பகவத் கீதை, பத்தாம் அத்தியாயம்"படைத்தலைவர்களில் நான் ஸ்கந்தன்"
பகவத் கீதையிலிருந்து. குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ச்சுனன் கண்ணனிடம் கேட்டான்: "உன்னை எந்தெந்த வடிவங்களில் நான் நினைக்க வேண்டும்?" கண்ணன் தன் பெருமைகளை விரித்துச் சொன்னார்: "நீரில் நான் சுவை; சூரிய சந்திரரில் நான் ஒளி; ஒலிகளில் நான் ஓம்; எல்லா உயிர்களின் விதையும் நானே."
அந்த நீண்ட பட்டியலின் நடுவே ஒரு வரி: "சேனானீனாம் அஹம் ஸ்கந்த:", படைத்தலைவர்களில் நான் ஸ்கந்தன். இறுதியில் கண்ணன் சொன்னார்: "எங்கெல்லாம் பெருமையும் அழகும் வலிமையும் உண்டோ, அது என் ஒளியின் ஒரு துளி என்று அறி." உருவாய், அருவாய், மணமாய், மலராய், மணியாய், ஒளியாய் எல்லாமாக நிற்கும் இறைவனை அருணகிரிநாதர் பாடும் இறுதிப் பாடலுக்கு, கீதையின் இந்த அத்தியாயம் ஒரு பழைய எதிரொலி.
Bhagavad Gita, chapter 10'Among Commanders, I Am Skanda'
From the Bhagavad Gita. On the battlefield of Kurukshetra, Arjuna asked Krishna: 'In what forms should I think of you?' Krishna described his glories: 'I am the taste in water, the light in the sun and the moon, the sacred syllable Om in all speech. I am the seed of all beings.'
In the middle of that long list comes one line: 'Senaaneenaam aham Skandah', among commanders of armies, I am Skanda. And Krishna closes: 'Wherever there is glory, beauty or power, know that it springs from a spark of my splendour.'
This chapter of the Gita is an ancient echo of Arunagirinathar's final verse, which sees the Lord as form and formless, fragrance and flower, gem and light, and then asks that the One who is all of these come close as a guru.