poem 97 · Akananuru · Many poets

அகநானூறு 97 · பாலை · மாமூலனார்

கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலைவறனுறல் அங்கோ டுதிர வலங்கடந்துபுலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடைஇரவுக்குறும் பலற நூறி நிரைபகுத்திருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்கொலைவில் ஆடவர் போலப் பலவுடன்பெருந்தலை யெருவையொடு பருந்துவந் திருக்கும்அருஞ்சுரம் இறந்த கொடியோர்க் கல்கலும்இருங்கழை இறும்பின் ஆய்ந்துகொண் டறுத்தநுணங்குகண் சிறுகோல் வணங்கிறை மகளிரோடகவுநர்ப் புரந்த அன்பின் கழல்தொடிநறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான்வயலை வேலி வியலூர் அன்னநின்அலர்முலை யாகம் புலம்பப் பலநினைந்தாழேல் என்றி தோழி யாழவென்கண்பனி நிறுத்தல் எளிதோ குரவுமலர்ந்தற்சிர நீங்கிய அரும்பத வேனில்அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத்துறையணி மருது தொகல்கொள வோங்கிக்கலிழ்தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்திணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப்புகைபுரை அம்மஞ் சூரநுகர்குயில் அகவும் குரல்கேட் போர்க்கே.
Share
கதை

பாலை · மாமூலனார்

வற்புறுந்துந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. · மாமூலனார் பாடியது