீதாணை; மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியின் உணர்ச்சிமீதாணை. பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும், புன்சிறைக் களத்திடை அழிந்தும், வேற்று நாடுகளில் அவர் துரத்துண்டும், மெய்குலைந்து இறந்துமே படுதல் ஆற்றகிலாராய் எம்மருநாட்டின் அன்னைமார் அழுங்கண்ணீராணை; மாற்றலர் எங்கள் கோடியர்க்கு இழைக்கும் வகுக்கொணாத் துயர்களினாணை. ஏற்ற இவ்வாணை அனைத்தும் மேற்கொண்டே யான் செயும் சபதங்கள் இவையே. கடவுள் இந்நாட்டிற்கு ஈந்ததோர் புனிதக் கட்டளைதன்னினும், அதனைத் திடனுற நிறுவ முயலுதல் மற்றித் தேசத்தே பிறந்தவர்க்கெல்லாம் உடனுறு கடமையாகும் என்பதினும் ஊன்றிய நம்புதல் கொண்டும், தடநிலமிசையோர் சாதியை இறைவன் சமை எனப் பணிப்பனேல் அதுதான் சமைதலுக்குரிய திறமையும் அதற்குத் தந்துளன் என்பதையறிந்தும், அமையும் அத்திறமை ஜனங்களைச் சாரும் அன்னவர் தமக்கெனத் தாமே தமையலது எவர்கள் துணையும் இல்லாது தம்மருந்திறமையைச் செலுத்தல் சுமையெனப் பொறுப்பின் செயத்தினுக்கு அதுவே சூழ்ச்சியாம் என்பதையறிந்தும், கருமமும் சொந்த நலத்தினைச் சிறிதும் கருதிடாது அளித்தலும் தானே தருமமாம் என்றும், ஒற்றுமையோடு தளர்விலாச் சிந்தனை கொளலே பெருமைகொள் வலியாம் என்றுமே மனத்தில் பெயர்ந்திடா உறுதிமேற்கொண்டும், அருமைசால் சபதம் இவை புரிகின்றேன், ஆணைகள் அனைத்தும் முற்கொண்டே. என்னுடனொத்த தருமத்தையேற்றார் இயைந்த இவ்வாலிபர் சபைக்கே தன்னுடல், பொருளும், ஆவியும் எல்லாம் தத்தமா வழங்கினேன்; எங்கள் பொன்னுயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய்ச் சுதந்திரம் பூண்டதுவாகி, இன்னும் ஓர் நாட்டின் சார்விலதாகிக் குடியரசு இயன்றதாய் இலக. இவருடன் யானும் இணங்கியே என்றும் இதுவலாற் பிறிதொழில் இலனாய்த் தவமுறு முயற்சி செய்திடக் கடவேன்; சந்ததம் சொல்லினால், எழுத்தால், அவமறு செய்கையதனினால் இயலும் அளவெல்லாம் எம்மவர் இந்த நவமுறு சபையின் ஒரு பெருங்கருத்தை நன்கு இதன் அறிந்திடப் புரிவேன். உயரும் இந்நோக்கம் நிறைவுற இணக்கம் ஒன்றுதான் மார்க்கம் என்பதுவும், செயம்நிலையாகச் செய்திடற்கு அறமே சிறந்ததோர் மார்க்கம் என்பதுவும், பெயர்வர எங்கள் நாட்டினர் மனத்தில் பேணுமாறு இயற்றிடக் கடவேன்; அயலொரு சபையில் இன்றுதோறு என்றும் அமைந்திடாது இருந்திடக் கடவேன். எங்கள் நாட்டொருமை என்னொடுங் குறிக்கும் இச்சபைத் தலைவராய் இருப்போர் தங்களாக்கினைகள் அனைத்தையும் பணிந்து தலைக்கொளற்கு என்றுமே கடவேன்; இங்கு எனது ஆவி மாய்ந்திடுமேனும் இவர்பணி வெளியிடாது இருப்பேன்; துங்கமார் செயலால் போதனையாலும் இயன்றிடும் துணை இவர்க்கு அளிப்பேன். இன்றும் எந்நாளும் இவை செயத் தவறேன்; மெய்யிது, மெய்யிது; இவற்றை என்றுமே தவறிழைப்பனேல் என்னை ஈசனார் நாசமே புரிக; அன்றியும் மக்கள் வெறுத்து எனை இகழ்க, அசத்தியப் பாதகம் சூழ்க, நின்ற தீ எழுவாய் நரகத்தின் வீழ்ந்து நித்தம் யான் உழலுக மன்னோ! பேசி நின்ற பெரும்பிரதிக்கினை மாசிலாது நிறைவுறும் வண்ணமே ஆசி கூறி அருளு! ஏழையேற்கு ஈசன் என்றும் இதயத்திலகியே.
Meaning
Upon the sacred feet of the God of great grace; upon the ascended name of that penance-place, my dear land, which is the lamp of the earth and which gave us birth and cherishes us all; upon the holy names of the heroes who toiled in a hundred ways for the service of the motherland in her fierce sorrows, and of the great who fell crying 'may our land live': these are my oaths. Upon the noble virtues the Lord laid on me, the land he gave by nature to me and to all my brothers, that I should make it happy; and upon that love which is natural to everyone here for the land that, having borne my stainless gentle mother, is a dwelling for all my ways - upon such love; upon the great enemy, which is the doing of evil, possession that breaks the law, rule without justice and injustice, that nature of mine must reach; without a single country of my own, without even the smallest of the rights of a good citizen, I was born in a land whose proud banner of freedom does not waver - and upon my blushes that rise when I stand before other nations; upon the deep longing of my soul, which has taken up the task of winning the fullness of salvation but lacks the strength to finish it; upon the desire growing in my soul, which, though born for high penance, has lost its strength through the habit of this joyless subjection; upon the memory of the worth of our ancestors of abundant glory; upon the feeling of the fall into which we have sunk today in weakness; upon the weeping of the mothers of our land, who cannot bear that their shining sons died on the gallows, perished in the field of petty prisons, were hunted in foreign lands and died with broken bodies; and upon the countless and unmeasured sorrows the enemy inflicts on our millions - having taken up all these oaths, these are the vows I make. Because the holy commandment God gave this land must be firmly established, and because it is the bounden duty of all born in this land, holding this belief deeply; knowing that if the Lord bids the race of men on this wide earth to be one, that fitness for oneness is given to them too; knowing that the fitness rests with the people themselves, and that for them to put forth their own strength with no other help is a burden only to those who will not bear it, and that this is the way of action; knowing too that to give one's work without the least thought of self is itself dharma, and that to think without slackening, in unity, is the strength that wins greatness - holding this resolve that never shifts, I make these precious vows, all these oaths first taken. To this young society of men who have taken up the same dharma as I, I have given my body, my wealth and my whole spirit. May our golden land become one in unity, put on freedom, lean on no other land, and shine as an accomplished republic. With these men I join, and from this alone, with no other work, I will labour with the zeal of penance. By speech, by writing, by deed, to the full measure of what our people can do, I will make the one great purpose of this new society understood. That harmony is the only way for this high aim to be fulfilled, and that dharma is the best way to make action stand firm - this I will bring about so that it may take root in the minds of our countrymen; and I will never let myself be bound to any other society. To those who stand as leaders of this society, which marks the unity of our land with me, I will bow to all their commands and take them as my head; though my life should ebb away here, I will not let their command go forth; and to the limit of my power by upright deed and by teaching, I will give them help. Today and every day I shall not fail in these; this is true, this is true; and if ever I fail in them, may the Lord work my ruin; and besides, may people hate and despise me, may the sin of falsehood surround me, may I fall into that hell which is a standing fire, and wander there for ever! Again: grant your blessing, O Lord who are for ever the crest-jewel of my heart, that this great resolve I have spoken may be fulfilled without stain.
சொற்பொருள் Word by word
- ஆணை
- oath
- தாரணி
- the earth
- துழலுதல்
- to toil, to labour
- விழுமியோர்
- the noble, the great
- மடிமை
- subjection, sloth
- துவசம்
- banner, flag
- கோடியர்
- millions
- அழுங்கண்ணீர்
- weeping, brimming tears
- பிரதிக்கினை
- resolve, vow
- துங்கமார்
- upright, noble
விளக்கம்
மாஜினியின் 'இளைய இத்தாலி' சபையில் அவர் எடுத்த சபதத்தைத் தழுவி எழுதியது; பாரதிக்கு இது இந்தியாவிற்கான சபதம். ஒவ்வொரு பத்தியும் 'ஆணை' என்று முடிகிறது - பேரருட் கடவுள், தாய்நாடு, வீரர், முன்னோர், அன்னையர் கண்ணீர்.
'யான் செயும் சபதங்கள் இவையே' என்று ஆணைகள் முடிந்த பின், சபதங்கள் தொடங்குகின்றன: புனிதக் கட்டளையை நிறுவுதல், மக்களே தம் வலிமையை எடுத்தாளுதல், சுயநலமின்றி உழைத்தல், ஒற்றுமை. அதாவது ஆணை என்பது உணர்ச்சி அன்று, ஒரு வேலைத்திட்டம்.
கடைசிப் பகுதியில் சபையின் தலைவரிடம் முழுப் பணிவு - இது மாஜினியின் கார்பனரி அமைப்பின் கட்டுப்பாடு. பாரதியார் அதை இந்திய இளைஞர் சபைக்கு ஏற்றுகிறார்.
முடிவில் தன் ஆவி மாய்ந்தாலும் தலைவர் பணியை வெளியிடமாட்டேன் என்பது கடுமையான வாக்கு; அதற்குப் பின் வரும் சாபம் அதை முத்திரையிடுகிறது.
Explanation
Modelled on the oath Mazzini took in the society of Young Italy; for Bharathiyar it becomes an oath for India. Each paragraph ends with 'oath' - upon the God of grace, the motherland, the heroes, the ancestors, the tears of the mothers.
After the oaths come the vows: to establish the holy commandment, to let the people put forth their own strength, to work without self-interest, to keep unity. An oath here is not a feeling but a programme of work.
The last section gives total obedience to the leader of the society, which is the discipline of Mazzini's Carbonari, and Bharathiyar adapts it to a society of Indian youth.
The vow not to let the leader's command go forth even if his life should ebb away is severe, and the self-curse that follows seals it.
சிந்தனைக்கு
ஒரு சபதம் எந்த அளவு வரை ஒரு மனிதனைக் கட்டுப்படுத்த முடியும் - இந்தப் பாட்டின் சபதங்களில் எது மிகக் கடினமானது?
To reflect on
How far can a vow bind a person - which of these vows is the hardest to keep?