பாடல் 1 · பல்வகைப் பாடல்கள் · ஔவையார்

Palvagai Padalgal 1 · பக்தியினாலே-இந்தப் பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ! சித்தந் தெளியும்,-இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும்,-நல்ல வீர ருறவு கிடைக்கும்,மனத்திடைத் தத்துவ முண்டாம்,நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். (பக்தி)

பக்தியினாலே-இந்தப் பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ! சித்தந் தெளியும்,-இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும்,-நல்ல வீர ருறவு கிடைக்கும்,மனத்திடைத் தத்துவ முண்டாம்,நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். (பக்தி)காமப் பிசாசைக்-குதி கால்கொண் டடித்து விழுந்திடலாகும்;இத் தாமசப் பேயைக்-கண்டு தாக்கி மடித்திட லாகும்;எந்நேரமும் தீமையை எண்ணி-அஞ்சுந் தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந் நாம மில்லாதே-உண்மை நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும். (பக்தி)ஆசையைக் கொல்வோம்,-புலை அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்ட பாச மறுப்போம்,-இங்குப் பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை மோசஞ் செய்யாமல்-உண்மை முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர் ஈசனைப் போற்றி-இன்பம் யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம். (பக்தி)சோர்வுகள் போகும்,-பொய்ச் சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெறலாகும்,நற் பார்வைகள் தோன்றும்-மிடிப் பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல சேர்வைகள் சேரும்,-பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும், தீர்வைகள் தீரும்-பிணி தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும். (பக்தி)கல்வி வளரும்,-பல காரியங் கையுறும்,வீரிய மோங்கிடும், அல்ல லொழியும்,-நல்ல ஆண்மை யுண்டாகும்,அறிஉ தெளிந்திடும், சொல்லுவ தெல்லாம்-மறைச் சொல்லினைப் போலப் பயனுள தாகும்,மெய் வல்லமை தோன்றும்,-தெய்வ வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திடலாம்-உண்மை. (பக்தி)சோம்ப லழியும்-உடல் சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங் கூம்புத லின்றி நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும், வீம்புகள் போகும்-நல்ல மேன்மை யுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப் பாம்பு மடியும்-மெய்ப் பரம் வென்று நல்ல நசந்ததி வாழும்,-வெறுஞ் சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும், 'இந்தப் புவிக் கிரகம் என்றும் ஆகாய் இயற்கையின் உண்மையார் தமது எண்ணம் எழும்பும் நிலைமைக்கு உண்மை வழிகாட்டும். (பக்தி)

pakthiyinaalae-inthap paarini leythitum maenmaikal kaelatee! siththan theliyum,-ingku seykai yanaiththilum semmai piranthitum, viththaikal saerum,-nalla veera ruravu kitaikkum,manaththitaith thaththuva muntaam,nenjsir sanjsalam neengki uruthi vilangkitum. (pakthi) kaamap pisaasaik-kuthi kaalkon tatiththu vizhunthitalaakum;ith thaamasap paeyaik-kantu thaakki matiththita laakum;ennaeramum theemaiyai enni-anjsun thaempar pisaasaith thirukiye rinthupoyn naama millaathae-unmai naamaththi naalingku nanmai vilainthitum. (pakthi) aasaiyaik kolvoam,-pulai assaththaik konru posukkituvoam,ketta paasa maruppoam,-ingkup paarvathi sakthi vilangkuthal kantathai moasanj seyyaamal-unmai murrilung kantu vanangki vanangkiyor eesanaip poarri-inpam yaavaiyu muntu pukazhkontu vaazhkuvam. (pakthi) soarvukal poakum,-poys sukaththinaith thallis sukamperalaakum,nar paarvaikal thoanrum-mitip paampu katiththa vishamakan raenalla saervaikal saerum,-pala selvangkal vanthu makizhssi vilainthitum, theervaikal theerum-pini theerum,palapala inpangkal saernthitum. (pakthi) kalvi valarum,-pala kaariyang kaiyurum,veeriya moangkitum, alla lozhiyum,-nalla aanmai yuntaakum,ariu thelinthitum, solluva thellaam-marais sollinaip poalap payanula thaakum,mey vallamai thoanrum,-theyva vaazhkkaiyur raeyingku vaazhnthitalaam-unmai. (pakthi) soampa lazhiyum-utal sonna patikku natakkum,muti sarrung koomputha linri nalla koapuram poala nimirntha nilaiperum, veempukal poakum-nalla maenmai yuntaakip puyangkal parukkum,poyp paampu matiyum-meyp param venru nalla na santhathi vaazhum,-verunj sanjsalang kettu valimaikal saernthitum, 'inthap puvik kirakam enrum aakaay iyarkaiyin unmaiyaar thamathu ennam ezhumpum nilaimaikku unmai vazhikaattum. (pakthi)