பாடல் 9 · பல்வகைப் பாடல்கள் · ஔவையார்

Palvagai Padalgal 9 · புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோ மே. பகை நடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்றான். (பகைவ)

புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோ மே. பகை நடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்றான். (பகைவ)சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ் செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே! குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக் கொடி வளராதோ?-நன்னெஞ்சே! (பகைவ)உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ,-நன்னெஞ்சே! தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனோமோ?நன்னெஞ்சே! (பகைவ)வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே! தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர் போலவந் தானுமவன்-நன்னெஞ்சே! நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே! (பகைவ)தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே! அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள் அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! (பகைவ)

pukai natuvinil theeyiruppathaip poomiyir kantoa mae-nannenjsae! poomiyir kantoa mae. pakai natuvinil anpuru vaananam paraman vaazhkinraan -nannenjsae! paraman vaazhkinraan. (pakaiva) sippiyilae nalla muththu vilainthitunj seythi yariyaayoa?-nannenjsae! kuppaiyilae malar konjsung kurukkaththik koti valaraathoa?-nannenjsae! (pakaiva) ulla niraivilor kallam pukunthitil ullam niraivaamoa,-nannenjsae! thelliya thaenilor sirithu nanjsaiyum saerththapin thaenoamoa?nannenjsae! (pakaiva) vaazhvai ninaiththapin thaazhvai ninaippathu vaazhvukku naeraamoa?-nannenjsae! thaazhvu pirarkkennath thaanazhivaa nenra saaththirang kaelaayoa?-nannenjsae! (pakaiva) poarukku vanthang kethirththa kavuravar poalavan thaanumavan-nannenjsae! naeruk karussunan thaerir kasaikontu ninrathung kannananroa?-nannenjsae! (pakaiva) thinna varumpuli thannaiyum anpotu sinthaiyir poarrituvaay-nannenjsae! annai paraasakthi yavvuru vaayinal avalaik kumpituvaay-nannenjsae! (pakaiva)