பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

சண்முக கவசம்

Shanmuga Kavasam · 30 பாடல்கள்

பாம்பன் சுவாமிகள் அருளிய கவசம். உடலின் ஒவ்வொரு உறுப்பையும், எட்டுத் திசைகளையும், இரவு பகலின் ஒவ்வொரு பொழுதையும் முருகனின் ஒரு திருநாமத்திடமும் அவன் வேலிடமும் ஒப்படைத்துக் காக்க வேண்டும் முப்பது பாடல்கள்.

Pamban Swamigal's armour-hymn to Murugan. In thirty verses each limb of the body, each of the eight directions and each watch of the day and night is placed in the keeping of one of Murugan's names and of his vel.

பகிர்

பாடல்கள்

அறிமுகம்

சண்முக கவசம் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (1853-1929) அருளிய முப்பது பாடல்கள் கொண்ட கவச நூல்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அமைந்தது. முப்பது பாடல்களும் தமிழின் பன்னிரண்டு உயிரெழுத்துகளும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் வரிசையாக முதலில் வருமாறு அமைந்துள்ளன: அ, ஆ, இ என்று தொடங்கி ஔ வரை, பின் க, ங, ச என்று ன வரை. தலை, நெற்றி, கண், காது முதல் கால்விரல் வரை ஒவ்வொரு உறுப்பையும் முருகனின் ஒவ்வொரு திருநாமமும் காக்க வேண்டுகிறார். பின் பூதம், பேய், சூனியம், பகைவரின் ஆயுதங்கள், கொடிய விலங்குகள், நச்சுயிர்கள், பலவகை நோய்கள், எமதூதர் ஆகியவற்றிலிருந்து வேல் காக்க வேண்டுகிறார். எட்டுத் திசைகளிலும், இளமை முதல் முதுமை வரையும், காலை முதல் நள்ளிரவு வரையும் காவல் கேட்டு, கந்தர் அனுபூதி அருளிய அருணகிரிநாதரின் தலைவனும், இதைச் சொன்ன தாசனின் கடவுளும் வந்து காக்க என்று நிறைகிறது.

Introduction

Shanmuga Kavasam is a protective hymn of thirty verses by Pamban Kumaragurudasa Swamigal (1853-1929), in the six-foot asiriya viruttam metre. The verses open, in order, with the twelve Tamil vowels and then the eighteen consonants, from அ to ஔ and from க to ன. Limb by limb, from the head, brow, eyes and ears down to the toes, each part of the body is given into the care of one of Murugan's names. The hymn then asks the vel to guard against spirits, sorcery, the weapons of enemies, wild beasts, venomous creatures, a long list of illnesses, and the messengers of Yama. It asks for protection in all eight directions, through youth, manhood and old age, and through every watch from dawn to midnight, and closes by calling on the Lord of Arunagirinathar, who sang the Kandar Anubhuti, and on the god of the servant who sang this kavasam, to come and protect.