சாந்தோக்கிய உபநிடதம், ஏழாம் அத்தியாயம்நாரதருக்கு சனத்குமாரர் சொன்ன பேரின்பம்
சாந்தோக்கிய உபநிடதத்திலிருந்து. நாரத முனிவர் சனத்குமாரரிடம் வந்து, "எனக்குக் கற்றுக் கொடுங்கள்" என்றார். "நீ கற்றதைச் சொல்" என்றார் சனத்குமாரர். நாரதர் நான்கு வேதங்கள், இதிகாசம், இலக்கணம், கணிதம், வானியல் என்று நீண்ட பட்டியல் சொல்லி, "இவ்வளவு கற்றும் நான் சொற்களை மட்டுமே அறிந்தவன்; ஆன்மாவை அறியவில்லை; துயரத்தில் இருக்கிறேன்" என்றார்.
சனத்குமாரர் படிப்படியாக அவரை உயர்த்தினார். இறுதியில் சொன்னார்: "எல்லையற்றதே இன்பம்; சிறியதில் இன்பம் இல்லை. எங்கே வேறொன்றைக் காணவில்லையோ, வேறொன்றைக் கேட்கவில்லையோ, வேறொன்றை அறியவில்லையோ, அதுவே எல்லையற்றது." உபநிடதம் முடியும் இடத்தில் ஒரு செய்தி சொல்கிறது: அந்த சனத்குமாரரையே "ஸ்கந்தன்" என்று அழைக்கிறார்கள். எல்லாம் அற்ற இன்பத்தை முதலில் உபதேசித்தவனும் கந்தனே.
Chandogya Upanishad, chapter 7Sanatkumara Teaches Narada the Infinite
From the Chandogya Upanishad. The sage Narada came to Sanatkumara and said, 'Teach me.' 'First tell me what you already know,' said Sanatkumara. Narada recited a long list: the four Vedas, the epics and histories, grammar, mathematics, the science of the stars and much more. Then he said, 'With all this I know only words. I do not know the Self, and I am full of sorrow.'
Step by step Sanatkumara led him higher, from name to speech, from mind to will, until he said: 'The infinite alone is joy. There is no joy in what is small. Where one sees nothing else, hears nothing else and knows nothing else, that is the infinite.'
At the very end the Upanishad adds a remarkable line: this Sanatkumara is the one people call Skanda. So the first teacher of the bliss in which everything else falls away was Kanda himself, the same Lord whom Arunagirinathar asks to tell of it in this verse.