குருபரம்பரை · திருப்பாணாழ்வார் வரலாறுமுனிவர் தோளில் வந்த பாணர்
உறையூரில் நெல் வயலின் நடுவே ஒரு குழந்தை கண்டெடுக்கப்பட்டது. பாணர் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அதை எடுத்து வளர்த்தார். குழந்தை வளர்ந்து யாழ் மீட்டிப் பாடும் இசைவாணர் ஆனார். அவர் பாடியது எல்லாம் அரங்கனைப் பற்றியே. ஆனால் அக்காலச் சமூக வழக்கப்படி அவர் திருவரங்கத் தீவுக்குள் கால் வைக்கவில்லை. காவிரியின் தென்கரையில் நின்று, கோயில் கோபுரத்தைப் பார்த்தபடி, பகலும் இரவும் பாடுவார்.
ஒருநாள் விடியற்காலை, அரங்கனின் திருமஞ்சனத்துக்குக் காவிரி நீர் எடுக்க லோகசாரங்க முனிவர் குடத்தோடு வந்தார். பாணர் கண்மூடி இசையில் ஆழ்ந்திருந்தார்; வழியை விட்டு விலகவில்லை. முனிவர் கூப்பிட்டும் கேட்கவில்லை. முனிவர் ஒரு சிறு கல்லை எடுத்து எறிந்தார். அது பாணரின் நெற்றியில் பட்டு இரத்தம் வழிந்தது. கண் திறந்த பாணர், தாம் வழியை மறித்ததற்காக மன்னிப்புக் கேட்டு விலகினார்.
முனிவர் நீர் கொண்டு கோயிலுக்குள் சென்றபோது, அரங்கனின் நெற்றியிலிருந்து இரத்தம் வழிவதைக் கண்டு நடுங்கினார். அன்றிரவு அரங்கன் அவர் கனவில் தோன்றினான்: 'நீ கல்லெறிந்தது என் அடியவன் மீது. அவனை உன் தோளில் சுமந்து நம்மிடம் அழைத்து வா.' காலையில் முனிவர் பாணரிடம் ஓடிச் சென்று காலில் விழுந்தார். பாணர் மறுத்தார்: 'அடியேன் அரங்க நகருக்குள் கால் வைக்கத் தகாதவன்.' 'அப்படியானால் கால் வைக்க வேண்டாம்; என் தோளில் அமருங்கள்' என்று முனிவர் அவரைச் சுமந்து வந்தார்.
சன்னிதியில் அரங்கனைக் கண்டதும் பாணரின் வாயிலிருந்து பாசுரங்கள் பொங்கின. திருவடியில் தொடங்கி, ஆடை, உந்தி, வயிறு, மார்பு, கண்டம், வாய், கண்கள் என்று மேலே ஏறி, இறுதியில் 'என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே' என்று பாடி முடித்தார். அந்தக் கணமே அவர் அரங்கனின் திருவடியில் கலந்தார் என்பது மரபு. முனிவர் தோளில் வந்ததால் அவர் 'முனிவாகனர்' எனப்பட்டார். வேதம் ஓதிய முனிவர் பாணரைச் சுமந்ததுதான், இறைவன் முன் பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்பதற்கு வைணவம் காட்டும் சான்று.
From the Guruparamparai · the life of Thiruppan AzhvarThe minstrel who rode on a sage's shoulders
A child was found in the middle of a paddy field at Uraiyur and raised by a man of the panar, a community of wandering minstrels. The child grew into a musician who played the yazh and sang, and everything he sang was about Ranganatha. But by the custom of the time he never set foot on the island of Srirangam. He would stand on the south bank of the Kaveri, facing the temple tower, and sing day and night.
One dawn the sage Lokasaranga came with his pot to fetch Kaveri water for the Lord's sacred bath. The minstrel stood with his eyes closed, lost in music, and did not move out of the way. He did not hear the sage call. The sage picked up a small stone and threw it. It struck the minstrel's forehead and blood flowed. He opened his eyes, begged pardon for blocking the path, and stepped aside.
When the sage carried the water into the sanctum he saw blood flowing from Ranganatha's forehead and trembled. That night the Lord appeared in his dream: 'The stone you threw struck my devotee. Carry him on your shoulders and bring him to me.' At daybreak the sage ran to the minstrel and fell at his feet. The minstrel refused: 'I am not fit to set foot in the holy town.' 'Then do not set foot in it,' said the sage. 'Sit on my shoulders.' And he carried him in.
The moment he saw the Lord in the sanctum, the pasurams poured from him. Beginning at the feet, he rose to the garment, the navel, the waist, the chest, the throat, the lips and the eyes, and ended: 'the eyes that have seen my nectar will see nothing else.' Tradition says that in that instant he merged into the Lord's feet. Because a sage carried him he is called Munivahanar. That a Vedic sage carried a minstrel on his shoulders is the Sri Vaishnava tradition's own witness that before the Lord there is no high or low by birth.