தொண்டு செய்யும் அடிமை
(சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்குஆங்கிலேய உத்தியோகஸ்தன் கூறுவது)நந்தனார் சரித்திரத்திலுள்ள "மாடு தின்னும் புலையா! உனக்குமார்கழித் திருநாளா?" என்ற பாட்டின் வர்ணமெட்டுதொண்டு செய்யும் அடிமை! - உனக்குசுதந்திர நினைவோடா?பண்டு கண்ட துண்டோ? - அதற்குபாத்திரமாவாயோ? (தொண்டு)ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள்சமயச் சண்டை போச்சோ?நீதி சொல்ல வந்தாய்! - கண்முன்நிற்கொணாது போடா! (தொண்டு)அச்சம் நீங்கினாயோ? - அடிமைஆண்மை தாங்கினாயோ?பிச்சை வாங்கிப் பிழைக்கும் - ஆசைபேணுதலொழித்தாயோ? (தொண்டு)கப்பலேறுவாயோ? - அடிமைகடலைத் தாண்டுவாயோ?குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமைகொற்றத் தவிசுமுண்டோ? (தொண்டு)ஒற்றுமை பயின்றாயோ? - அடிமைஉடலில் வலிமையுண்டோ?வெற்றுரை பேசாதே! அடிமை!வீரியம் அறிவாயோ? (தொண்டு)சேர்ந்து வாழுவீரோ? - உங்கள்சிறுமைக் குணங்கள் போச்சோ?சோர்ந்து வீழ்தல் போச்சோ - உங்கள்சோம்பரைத் துடைத்தீரோ? (தொண்டு)வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறிவெருவலை ஒழித்தாயோ?உள்ளது சொல்வேன் கேள் - சுதந்திரம்உனக்கில்லை மறந்திடடா! (தொண்டு)நாடு காப்பதற்கே - உனக்குஞானம் சிறிதுமுண்டோ?வீடு காக்கப் போடா! - அடிமைவேலை செய்யப் போடா! (தொண்டு)சேனை நடத்துவாயோ? - தொழும்புகள்செய்திட விரும்புவாயோ?ஈனமான தொழிலே - உங்களுக்குஇசைவதாகும் போடா! (தொண்டு)
(suyaraajyam vaentumenra paarathavaasikku aangkilaeya uththiyoakasthan kooruvathu) nanthanaar sariththiraththilulla "maatu thinnum pulaiyaa! unakku maarkazhith thirunaalaa?" enra paattin varnamettu thontu seyyum atimai! - unakku suthanthira ninaivoataa? pantu kanta thuntoa? - atharku paaththiramaavaayoa? (thontu) jaathis santai poassoa? - ungkal samayas santai poassoa? neethi solla vanthaay! - kanmun nirkonaathu poataa! (thontu) assam neengkinaayoa? - atimai aanmai thaangkinaayoa? pissai vaangkip pizhaikkum - aasai paenuthalozhiththaayoa? (thontu) kappalaeruvaayoa? - atimai katalaith thaantuvaayoa? kuppai virumpum naaykkae - atimai korrath thavisumuntoa? (thontu) orrumai payinraayoa? - atimai utalil valimaiyuntoa? verrurai paesaathae! atimai! veeriyam arivaayoa? (thontu) saernthu vaazhuveeroa? - ungkal sirumaik kunangkal poassoa? soarnthu veezhthal poassoa - ungkal soamparaith thutaiththeeroa? (thontu) vellai niraththaik kantaal - pathari veruvalai ozhiththaayoa? ullathu solvaen kael - suthanthiram unakkillai maranthitataa! (thontu) naatu kaappatharkae - unakku njaanam sirithumuntoa? veetu kaakkap poataa! - atimai vaelai seyyap poataa! (thontu) saenai nataththuvaayoa? - thozhumpukal seythita virumpuvaayoa? eenamaana thozhilae - ungkalukku isaivathaakum poataa! (thontu)
பொருள்
தொண்டு செய்யும் அடிமை! உனக்குச் சுதந்திர நினைவோடா? பண்டு கண்டது உண்டோ? அதற்குப் பாத்திரமாவாயோ? ஜாதிச் சண்டை போச்சோ? உங்கள் சமயச் சண்டை போச்சோ? நீதி சொல்ல வந்தாய்! கண்முன் நிற்கொணாது போடா! அச்சம் நீங்கினாயோ? அடிமை ஆண்மை தாங்கினாயோ? பிச்சை வாங்கிப் பிழைக்கும் ஆசை பேணுதலொழித்தாயோ? கப்பலேறுவாயோ? அடிமை கடலைத் தாண்டுவாயோ? குப்பை விரும்பும் நாய்க்கே அடிமை கொற்றத் தவிசு உண்டோ? ஒற்றுமை பயின்றாயோ? அடிமை உடலில் வலிமை உண்டோ? வெற்றுரை பேசாதே! அடிமை! வீரியம் அறிவாயோ? சேர்ந்து வாழுவீரோ? உங்கள் சிறுமைக் குணங்கள் போச்சோ? சோர்ந்து வீழ்தல் போச்சோ? உங்கள் சோம்பரைத் துடைத்தீரோ? வெள்ளை நிறத்தைக் கண்டால் பதறி வெருவலை ஒழித்தாயோ? உள்ளது சொல்வேன் கேள் - சுதந்திரம் உனக்கில்லை, மறந்திடடா! நாடு காப்பதற்கே உனக்கு ஞானம் சிறிதும் உண்டோ? வீடு காக்கப் போடா! அடிமை வேலை செய்யப் போடா! சேனை நடத்துவாயோ? தொழும்புகள் செய்திட விரும்புவாயோ? ஈனமான தொழிலே உங்களுக்கு இசைவதாகும் போடா!
Meaning
Slave who does service! Do you have the thought of freedom? Have you ever seen it before? Are you fit for it? Is the caste quarrel over? Is your religious quarrel over? You have come to talk of justice! You cannot even stand before my eyes - be off! Has your fear gone? Have you borne manliness, slave? Have you given up the desire to live by taking alms? Will you board a ship? Will you cross the sea, slave? Can a dog that loves a dung heap have the throne of empire, slave? Have you learned unity? Is there strength in your body, slave? Do not talk vain words, slave! Do you know what valour is? Will you live together? Have your small-minded habits gone? Has your sinking and falling gone - have you wiped off your laziness? When you see a white skin, do you still start and tremble - have you given that up? I will tell you the truth, listen: freedom is not for you, forget it! Do you have even a little wisdom to guard the country? Go and guard your house! Go and do your work, slave! Will you lead an army? Will you want slaves to serve you? Only base work will suit you, be off!
சொற்பொருள் Word by word
- தொண்டு
- service, bondage-service
- பாத்திரம்
- fit, worthy vessel
- வெருவல்
- trembling, dread
- தொழும்பு
- slave, slavery
- ஈனம்
- baseness, meanness
- இசைதல்
- to befit, to suit
- கொற்றத் தவிசு
- throne of empire
- சோம்பல்
- idleness
விளக்கம்
இது ஒரு நாடகப் பாட்டு: பேசுவது ஆங்கிலேய உத்தியோகஸ்தன், கேட்பவர் சுயராஜ்யம் வேண்டும் பாரதவாசி. நந்தனார் சரித்திரத்தின் 'மாடு தின்னும் புலையா! உனக்கு மார்கழித் திருநாளா?' என்ற பாட்டின் மெட்டில் அமைந்தது - அதாவது அதே இழிவுபடுத்தும் குரல்.
கேள்விகள் ஒவ்வொன்றும் ஒரு குற்றச்சாட்டு: சாதிச் சண்டை, சமயச் சண்டை, பிச்சை, பயம், சோம்பல். பாரதியார் இங்கே தன் சொந்த சமூகத்தின் குறைகளை எதிரியின் வாயில் வைத்துச் சொல்கிறார் - இது கேலி மட்டுமல்ல, கண்ணாடி.
'குப்பை விரும்பும் நாய்க்கே கொற்றத் தவிசு உண்டோ' - மிகக் கடுமையான உருவகம். அதன் பொருள்: சுதந்திரம் ஒரு பரிசு அன்று, ஒரு தகுதி; தகுதியை உருவாக்காதவரை அரசியல் விடுதலை வெறும் பட்டம்.
இந்தப் பாட்டின் நுட்பம்: ஆங்கிலேயன் சொல்வதெல்லாம் உண்மையா என்ற கேள்வியை வாசகரிடம் விட்டுவிடுவது. அதனால் பாடல் ஒரு விமர்சனமாகவும் ஒரு சுயவிமர்சனமாகவும் இரட்டை வேலை செய்கிறது.
Explanation
A dramatic lyric: a British official speaks, a Bharata-native who wants self-rule listens. It is set to the tune of Nandanar's 'Dogs' meat eater! Is this a holy day for you?' - the same voice of contempt.
Each question is an accusation: caste quarrel, religious quarrel, begging, fear, idleness. Bharathiyar puts his own society's faults in the enemy's mouth: not only mockery but a mirror.
'Can a dog that loves a dung heap sit on the throne of empire?' is the harshest image, and its meaning is that freedom is a qualification, not a gift: without building the fitness, political freedom is only a title.
The subtlety is that the poem leaves open whether everything the official says is true, so it works at once as attack and as self-criticism.
சிந்தனைக்கு
எதிரியின் வாயில் சொந்தக் குறைகளைச் சொல்வது எந்த அளவு விமர்சனம், எந்த அளவு சுயவிமர்சனம்?
To reflect on
When our own faults are spoken in an enemy's voice, how much is attack and how much self-criticism?