பாடல் 34 · தெய்வப் பாடல்கள் · சுப்ரமணிய பாரதியார்

Deiva Padalgal 34 · 34. ஊழிக் கூத்து

34. ஊழிக் கூத்துவெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீஅன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னைஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கேமுந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடேமுடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னைபாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கேஊழாம் பேய்தான்"ஓஹோ ஹோ"வென் றலைய-வெறித்துறுமித் திரிவாய்செருவெங் கூத்தே புரிவாய்அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னைசத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கேஎத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானேஎரியுங் கோலங் கண்டே சாகும் காலம்அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னைகாலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கேகடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னை

34. oozhik kooththu veliyi liraththak kaliyotu pootham paata-paattin atipatu porulin atipatu moliyir kootak-kalith thaatung kaalee!saamun tee!kang kaalee! annai!annai!aatung kooththai naatas seythaay ennai. ainthuru pootham sinthip poayon raakap-pinnar athuvum sakthik kathiyil moozhkip poaka-angkae munthurum oliyir sinthai nazhuvum vaekath-thoatae mutiyaa natanam purivaay atuthee sorivaay! annai!annai!aatung kooththai naatas seythaay ennai. paazhaam veliyum patharip poaymey kulaiyas-salanam payilum sakthik kulamum vazhikal kalaiya-angkae oozhaam paeythaan"oahoa hoa"ven ralaiya;-verith thurumith thirivaay,seruveng kooththae purivaay! annai!annai!aatung kooththai naatas seythaay ennai. saththip paeythaan thalaiyotu thalaikal muttis-sattas satasata sattenutaipatu thaalangkotti-angkae eththik kinilum ninvizhi yanal poay ettith-thaanae eriyung koalang kantae saakum kaalam. annai!annai!aatung kooththai naatas seythaay ennai. kaalath thotunir moolam patumoo vulakum-angkae katavul moanath tholiyae thaniyaa yilakum-sivan koalang kantun kanalsey sinamum vilakum-kaiyaik konjsith thotuvaay aananthakkooth thituvaay! annai!annai!aatung kooththai naatas seythaay ennai.