poem 95 · Akananuru · Many poets

அகநானூறு 95 · பாலை · ஒரோடோகத்துக் கந்தரத்தனார்

பைபயப் பசந்தன்று நுதலுஞ் சாஅய்ஐதா கின்றென் தளிர்புரை மேனியும்பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்எவனோ வாழி தோழி பொரிகால்பொகுட்டரை யிருப்பைக் குவிகுலைக் கழன்றஆலி யொப்பின் தூம்புடைத் திரள்வீஆறுசெல் வம்பலர் நீளிடை யழுங்கஈனல் எண்கின் இருங்கிளை கவரும்சுரம்பல கடந்தோர்க் கிரங்குப என்னார்கௌவை மேவல ராகி இவ்வூர்நிரையப் பெண்டிர் இன்னா கூறுவபுரைய அல்லஎன் மகட்கெனப் பரைஇநம்முணர்ந் தாறிய கொள்கைஅன்னை முன்னர்யாம் என்னிதற் படலே.
Share
கதை

பாலை · ஒரோடோகத்துக் கந்தரத்தனார்

போக்குடன் பட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது. · ஒரோடோகத்துக் கந்தரத்தனார் பாடியது