தேவி மகாத்மியம் (மார்க்கண்டேய புராணம்), அத்தியாயங்கள் 2 முதல் 4மகிடாசுரனை வென்ற மகிஷாசுரமர்த்தினி
தேவி மகாத்மியத்திலிருந்து. எருமை வடிவுடைய மகிடாசுரன் தேவர்களை வென்று இந்திரனின் அரியணையைப் பிடித்தான். அவனை எந்த ஆணும் கொல்ல முடியாது என்ற வரம் அவனுக்கு இருந்தது. துரத்தப்பட்ட தேவர்கள் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர்.
அதைக் கேட்ட மும்மூர்த்திகளின் சினத்திலிருந்தும், எல்லாத் தேவர்களின் உடலிலிருந்தும் ஒளி வெளிப்பட்டது. அந்த ஒளி ஒன்றாகச் சேர்ந்து ஒரு தேவியாக உருவெடுத்தது. ஒவ்வொரு தேவரும் தம் ஆயுதத்தை அவளுக்குத் தந்தனர். சிங்கத்தின் மேல் ஏறிப் போருக்குச் சென்ற அவள், மகிடன் எருமையிலிருந்து சிங்கமாக, யானையாக, மனிதனாக மாறி மாறிப் போரிட்டபோதும் விடவில்லை. இறுதியில் அவன் தலைமேல் காலை வைத்து அவனை வென்றாள்.
தேவர்கள் அவளைப் போற்றிப் பாடினர். "மகிடன் தலைமேல் அந்தரி" என்று பட்டர் பாடுவது இந்த வெற்றியையே.
Devi Mahatmya (Markandeya Purana), chapters 2 to 4The Goddess Slays Mahishasura
From the Devi Mahatmya. Mahishasura, the buffalo demon, defeated the gods and seized Indra's throne. He held a boon that no man could kill him. The gods, driven out, took their grievance to Brahma, Vishnu and Shiva.
From the anger of the three gods and from the bodies of all the gods, light poured out. The light joined together and took the form of a goddess. Each god gave her his own weapon. Riding a lion she went to battle. Mahisha changed again and again, from buffalo to lion, to elephant, to man, but she did not let him go. At last she set her foot on his head and defeated him.
The gods sang her praises. When Bhattar sings 'Antari, standing on the head of Mahisha', he means this victory.