poem 60 · Purananuru · Many poets

புறநானூறு 60 · மதியும் குடையும் · உறையூர் மருத்துவன் தாமோதரனார்

குடை புறப்பட்டதெனக் இருதித் தொழுதேம் என்று .முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்,செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்உச்சி நின்ற உவவுமதி கண்டு,கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த,சில் வளை விறலியும், யானும், வல்விரைந்து,தொழுதனம் அல்லமோ, பலவே! கானல்கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்,வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன்,வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்மாலை வெண்குடை ஒக்குமால் எனவே?

Kutai purappattathenak iruthith thozhuthaem enru . / Munneer naappan thimilsutar poalas, / Semmeen imaikkum maaka visumpin / Ussi ninra uvavumathi kantu, / Katsi manjnjaiyin suramuthal saerntha, / Sil valai viraliyum, yaanum, valvirainthu, / Thozhuthanam allamoa, palavae! kaanal / Kazhiuppu mukanthu kalnaatu matukkum / Aarais saakaattu aazhssi poakkum / Uranutai noanpakattu anna engkoan, / Valan irangku murasin vaayvaal valavan, / Veyilmaraik konta urukezhu sirappin / Maalai venkutai okkumaal enavae?

Share
கதை

மதியும் குடையும் · உறையூர் மருத்துவன் தாமோதரனார்

திணை: பாடாண் · துறை: குடை மங்கலம் · பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன்