பாடல் 25 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Deiva Padalgal 25 · ஓம்

ஓம்சக்திசக்தி சக்தியென்று சொல்லு-கெட்டசஞ்சலங்கள் யாவினையும் கொல்லுசக்திசக்தி சக்தியென்று சொல்லி-அவள்சந்நிதியி லேதொழுது நில்லுஓம்சக்திமிசை பாடல்பல பாடு-ஓம்சக்திதருஞ் செய்கை நிலந் தனிலே-சிவசக்திவெறி கொண்டுகளித் தாடுஓம்சக்திதனை யேசரணங் கொள்ளு என்றும்சாவினுக்கொ ரச்சமில்லை தள்ளுசக்திபுக ழாமமுதை அள்ளு-மதுதன்னிலினிப் பாகுமந்தக் கள்ளுனஓம்சக்திசெய்யும் புதுமைகள் பேசு-நல்லசக்தியற்ற பேடிகளை ஏசுசக்திதிருக் கோயிலுள்ள மாக்கி-அவள்தந்திடுநற் குங்குமத்தைப் பூசுஓம்சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை -இதைச்சார்ந்துநிற்ப தேநமக்கோ ருய்கைசக்தியெனும் இன்பமுள்ள பொய்கை-அதில்தண்ணமுத மாரிநித்தம் பெய்கைஓம்சக்திசக்தி சக்தியென்று நாட்டு-சிவசக்தியருள் பூமிதனில் காட்டுசக்திபெற்ற நல்லநிலை நிற்பார்-புவிச்சாதிகளெல் லாமதனைக் கேட்டுஓம்சக்திசக்தி சக்தியென்று முழங்கு-அவள்தந்திரமெல் லாமுலகில் வழங்குசக்தியருள் கூடிவிடு மாயின்-உயிர்சந்ததமும் வாழும்நல்ல கிழங்குஓம்சக்திசெய்யுந் தொழில்களை எண்ணு நித்தம்சக்தியுள்ள தொழில்பல பண்ணுசக்திதனை யேயிழந்து விட்டால்-இங்குசாவினையும் நோவினையும் உண்ணுஓம்சக்தியரு ளாலுலகில் ஏறு-ஒருசங்கடம்வந் தாலிரண்டு கூறுசக்திசில சோதனைகள் செய்தால்-அவள்தண்ணருளென் றேமனது தேறுஓம்சக்திதுணை என்று நம்பி வாழ்த்து-சிவசக்திதனையே அகத்தில் ஆழ்த்துசக்தியும் சிறப்பும் மிகப் பெறுவாய்-சிவசக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து

oam, sakthisakthi sakthiyenru sollu-ketta sanjsalangkal yaavinaiyum kollu sakthisakthi sakthiyenru solli-aval sannithiyi laethozhuthu nillu. oam,sakthimisai paatalpala paatu-oam sakthitharunj seykai nilan thanilae-siva sakthiveri kontukalith thaatu. oam,sakthithanai yaesaranang kollu enrum saavinukko rassamillai thallu, sakthipuka zhaamamuthai allu-mathu thannilinip paakumanthak kalluna. oam, sakthiseyyum puthumaikal paesu-nalla sakthiyarra paetikalai aesu sakthithiruk koayilulla maakki-aval thanthitunar kungkumaththaip poosu. oam, sakthiyinais saernthathinthas seykai -ithais saarnthunirpa thaenamakkoa ruykai sakthiyenum inpamulla poykai-athil thannamutha maariniththam peykai. oam,sakthisakthi sakthiyenru naattu-siva sakthiyarul poomithanil kaattu sakthiperra nallanilai nirpaar-puvis saathikalel laamathanaik kaettu. oam,sakthisakthi sakthiyenru muzhangku-aval thanthiramel laamulakil vazhangku sakthiyarul kootivitu maayin-uyir santhathamum vaazhumnalla kizhangku oam,sakthiseyyun thozhilkalai ennu niththam sakthiyulla thozhilpala pannu sakthithanai yaeyizhanthu vittaal-ingku saavinaiyum noavinaiyum unnu. oam, sakthiyaru laalulakil aeru-oru sangkatamvan thaalirantu kooru sakthisila soathanaikal seythaal-aval thannarulen raemanathu thaeru. oam,sakthithunai enru nampi vaazhththu-siva sakthithanaiyae akaththil aazhththu sakthiyum sirappum mikap peruvaay-siva sakthiyarul vaazhkavenru vaazhththu!