சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
ராகம் - பூபாளம், தாளம் - சதுஸ்ர ஏகம்கையைச் சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசாதனைகள் யாவினையுங் கூடும் - கையைச்சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசக்தியுற்றுக் கல்வினையுஞ் சாடும்.கண்ணைச் சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசக்தி வழியினையது காணும் - கண்ணைச்சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசத்தியமும் நல்லருளும் பூணும்.செவி, சக்தி தனக்கே கருவி யாக்கு - சிவசக்திசொலும் மொழியது கேட்கும் - செவிசக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசக்தி திருப் பாடலினை வேட்கும்.வாய், சக்தி தனக்கே கருவி யாக்கு - சிவசக்தி புகழினையது முழங்கும் - வாய்சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசக்திநெறி யாவினையும் வழங்கும்.சிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும் - அதைச்சக்தி தனக்கே கருவி யாக்கு - சிவசக்திதிருச் சுவையினை நுகரும் - சிவசக்தி தனக்கே எமது நாக்கு.மெய்யைச் சக்தி தனக்கே கருவி யாக்கு - சிவசக்திதருந் திறனதி லேறும் - மெய்யைச்சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசாதலற்ற வழியினைத் தேறும்.கண்டம், சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசத்தமும் நல்லமுதைப் பாடும் - கண்டம்சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசக்தியுடன் என்றும் உறவாடும்.தோள், சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுதாரணியும் மேலுலகுந் தாங்கும் - தோள்சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசக்தி பெற்று மேருவென ஓங்கும்.நெஞ்சம், சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசக்தியுற நித்தம் விரிவாகும் - நெஞ்சம்சக்தி தனக்கே கருவி யாக்கு - அதைத்தாக்கவரும் வாளொதுங்கிப் போகும்.சிவ, சக்தி தனக்கே எமது வயிறு - அதுசாம்பரையும் நல்லவுண வாக்கும் - சிவசக்தி தனக்கே எமது வயிறு - அதுசக்திபெற உடலினைக் காக்கும்.இடை, சக்தி தனக்கே கருவி யாக்கு - நல்லசக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் - இடைசக்தி தனக்கே கருவி யாக்கு - நின்தன்சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும்.கால், சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசாடியெழு கடலையுந் தாவும் - கால்சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசஞ்சலமில் லாமலெங்கும் மேவும்.மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும் - மனம்சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசாத்துவிகத் தன்மையினைச் சூடும்.மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசக்தியற்ற சிந்தனைகள் தீரும் - மனம்சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசாரும் நல்ல உறுதியும் சீரும்.மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசக்திசக்தி சக்தியென்று பேசும் - மனம்சக்தி தனக்கே கருவி யாக்கு - அதில்சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும்.மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசக்தி நுட்பம் யாவினையும் நாடும் - மனம்சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசக்திசக்தி யென்றுகுதித் தாடும்.மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசக்தியினை எத்திசையும் சேர்க்கும் - மனம்சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுதான் விரும்பில் மாமலையைப் பேர்க்கும்.மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசந்ததமும் சக்திதனைச் சூழும் - மனம்சக்தி தனக்கே கருவி யாக்கு - அதுசாவுபெறும் தீவினையும் ஊழும்.மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு - எதைத்தான் விரும்பி னாலும்வந்து சேரும் - மனம்சக்தி தனக்கே உரிமை யாக்கு - உடல்தன்னிலுயர் சக்திவந்து சேரும்.மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு - இந்தத்தாரணியில் நூறுவய தாகும் - மனம்சக்தி தனக்கே கருவி யாக்கு - உன்னைச்சாரவந்த நோயழிந்து போகும்.மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு - தோள்சக்திபெற்று நல்ல தொழில் செய்யும் - மனம்சக்தி தனக்கே கருவி யாக்கு - எங்கும்சக்தியருள் மாரிவந்து பெய்யும்.மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு - சிவசக்தி நடையாவும் நன்கு பழகும் - மனம்சக்தி தனக்கே கருவி யாக்கு - முகம்சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும்.மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு - உயர்சாத்திரங்கள் யாவும் நன்கு தெரியும் - மனம்சக்தி தனக்கே கருவி யாக்கு - நல்லசத்திய விளக்குநித்தம் எரியும்.சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு - நல்லதாளவகை சந்தவகை காட்டும் - சித்தம்சக்தி தனக்கே உரிமை யாக்கு - அதில்சாரும்நல்ல வார்த்தைகளும் பாட்டும்.சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு - அதுசக்தியையெல் லோர்க்குமுணர் வுறுத்தும் - சித்தம்சக்தி தனக்கே உரிமை யாக்கு - அதுசக்திபுகழ் திக்கனைத்தும் நிறுத்தும்.சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு - அதுசக்திசக்தி யென்று குழலூதும் - சித்தம்சக்தி தனக்கே உரிமை யாக்கு - அதில்சார்வதில்லை அச்சமுடன் சூதும்.சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு - அதுசக்தியென்று வீணைதனில் பேசும் - சித்தம்சக்தி தனக்கே உரிமை யாக்கு - அதில்சக்திபரி மளமிங்கு வீசும்.சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு - அதுசக்தியென்று தாளமிட்டு முழக்கும் - சித்தம்சக்தி தனக்கே உரிமை யாக்கு - அதுசஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும்.சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு - அதுசக்திவந்து கோட்டைகட்டி வாழும் - சித்தம்சக்தி தனக்கே உரிமை யாக்கு - அதுசக்தியருட் சித்திரத்தில் ஆழும்.மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதுசங்கடங்கள் யாவையும் உடைக்கும் - மதிசக்தி தனக்கே உடைமை யாக்கு - அங்குசத்தியமும் நல்லறமும் கிடைக்கும்.மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதுசாரவரும் தீமைகளை விலக்கும் - மதிசக்தி தனக்கே உடைமை யாக்கு - அதுசஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்.மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதுசக்தி செய்யும் விந்தைகளைத் தேடும் - மதிசக்தி தனக்கே உடைமை யாக்கு - அதுசக்தியுறை விடங்களை நாடும்.மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதுதர்க்கமெனுங் காட்டிலச்சம் நீங்கும் - மதிசக்தி தனக்கே உடைமை யாக்கு - அதில்தள்ளி விடும் பொய்ந்நெறியும் நீங்கும்.மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதில்சஞ்சலத்தின் தீயவிருள் விலகும் - மதிசக்தி தனக்கே உடைமை யாக்கு - அதுசக்தியொளி நித்தமுநின் றிலகும்.மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதில்சார்வதில்லை ஐயமெனும் பாம்பு - மதிசக்தி தனக்கே உடைமை யாக்கு - அங்குதான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு.மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு - அதுதாரணியில் அன்பு நிலை நாட்டும் - மதிசக்தி தனக்கே அடிமை யாக்கு - அதுசர்வசிவ சக்தியினைக் காட்டும்.மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு - அதுசக்திதிரு வருளினைச் சேர்க்கும் - மதிசக்தி தனக்கே அடிமை யாக்கு - அதுதாமதப்பொய்த் தீமைகளைப் பேர்க்கும்.மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு - அதுசத்தியத்தின் வெல்கொடியை நாட்டும் - மதிசக்தி தனக்கே அடிமை யாக்கு - அதுதாக்கவரும் பொய்ப்புலியை ஓட்டும்.மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு - அதுசத்தியநல் லிரவியைக் காட்டும் - மதிசக்தி தனக்கே அடிமை யாக்கு - அதில்சாரவரும் புயல்களை வாட்டும்.மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு - அதுசக்திவிர தத்தையென்றும் பூணும் - மதிசக்திவிர தத்தை யென்றுங் காத்தால் - சிவசக்திதரும் இன்பமும்நல் லூணும்.மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு - தெளிதந்தமுதப் பொய்கையென ஒளிரும் - மதிசக்தி தனக்கே அடிமை யாக்கு - அதுசந்ததமும் இன்பமுற மிளிரும்.அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதுதன்னையொரு சக்தியென்று தேரும் - அகம்சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதுதாமதமும் ஆணவமும் தீரும்.அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதுதன்னையவள் கோயிலென் றுகாணும் - அகம்சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதுதன்னை யெண்ணித் துன்பமுற நாணும்.அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதுசக்தியெனும் கடலிலோர் திவலை - அகம்சக்தி தனக்கே உடைமை யாக்கு - சிவசக்தியுண்டு நமக்கில்லை கவலை.அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதில்சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும் - அகம்சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதுசக்திதிரு மேனியொளி ஜ்வலிக்கும்.சிவ, சக்தி என்றும் வாழி! என்று பாடு - சிவசக்தி சக்தி என்றுகுதித் தாடு - சிவசக்தி என்றும் வாழி! என்று பாடு - சிவசக்திசக்தி என்றுவிளை யாடு.
raakam - poopaalam, thaalam - sathusra aekam kaiyais sakthi thanakkae karuvi yaakku - athu saathanaikal yaavinaiyung kootum - kaiyais sakthi thanakkae karuvi yaakku - athu sakthiyurruk kalvinaiyunj saatum. kannais sakthi thanakkae karuvi yaakku - athu sakthi vazhiyinaiyathu kaanum - kannais sakthi thanakkae karuvi yaakku - athu saththiyamum nallarulum poonum. sevi, sakthi thanakkae karuvi yaakku - siva sakthisolum mozhiyathu kaetkum - sevi sakthi thanakkae karuvi yaakku - athu sakthi thirup paatalinai vaetkum. vaay, sakthi thanakkae karuvi yaakku - siva sakthi pukazhinaiyathu muzhangkum - vaay sakthi thanakkae karuvi yaakku - athu sakthineri yaavinaiyum vazhangkum. siva, sakthithanai naasi niththam mukarum - athais sakthi thanakkae karuvi yaakku - siva sakthithirus suvaiyinai nukarum - siva sakthi thanakkae emathu naakku. meyyais sakthi thanakkae karuvi yaakku - siva sakthitharun thiranathi laerum - meyyais sakthi thanakkae karuvi yaakku - athu saathalarra vazhiyinaith thaerum. kantam, sakthi thanakkae karuvi yaakku - athu saththamum nallamuthaip paatum - kantam sakthi thanakkae karuvi yaakku - athu sakthiyutan enrum uravaatum. thoal, sakthi thanakkae karuvi yaakku - athu thaaraniyum maelulakun thaangkum - thoal sakthi thanakkae karuvi yaakku - athu sakthi perru maeruvena oangkum. nenjam, sakthi thanakkae karuvi yaakku - athu sakthiyura niththam virivaakum - nenjam sakthi thanakkae karuvi yaakku - athaith thaakkavarum vaalothungkip poakum. siva, sakthi thanakkae emathu vayiru - athu saamparaiyum nallavuna vaakkum - siva sakthi thanakkae emathu vayiru - athu sakthipera utalinaik kaakkum. itai, sakthi thanakkae karuvi yaakku - nalla sakthiyulla santhathikal thoanrum - itai sakthi thanakkae karuvi yaakku - ninthan saathimurrum nallaraththil oonrum. kaal, sakthi thanakkae karuvi yaakku - athu saatiyezhu katalaiyun thaavum - kaal sakthi thanakkae karuvi yaakku - athu sanjalamil laamalengkum maevum. manam, sakthi thanakkae karuvi yaakku - athu sanjalangkal theernthorumai kootum - manam sakthi thanakkae karuvi yaakku - athu saaththuvikath thanmaiyinais sootum. manam, sakthi thanakkae karuvi yaakku - athu sakthiyarra sinthanaikal theerum - manam sakthi thanakkae karuvi yaakku - athu saarum nalla uruthiyum seerum. manam, sakthi thanakkae karuvi yaakku - athu sakthisakthi sakthiyenru paesum - manam sakthi thanakkae karuvi yaakku - athil saarnthirukkum nalluravum thaesum. manam, sakthi thanakkae karuvi yaakku - athu sakthi nutpam yaavinaiyum naatum - manam sakthi thanakkae karuvi yaakku - athu sakthisakthi yenrukuthith thaatum. manam, sakthi thanakkae karuvi yaakku - athu sakthiyinai eththisaiyum saerkkum - manam sakthi thanakkae karuvi yaakku - athu thaan virumpil maamalaiyaip paerkkum. manam, sakthi thanakkae karuvi yaakku - athu santhathamum sakthithanais soozhum - manam sakthi thanakkae karuvi yaakku - athu saavuperum theevinaiyum oozhum. manam, sakthi thanakkae karuvi yaakku - ethaith thaan virumpi naalumvanthu saerum - manam sakthi thanakkae urimai yaakku - utal thanniluyar sakthivanthu saerum. manam, sakthi thanakkae karuvi yaakku - inthath thaaraniyil nooruvaya thaakum - manam sakthi thanakkae karuvi yaakku - unnais saaravantha noayazhinthu poakum. manam, sakthi thanakkae karuvi yaakku - thoal sakthiperru nalla thozhil seyyum - manam sakthi thanakkae karuvi yaakku - engkum sakthiyarul maarivanthu peyyum. manam, sakthi thanakkae karuvi yaakku - siva sakthi nataiyaavum nanku pazhakum - manam sakthi thanakkae karuvi yaakku - mukam saarnthirukkum nallarulum azhakum. manam, sakthi thanakkae karuvi yaakku - uyar saaththirangkal yaavum nanku theriyum - manam sakthi thanakkae karuvi yaakku - nalla saththiya vilakkuniththam eriyum. siththam, sakthi thanakkae urimai yaakku - nalla thaalavakai santhavakai kaattum - siththam sakthi thanakkae urimai yaakku - athil saarumnalla vaarththaikalum paattum. siththam, sakthi thanakkae urimai yaakku - athu sakthiyaiyel loarkkumunar vuruththum - siththam sakthi thanakkae urimai yaakku - athu sakthipukazh thikkanaiththum niruththum. siththam, sakthi thanakkae urimai yaakku - athu sakthisakthi yenru kuzhaloothum - siththam sakthi thanakkae urimai yaakku - athil saarvathillai assamutan soothum. siththam, sakthi thanakkae urimai yaakku - athu sakthiyenru veenaithanil paesum - siththam sakthi thanakkae urimai yaakku - athil sakthipari malamingku veesum. siththam, sakthi thanakkae urimai yaakku - athu sakthiyenru thaalamittu muzhakkum - siththam sakthi thanakkae urimai yaakku - athu sanjalangkal yaavinaiyum azhikkum. siththam, sakthi thanakkae urimai yaakku - athu sakthivanthu koattaikatti vaazhum - siththam sakthi thanakkae urimai yaakku - athu sakthiyarut siththiraththil aazhum. mathi, sakthi thanakkae utaimai yaakku - athu sangkatangkal yaavaiyum utaikkum - mathi sakthi thanakkae utaimai yaakku - angku saththiyamum nallaramum kitaikkum. mathi, sakthi thanakkae utaimai yaakku - athu saaravarum theemaikalai vilakkum - mathi sakthi thanakkae utaimai yaakku - athu sanjalap pisaasukalaik kalakkum. mathi, sakthi thanakkae utaimai yaakku - athu sakthi seyyum vinthaikalaith thaetum - mathi sakthi thanakkae utaimai yaakku - athu sakthiyurai vitangkalai naatum. mathi, sakthi thanakkae utaimai yaakku - athu tharkkamenung kaattilassam neengkum - mathi sakthi thanakkae utaimai yaakku - athil thalli vitum poynneriyum neengkum. mathi, sakthi thanakkae utaimai yaakku - athil sanjalaththin theeyavirul vilakum - mathi sakthi thanakkae utaimai yaakku - athu sakthiyoli niththamunin rilakum. mathi, sakthi thanakkae utaimai yaakku - athil saarvathillai aiyamenum paampu - mathi sakthi thanakkae utaimai yaakku - angku thaan mulaikkum mukthivithaik kaampu. mathi, sakthi thanakkae atimai yaakku - athu thaaraniyil anpu nilai naattum - mathi sakthi thanakkae atimai yaakku - athu sarvasiva sakthiyinaik kaattum. mathi, sakthi thanakkae atimai yaakku - athu sakthithiru varulinais saerkkum - mathi sakthi thanakkae atimai yaakku - athu thaamathappoyth theemaikalaip paerkkum. mathi, sakthi thanakkae atimai yaakku - athu saththiyaththin velkotiyai naattum - mathi sakthi thanakkae atimai yaakku - athu thaakkavarum poyppuliyai oattum. mathi, sakthi thanakkae atimai yaakku - athu saththiyanal liraviyaik kaattum - mathi sakthi thanakkae atimai yaakku - athil saaravarum puyalkalai vaattum. mathi, sakthi thanakkae atimai yaakku - athu sakthivira thaththaiyenrum poonum - mathi sakthivira thaththai yenrung kaaththaal - siva sakthitharum inpamumnal loonum. mathi, sakthi thanakkae atimai yaakku - theli thanthamuthap poykaiyena olirum - mathi sakthi thanakkae atimai yaakku - athu santhathamum inpamura milirum. akam, sakthi thanakkae utaimai yaakku - athu thannaiyoru sakthiyenru thaerum - akam sakthi thanakkae utaimai yaakku - athu thaamathamum aanavamum theerum. akam, sakthi thanakkae utaimai yaakku - athu thannaiyaval koayilen rukaanum - akam sakthi thanakkae utaimai yaakku - athu thannai yennith thunpamura naanum. akam, sakthi thanakkae utaimai yaakku - athu sakthiyenum kataliloar thivalai - akam sakthi thanakkae utaimai yaakku - siva sakthiyuntu namakkillai kavalai. akam, sakthi thanakkae utaimai yaakku - athil sakthisiva naathaniththam olikkum - akam sakthi thanakkae utaimai yaakku - athu sakthithiru maeniyoli jvalikkum. siva, sakthi enrum vaazhi! enru paatu - siva sakthi sakthi enrukuthith thaatu - siva sakthi enrum vaazhi! enru paatu - siva sakthisakthi enruvilai yaatu.
பொருள்
இப்பாட்டு உடலின் ஒவ்வொரு உறுப்பையும், உள்ளத்தின் ஒவ்வொரு கருவியையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சக்திக்கு அர்ப்பணிக்கிறது. ஒவ்வொரு பத்தியும் 'இதைச் சக்தி தனக்கே கருவியாக்கு' என்று சொல்லி, அப்படிச் செய்தால் கிடைக்கும் பயனைச் சொல்கிறது.
உடல்: கையைச் சக்திக்குக் கருவியாக்கு - அது எல்லாச் சாதனைகளையும் செய்யும், கல்லையும் உடைக்கும். கண்ணைக் கருவியாக்கு - அது சக்தியின் வழியைக் காணும், உண்மையையும் அருளையும் அணியும். செவியைக் கருவியாக்கு - சிவசக்தி சொல்லும் மொழியைக் கேட்கும், அவள் பாடலை விரும்பும். வாயைக் கருவியாக்கு - அவள் புகழை முழங்கும், அவள் நெறிகளை வழங்கும். நாசி சிவசக்தியை நாளும் முகரும்; நாக்கு அவள் திருச்சுவையை நுகரும். மெய்யைக் கருவியாக்கு - சாவில்லாத வழியைத் தெளியும். கண்டம் (தொண்டை) இசையும் அமுதும் பாடும். தோள் பூமியையும் மேலுலகையும் தாங்கி மேருமலை போல ஓங்கும். நெஞ்சம் நாளும் விரிவடையும்; அதைத் தாக்க வரும் வாளும் ஒதுங்கிப் போகும். வயிறு சாம்பலையும் நல்ல உணவாக்கி உடலைக் காக்கும். இடை நல்ல சக்தியுள்ள சந்ததிகளைத் தரும்; உன் இனமே அறத்தில் ஊன்றும். கால் கொந்தளிக்கும் கடலையும் தாண்டி, கலக்கமின்றி எங்கும் செல்லும்.
மனம்: மனத்தைச் சக்திக்குக் கருவியாக்கினால் சஞ்சலம் தீர்ந்து ஒருமை கூடும்; சாத்துவிகத் தன்மையைச் சூடும்; சக்தியற்ற எண்ணங்கள் தீரும்; உறுதியும் சீரும் சேரும்; 'சக்தி சக்தி' என்று பேசிக் குதித்தாடும்; விரும்பினால் பெருமலையையும் பெயர்க்கும்; தீவினையும் ஊழும் அழியும்; விரும்பியது எதுவும் வந்து சேரும்; நூறு வயது வாழலாம்; நோய் அழியும்; சாத்திரங்கள் தெரியும்; உண்மை விளக்கு நாளும் எரியும்.
சித்தம்: சித்தத்தைச் சக்திக்கு உரிமையாக்கினால், அது தாளமும் சந்தமும் காட்டும்; நல்ல சொற்களும் பாட்டும் வரும்; எல்லோருக்கும் சக்தியை உணர்த்தும்; 'சக்தி' என்று குழல் ஊதும், வீணையில் பேசும்; அச்சமும் சூதும் அதை அணுகாது; சக்தி அங்கே கோட்டை கட்டி வாழ்வாள்.
மதி: அறிவைச் சக்திக்கு உடைமையாக்கினால், எல்லாச் சங்கடங்களையும் உடைக்கும்; உண்மையும் அறமும் கிடைக்கும்; தர்க்கம் என்னும் காட்டில் அச்சம் நீங்கும்; ஐயம் என்னும் பாம்பு அணுகாது; முக்தி விதை முளைக்கும். அதைச் சக்திக்கு அடிமையாக்கினால் உலகில் அன்பை நிலைநாட்டும்; உண்மையின் வெற்றிக் கொடியை நாட்டும்; பொய் என்னும் புலியை ஓட்டும்; தெளிந்த அமுதக் குளம் போல ஒளிரும்.
அகம்: 'நான்' என்பதைச் சக்திக்கு உடைமையாக்கினால், அது தன்னையே ஒரு சக்தி என்று உணரும்; தாமதமும் ஆணவமும் தீரும்; தன்னை அவள் கோயில் என்று காணும்; தான் சக்தி என்னும் கடலில் ஒரு துளி என்று அறியும். சிவசக்தி இருக்கும்போது நமக்குக் கவலை இல்லை.
இறுதியில்: 'சிவசக்தி என்றும் வாழ்க!' என்று பாடு; 'சக்தி சக்தி' என்று குதித்தாடு, விளையாடு.
Meaning
This song offers every limb of the body and every faculty of the inner being, one after another, to Shakti. Each stanza says 'make this an instrument for Shakti alone', and then tells what follows.
The body. Make the hand Shakti's instrument and it will accomplish every task and break even stone. Make the eye her instrument and it will see Shakti's path and wear truth and grace. Make the ear her instrument and it will hear the words Shiva-Shakti speaks and long for her songs. Make the mouth her instrument and it will thunder her glory and give out all her ways. The nose will breathe in Shiva-Shakti daily; the tongue will taste her sacred sweetness. Make the body her instrument and it will find the way that has no death. The throat will sing music and nectar. The shoulders will bear the earth and the upper worlds and rise like Mount Meru. The heart will widen every day, and the sword that comes to strike it will turn aside. The belly will turn even ash into good food and guard the body. The loins will bring forth good, strong offspring, and your whole people will be rooted in dharma. The feet will leap even the surging sea and go everywhere without wavering.
The mind. Make the mind Shakti's instrument and its wavering will end and it will become one-pointed; it will wear the sattvic nature; powerless thoughts will vanish; firmness and order will come; it will say 'Shakti, Shakti' and leap and dance; if it wishes it will uproot a great mountain; evil deeds and fate will die; whatever it wants will come; you will live a hundred years and disease will perish; the shastras will be clear and the lamp of truth will burn every day.
The inner mind, chittam. Make it Shakti's own and it will show rhythm and metre; good words and songs will come; it will make everyone aware of Shakti; it will play 'Shakti' on the flute and speak it on the veena; fear and deceit will not come near; Shakti will build a fort and live there.
The intellect. Make it Shakti's possession and it will break every trouble; truth and dharma will be found; fear will leave the forest of argument; the snake of doubt will not come near; the seed of liberation will sprout. Make it her servant and it will establish love on earth, plant the victorious flag of truth, drive away the tiger of falsehood, and shine like a clear pool of nectar.
The self, the 'I'. Make it Shakti's possession and it will know itself as a Shakti; sloth and ego will end; it will see itself as her temple; it will know it is one drop in the ocean called Shakti. While there is Shiva-Shakti, we have no worry.
And at the end: sing 'Long live Shiva-Shakti!'; leap and dance and play, crying 'Shakti, Shakti'.
சொற்பொருள் Word by word
- ஆத்ம சமர்ப்பணம்
- offering of the self
- கருவி
- instrument
- சாடுதல்
- to strike, smash
- முகர்தல்
- to smell, breathe in
- கண்டம்
- throat
- மேரு
- Mount Meru, the axis of the world
- சாத்துவிகம்
- sattvic, pure and balanced
- சித்தம்
- the inner mind, memory and feeling
- மதி
- intellect
- திவலை
- drop
- தாமதம்
- tamas, sloth
விளக்கம்
இது தெய்வப் பாடல்களிலேயே மிக நீண்ட அர்ப்பணப் பாட்டு. அமைப்பு மிகத் தெளிவானது: முதலில் புற உறுப்புகள் (கை, கண், செவி, வாய், நாசி, நாக்கு, மெய், கண்டம், தோள், நெஞ்சு, வயிறு, இடை, கால்), பிறகு உள் கருவிகள் (மனம், சித்தம், மதி, அகம்). இது வேதாந்தம் சொல்லும் அந்தக்கரணம் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் - என்ற நான்கின் வரிசை.
சொற்களும் படிப்படியாக மாறுகின்றன: உறுப்புகளைக் 'கருவியாக்கு'; சித்தத்தை 'உரிமையாக்கு'; மதியை 'உடைமையாக்கு', பின் 'அடிமையாக்கு'; அகத்தை 'உடைமையாக்கு'. அர்ப்பணம் ஆழமாக ஆழமாக உரிமை முழுதும் சக்திக்கே போகிறது.
கடைசியில் அகம் 'தன்னையொரு சக்தியென்று தேரும்', 'சக்தியெனும் கடலிலோர் திவலை' என்று அறியும். இதுவே பாரதியின் யோகம்: தன்னை அழிப்பதல்ல, தன்னை முழுதும் சக்திக்குக் கொடுத்து, தானே சக்தியின் கருவியாக, பின் சக்தியின் துளியாக மாறுவது. கீதையின் 'எல்லாச் செயலையும் எனக்கே அர்ப்பணி' என்ற கருத்தின் தமிழ் விரிவு இது.
Explanation
This is the longest song of self-offering in Deiva Padalgal, and its plan is very clear. First come the outer organs: hand, eye, ear, mouth, nose, tongue, body, throat, shoulders, heart, belly, loins, feet. Then come the inner faculties: mind, chittam, intellect and the self. These last are the four of the antahkarana in Vedanta: manas, buddhi, chitta and ahankara.
The verbs change step by step too. The organs are to be made her 'instrument'; the chittam her 'own'; the intellect her 'possession' and then her 'servant'; the self her 'possession'. As the offering goes deeper, ownership passes wholly to Shakti.
At the end the self 'knows itself as a Shakti' and knows it is 'one drop in the ocean called Shakti'. This is Bharathiyar's yoga: not destroying the self, but giving it wholly to Shakti so that it becomes her instrument and then a drop of her. It is a Tamil unfolding of the Gita's teaching, 'offer every action to me'.
சிந்தனைக்கு
உங்கள் உடலில் அல்லது மனத்தில் எந்த ஒரு 'கருவியை' இன்றிலிருந்து நல்லதற்கு மட்டும் அர்ப்பணிக்கலாம்?
To reflect on
Which one 'instrument' of your body or mind could you offer, from today, only to what is good?