பாடல் 39 · தேசிய கீதங்கள் · சுப்ரமணிய பாரதியார்

தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி

சொந்த நாட்டிற் பரர்க்கு அடிமை செய்தேதுஞ்சிடோம் - இனி அஞ்சிடோம்எந்த நாட்டினும் இந்த அநீதிகள்ஏற்குமோ? - தெய்வம் பார்க்குமோ?வந்தே மாதரம் என்று உயிர் போம்வரைவாழ்த்துவோம் - முடி தாழ்த்துவோம்எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்ஈனமோ? - அவமானமோ?பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டுபோகவோ? - நாங்கள் சாகவோ?அழுது கொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள்அல்லமோ? - உயிர் வெல்லமோ?நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்நாய்களோ? - பன்றிச் சேய்களோ?நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இதுநீதமோ? - பிடி வாதமோ?பாரதத்திடை அன்பு செலுத்துதல்பாபமோ? - மனஸ்தாபமோ?கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பதுகுற்றமோ? - இதில் செற்றமோ?ஒற்றுமை வழி ஒன்றே வழி என்பதுஓர்ந்திட்டோம் - நன்கு தேர்ந்திட்டோம்மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கெல்லாம்மலைவுறோம்; - சித்தம் கலைவுறோம்.சதையைத் துண்டுதுண்டாக்கினும் உன் எண்ணம்சாயுமோ? - ஜீவன் ஓயுமோ?இதயத்துள்ளே இலங்கும் மஹாபக்திஏகுமோ? - நெஞ்சம் வேகுமோ?

sontha naattir pararkku atimai seythae thunjsitoam - ini anjsitoam entha naattinum intha aneethikal aerkumoa? - theyvam paarkkumoa? vanthae maatharam enru uyir poamvarai vaazhththuvoam - muti thaazhththuvoam entham aaruyir annaiyaip poarruthal eenamoa? - avamaanamoa? pozhuthellaam engkal selvam kollai kontu poakavoa? - naangkal saakavoa? azhuthu kontiruppoamoa? aanpillaikal allamoa? - uyir vellamoa? naangkal muppathu koati janangkalum naaykaloa? - panris saeykaloa? neengkal mattum manitharkaloa? - ithu neethamoa? - piti vaathamoa? paarathaththitai anpu seluththuthal paapamoa? - manasthaapamoa? koorum engkal mitimaiyaith theerppathu kurramoa? - ithil serramoa? orrumai vazhi onrae vazhi enpathu oarnthittoam - nanku thaernthittoam marru neengkal seyyum kotumaikkellaam malaivuroam; - siththam kalaivuroam. sathaiyaith thuntuthuntaakkinum un ennam saayumoa? - jeevan oayumoa? ithayaththullae ilangkum mahaapakthi aekumoa? - nenjsam vaekumoa?

பொருள்

சொந்த நாட்டில் பரர்க்கு அடிமை செய்தே துஞ்சிடோம்; இனி அஞ்சிடோம். எந்த நாட்டினும் இந்த அநீதிகள் ஏற்குமோ? தெய்வம் பார்க்குமோ? வந்தே மாதரம் என்று உயிர் போம் வரை வாழ்த்துவோம்; முடி தாழ்த்துவோம். எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல் ஈனமோ? அவமானமோ? பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? நாங்கள் சாகவோ? அழுது கொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் அல்லமோ? உயிர் வெல்லவோ? நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ? பன்றிச் சேய்களோ? நீங்கள் மட்டும் மனிதர்களோ? இது நீதமோ? பிடிவாதமோ? பாரதத்திடை அன்பு செலுத்துதல் பாபமோ? மனஸ்தாபமோ? கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது குற்றமோ? இதில் செற்றமோ? ஒற்றுமை வழி ஒன்றே வழி என்பதை ஓர்ந்திட்டோம், நன்கு தேர்ந்திட்டோம். மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கெல்லாம் மலைவுறோம்; சித்தம் கலைவுறோம். சதையைத் துண்டுதுண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமோ? ஜீவன் ஓயுமோ? இதயத்துள்ளே இலங்கும் மஹாபக்தி ஏகுமோ? நெஞ்சம் வேகுமோ?

Meaning

We shall not die serving strangers in our own land - and from now on we shall not be afraid. Will any land accept these injustices? Will God look on? Till our life leaves us we shall cry Vande Mataram and bow our heads. Is it base, is it shameful, to honour the mother who is our very life? Shall our wealth be plundered all day long, and shall we die? Shall we sit and weep? Are we not men? Is life not worth winning? Are we thirty crore people all dogs, all pig's brood? Are you alone human? Is this justice, or is it stubbornness? Is loving Bharata a sin, a grief of the mind? Is it a crime to end the subjection you talk of - is there hatred in that? We have understood, we have chosen well, that the way of unity is the only way. For all the cruelty you do we shall not falter; our minds shall not be scattered. Even if you cut our flesh to pieces, will your purpose be bent? Will our life stop? Will the great devotion shining within the heart depart? Will the heart burn out?

சொற்பொருள் Word by word

பரர்
strangers, foreigners
மிடிமை
subjection, bondage
ஓர்த்தல்
to consider, understand
மலைவுறுதல்
to faint, to falter
கலைவுறுதல்
to be scattered, confused
மஹாபக்தி
great devotion
செற்றம்
hatred, enmity
மனஸ்தாபம்
mental grief, hurt of mind

விளக்கம்

இது முந்தைய பாட்டிற்கான நேரடி பதில் - தேசபக்தர் சிதம்பரம் பிள்ளையின் குரலில். முதல் வரியிலேயே முடிவு சொல்லப்படுகிறது: துஞ்சிடோம், இனி அஞ்சிடோம். அதாவது பயம் என்பது அரசியல் நிலை அன்று, மனநிலை.

பாட்டின் மிகச் சிறந்த பகுதி கேள்விகளால் கட்டப்பட்ட கடைசி மூன்று சரணங்கள்: நாய்களோ, பன்றிச் சேய்களோ, நீங்கள் மட்டும் மனிதர்களோ? இங்கே மனிதத்துவமே அரசியல் கோரிக்கையாகிறது.

இறுதி இரண்டு வரிகளில் உடல் அழிந்தாலும் எண்ணம் சாயாது என்ற உறுதி. அதனால் இந்தப் பாட்டின் விடுதலை உடலின் விடுதலை மட்டுமல்ல, சித்தத்தின் விடுதலையுமாகும்.

Explanation

This is the direct reply to the officer's speech, in the voice of the patriot Chidambaram Pillai. The decision is stated in the first line: we shall not die, and we shall not be afraid - fear is a state of mind, not a political condition.

The finest part is the closing run of questions: are we dogs, pig's brood, are you alone human? Here humanity itself becomes the political demand.

The last two lines hold that the purpose will not bend even if the body is cut to pieces, so the freedom in this song is not only of the body but of the will.

சிந்தனைக்கு

இரண்டு பாட்டுகளும் ஒரே நிகழ்வை இரு குரல்களில் பேசுகின்றன - இந்த இரட்டை அமைப்பு என்ன சாதிக்கிறது?

To reflect on

Two songs, one event, two voices - what does this paired structure achieve?