குமரகுருபரர் வரலாறு, திருச்செந்தூர் மரபுஊமைக் குழந்தைக்குக் கவி தந்த செந்திலாண்டவன்
குமரகுருபரர் வரலாற்றிலிருந்து. பதினேழாம் நூற்றாண்டில் தாமிரபரணிக் கரையில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு குழந்தை பிறந்தது. ஐந்து வயதாகியும் அவன் ஒரு சொல்லும் பேசவில்லை. மனம் உடைந்த பெற்றோர் அவனைத் திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று, "அவனுக்குப் பேச்சு வரும் வரை இங்கேயே இருப்போம்" என்று முருகனிடம் வேண்டி விரதம் இருந்தனர்.
சில நாள்களில் குழந்தை வாய் திறந்தது. பேசியது மட்டுமல்ல, முருகன் மேல் ஒரு முழு நூலையே பாடியது. அதுவே கந்தர் கலிவெண்பா. அந்தக் குழந்தை பின்னாளில் குமரகுருபரர் என்ற பெரும் புலவராகி, காசி வரை சென்று தமிழையும் சைவத்தையும் பரப்பினார். "நாலு கவித் தியாகா" என்று அருணகிரிநாதர் போற்றும் முருகன், வேறொரு அடியாருக்கும் அதே கொடையைக் கொடுத்தான் என்பதற்கு இது சான்று.
Life of Kumaraguruparar, Thiruchendur traditionThe Mute Child Who Was Given Poetry
From the life of Kumaraguruparar. In the seventeenth century a child was born at Srivaikuntam on the banks of the Thamirabarani. He reached the age of five without speaking a single word. His heartbroken parents took him to Thiruchendur and vowed to Murugan, 'We will stay here until our son speaks.'
Within a few days the child opened his mouth. He did not merely speak; he sang a whole poem in praise of Murugan, the Kandar Kalivenba, which devotees still recite. That child grew up to be the great poet Kumaraguruparar, who travelled as far as Kashi, spreading Tamil and the Shaiva faith wherever he went.
The Lord whom Arunagirinathar praises as 'the generous giver of the four kinds of poetry' gave the same gift to another devotee, turning a silent child into a singer. Both poets began their songs with the grace of the Lord of Senthil.