தேவி பாகவத புராணம், மூன்றாம் ஸ்கந்தம்மணித்வீபத்தில் மும்மூர்த்திகள்
தேவி பாகவதத்திலிருந்து. படைப்பின் தொடக்கத்தில் பிரமன், திருமால், சிவன் மூவரும் தங்கள் பணி என்ன என்று தெரியாமல் இருந்தனர். அப்போது வானிலிருந்து ஒரு விமானம் வந்து அவர்களை ஏற்றிக்கொண்டு, அமுதக் கடலின் நடுவே உள்ள மணித்வீபம் என்ற தீவுக்குச் சென்றது.
அங்கே மணிகள் நிறைந்த மாளிகையில் அன்னை புவனேசுவரி வீற்றிருந்தாள். அவள் அருகில் சென்றதும் மூவரும் பெண்களாக மாறினர். அவள் கால் நகத்தில் எல்லா உலகங்களும், தங்களையே போன்ற எண்ணற்ற பிரமர், திருமால், சிவன்களும் தெரிவதைக் கண்டு வியந்தனர்.
அன்னை அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற பணிகளைத் தந்து, அவர்களுக்குத் துணையாகக் கலைமகள், திருமகள், உமை என்ற சக்திகளையும் தந்து அனுப்பினாள். மும்மூர்த்திகளுக்கும் தாயாகவும் துணையாகவும் இருப்பவள் அவளே என்பதால், "அவர்தமக்கு அன்னையும் ஆயினள்" என்கிறார் பட்டர்.
Devi Bhagavata Purana, Book 3The Three Gods in Manidvipa
From the Devi Bhagavata Purana. At the beginning of creation, Brahma, Vishnu and Shiva did not know what their tasks were. Then a celestial vehicle came down from the sky, took them aboard and carried them to Manidvipa, the jewel island in the middle of the ocean of nectar.
There, in a palace full of gems, sat the Mother Bhuvaneshvari. As they came near her, all three were changed into women. In the nail of her toe they saw all the worlds, and countless Brahmas, Vishnus and Shivas like themselves, and they marvelled.
The Mother gave them their tasks of creation, preservation and dissolution, and sent them back with Saraswati, Lakshmi and Uma as their powers and companions. Because she is mother and companion to the three gods, Bhattar says 'she became His mother too'.