ப்ரொஜக்ட் மதுரைப் பதிப்புநூல் பற்றி
அகநானூற்றின் காட்சிகள் எல்லாம் ஒரே காதலைப் பல கோணங்களில் காட்டுகின்றன. வழி நீளும் பாலையில் தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான்; குறிஞ்சியில் இரவின் களவும் மலைநாடன் அறிமுகமும்; மருத்தில் பரத்தைமையால் வந்த ஊடலும் தோழியின் தூதும்; முல்லையில் இரவு காத்திருக்கும் தலைவியும் விடியலும்; நெய்தலில் கடற்கரையும் பிரிவும் மீட்சியும்.
புளியங்கொம்பு பற்றிய புராணக் கதை முதல் கடற்கரை வணிகம் வரை, வாழ்வின் பொருட்களெல்லாம் இப்பாடல்களில் வருகின்றன. இருநூற்றுக்கும் மேற்பட்ட புலவர்கள் பாடியுள்ளனர் — சேர, சோழ, பாண்டிய நாடுகளின் குரல்கள் ஒரே தொகுப்பில் கலக்கின்றன.
The Project Madurai editionAbout the book
Every scene in the Akananuru is one love seen from another side. On the long desert road the lover talks to his own heart; in the hills there is the secret night and the meeting with the hill chief; in the fields, a quarrel over a rival and the friend’s embassy; in the forest, the woman keeping the night and the dawn that ends it; on the shore, the sea, parting, and return.
From the tale told at a tamarind tree to the sea trade of the coast, everything a life is made of passes through these poems, in the voices of more than two hundred poets from the Chera, Chola and Pandya countries.