பாலை · பாலைபாடிய பெருங்கடுங்கோ
உடன் போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது, · பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடியது
வாள்வரி வயமான் கோளுகிர் அன்னசெம்முகை யவிழ்ந்த முண்முதிர் முருக்கின்சிதரார் செம்மல் தாஅய் மதரெழில்மாணிழை மகளிர் பூணுடை முலையின்முகைபிணி அவிழ்ந்த கோங்கமொ டசைஇநனைஅதிரல் பரந்த அந்தண் பாதிரிமராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்அணங்குடை நகரின் மணந்த பூவின்நன்றே கானம் நயவரும் அம்மகண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தைஅடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின்பிடிமிடை களிற்றில் தோன்றும்குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தே.
உடன் போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது, · பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடியது