சிவ மகாபுராணம், ருத்ர சம்ஹிதைகாமதகனம்
சிவ புராணத்திலிருந்து. தாரகாசுரனை வெல்லச் சிவனுக்கும் பார்வதிக்கும் பிறக்கும் மகனால் மட்டுமே முடியும் என்று இருந்தது. ஆனால் சிவன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். தேவர்கள் காமதேவனை அனுப்பி, சிவன் மனத்தில் பார்வதி மேல் காதலை எழுப்பச் சொன்னார்கள்.
வசந்தத்தோடு வந்த காமன், பார்வதி மலர் கொய்து சிவனுக்குப் படைக்கும் நேரத்தில் தன் கரும்பு வில்லிலிருந்து மலர் அம்பை எய்தான். சிவனின் தியானம் கலைந்தது. அவர் நெற்றிக்கண்ணைத் திறந்தார்; அந்த நெருப்பில் காமன் சாம்பலானான். ரதி கதறி அழுதாள்.
பார்வதி அழகால் சிவனை அடைய முடியாது என்று உணர்ந்து கடுந்தவம் செய்தாள். அந்தத் தவமே சிவனை வென்றது. காமனின் அம்பால் முடியாததை அவள் அன்பு செய்தது. பின்னர் ரதியின் வேண்டுதலுக்கு இரங்கிக் காமன் உருவமில்லாமல் உயிர் பெற்றான் என்றும் புராணம் சொல்கிறது.
Shiva Purana, Rudra SamhitaThe Burning of Kama
From the Shiva Purana. Only a son born to Shiva and Parvati could defeat the demon Taraka, but Shiva was lost in deep meditation. The gods sent Kama, god of love, to stir love for Parvati in Shiva's heart.
Kama came with the spring. Just as Parvati was offering flowers to Shiva, he shot a flower arrow from his sugarcane bow. Shiva's meditation broke. He opened His third eye, and in its fire Kama was burned to ash. Rati wept aloud.
Parvati understood that she could not win Shiva by beauty, and she undertook a fierce penance. That penance won Shiva. What Kama's arrow could not do, her love did. The Purana adds that, moved by Rati's prayer, Kama was given life again, though without a body.